நாட்டை பிளவுபடுத்தி ஆட்சிபீடமேற முயற்சி

0 246

நாட்டில் எத்­தனை வளங்கள் இருந்­தாலும் உள்­நாட்டில் மக்­க­ளுக்­கி­டையில் ஒற்­றுமை இன்றேல் நாடு ஸ்திர­மற்ற தன்­மைக்­குள்­ளாகும். ஒற்­று­மைக்கு பிர­தான தடை­யாக இருப்­பது எமக்­கி­டையே உள்ள பேதங்­க­ளாகும். நாட்டைப் பிள­வு­ப­டுத்­தி­யா­வது ஆட்சி செய்ய முயற்­சிப்­பதும் நாடு ஸ்திர­மற்ற தன்­மைக்குக் கார­ண­மாகும் என வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

நேற்று மாலை கொழும்பில் இடம்­பெற்ற முன்னாள் சபா­நா­யகர் மர்ஹூம் பாக்கிர் மாக்­காரின் 22 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில்,

‘இனம் மதங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்தி எம்மால் ஏன் ஸ்திர­மான நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது என்­ப­தனை நாம் சிந்­தித்துப் பார்க்க வேண்டும். மதங்­க­ளுக்­கி­டை­யிலும் இனங்­க­ளுக்­கி­டை­யிலும் மக்­க­ளுக்­கி­டை­யிலும் பிள­வு­களை ஏற்­ப­டுத்தி நாட்டை தீயிட்­டா­வது ஆட்சி செய்ய சிலர் முயற்­சிக்­கின்­றனர்.

சாதி, மத பேதங்­க­ளினால் நாட்டில் அழி­வு­களே ஏற்­படும். நாட்டில் இடம்­பெற்ற கறுப்பு ஜூலை, பேரு­வளை அளுத்­கம சம்­ப­வங்கள் அழி­வு­க­ளையே ஏற்­ப­டுத்­தின. ஏனைய மதங்கள், இனங்­க­ளுடன் பேதங்­க­ளுடன் வாழும் போதே இவ்­வா­றான சம்­ப­வங்கள் நிகழ்­கின்­றன. மதங்­களை அழிப்­பதன் மூலம் ஓர் இனத்தை துன்­பங்­க­ளுக்கு உள்­ளாக்­கு­வதன் மூலம் நாட்டின் தேசிய பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்த முடி­யாது.

இனங்­க­ளுக்­கி­டை­யிலும் மதங்­க­ளுக்­கி­டை­யிலும் நல்­லி­ணக்­கத்­தையும் ஒற்­று­மை­யையும் கட்­டி­யெ­ழுப்­பு­வதன் மூலமே ஸ்திர­மான நாட்டை உரு­வாக்க முடியும். நாடு ஸ்திர­மா­னாலே முழு உல­கமும் இங்கு முத­லீ­டு­களைச் செய்யும்.
பயங்­க­ர­வா­தத்தை எம்மால் இல்­லாமல் செய்­வ­தற்கு உளவுப் பிரிவு உள்­ளது. உளவுப் பிரிவின் மூலம் புதிய பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டித்து புதிய நாட்டை கட்­டி­யெ­ழுப்­பலாம்.

எமது மனது தூய்­மைப்­பட வேண்டும். 2 மாதங்­களில் நாம் சரி­யான தீர்­மானம் மேற்­கொண்டு புதிய நாட்டை உரு­வாக்­குவோம்.

எமது நாட்டின் சௌபாக்­கியம் அனைத்து மக்­க­ளுக்கும் சரி­யாகச் சென்­ற­டை­ய­வில்லை. இதனை புள்ளி விபரத் திணைக்­க­ளத்தின் புள்­ளி­வி­ப­ரங்­களின் மூலம் அறிய முடி­கி­றது.

நாட்டின் தேசிய வரு­மா­னத்தில் 55 வீதத்தை அனு­ப­விப்­பது 20 வீத­மான பணக்­கார்­களே ஆவார்கள். 4 பேர் அடங்­கிய குடும்பம் ஒன்­றுக்கு உணவு மற்றும் உணவு அல்­லாத செல­வு­க­ளுக்கு மாதம் குறைந்­தது 55 ஆயிரம் ரூபா தேவைப்­ப­டு­வ­தாக புள்ளி விபரம் தெரி­விக்­கி­றது.

உலக வங்கி அறிக்­கையின் படி 45 வீத­மான குடும்­பங்கள் தினம் 5 டொலர்­க­ளையே வரு­மா­ன­மாகப் பெறு­கின்­றன. இது மாதம் 27—–30 ஆயிரம் ரூபா­வுக்கு உட்­பட்ட தொகை­யாகும்.

இதன் மூலம் நாட்டின் சௌபாக்­கியம் சகல மக்­க­ளுக்கும் சம­மாகச் சென்­ற­டை­ய­வில்லை என்­பது தெளி­வா­கி­றது.

பல­மான நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். சிலர் வளங்கள் தமது சம­யத்தை, தமது மக்­களை மாத்­திரம் சென்­ற­டைய வேண்­டு­மென நினைக்­கின்­றனர்.

இரா­ணுவ பலம், பாது­காப்பு பலம், பொரு­ளா­தார பலம், அர­சியல் பலம் அனைத்தும் நாடு முழு­வதும் வியா­பிக்க வேண்டும்.். சென்றடைய வேண்டும். இது ஒரு சமயத்தை, ஒரு இனத்தை மாத்திரம் சென்றடையக் கூடாது. ஸ்திரமான நாடு உருவாக்கப்பட்டு சாதி, மத, நிறம், குல பேதமின்றி தேசிய பலன்கள் அனைவராலும் அனுபவிக்கப்பட வேண்டும். புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்’ என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.