கிழக்கின் கல்வி பின்னடைவு தொடர்பில் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு

0 164

கிழக்கு மாகாண கல்வி பின்­ன­டைவு தொடர்­பாக யுனிசெப் அமைப்­புடன் இணைந்து ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

இதன் முதற்­கட்­ட­மாக கல்­வி­ய­மைச்சு மட்டம், கல்வித் திணைக்­கள மட்டம், கிழக்கு மாகாண திட்­ட­மிடல் செய­லக மட்டம், பிர­தம செய­லாளர் மட்டம் என நான்கு பிர­தான மட்­டங்­களில் கலந்­து­ரை­யா­டல்கள் கடந்த வாரம் இடம்­பெற்­றுள்­ளன.

இத­னைத்­த­விர பின்­ன­டை­வுள்ள வல­யங்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­வற்றுள் கிண்­ணியா கல்வி வலய மட்­டத்­தி­லான கலந்­து­ரை­யா­டலும் இடம்­பெற்­றுள்­ளது. இதன் அடிப்­ப­டையில் சில விட­யங்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளன. தற்­போ­துள்ள பல­வீ­னங்­களை நிவர்த்­திப்­பது தொடர்­பான நட­வ­டிக்­கைகள் குறித்தும் கலந்­து­ரை­யாடப் பட்­டுள்­ளன. கல்விப் பின்­ன­டை­வுக்­கான காரணம், அதனை நிவர்த்­திப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் போன்­றன தொடர்­பான ஆய்­வுகள் மிக விரைவில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. 

குறுங்­கால திட்டம், இடைக்­க­லத்­திட்டம், நீண்ட காலத்திட்டம் என்ற அடிப்படையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.