முஸ்லிம் தனித்துவ அரசியல் கிழக்குக்கு வெளியே பங்களித்து என்ன?

0 1,228

சோனக இஸ்­லா­மிய கலா­சார நிலை­யத்தின் 75 ஆவது ஆண்டு பவ­ள­விழா அண்­மையில் நிகழ்ந்­த­போது கேட்­டது என்ன? முன்பு பெரும்­பான்மை –சிறு­பான்மை சது­ரங்க விளை­யாட்டில் முஸ்­லிம்கள் போடு காய்­க­ளாகப் பாவிக்­கப்­பட்­ட­தா­கவும் நாட்டின் தூரப்­பி­ர­தே­சங்­களில் தனி­யா­கவும் ஓர­மா­கவும் கஷ்­டத்­தோடு துரு­வப்­ப­டுத்­தப்­பட்டு வாழ்ந்­த­தா­கவும் அந்­நி­லை­யில்தான் சேர் ராசிக் பரீத் குரல் கொடுத்­த­தா­கவும் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கூறி­யி­ருக்­கிறார். முன்னாள் கொழும்பு நக­ரா­தி­பதி உமர் காமில் தலைமை வகித்த இந்­நி­கழ்வு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச ஞாப­கார்த்த மண்­ட­பத்தில் 2019 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 4 ஆம் திகதி இடம்­பெற்­றி­ருந்­தது. அப்­போது சேர். ராசிக் பரீதின் பாரா­ளு­மன்ற உரைகள் என்னும் ஒரு நூலும் வெளி­யி­டப்­பட்­டது. இக்­கூட்­டத்தில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய அதி­தி­யா­கவும் த.தே.கூ. தலைவர் சம்­பந்தன், மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், ம.ஐ.மு. தலைவர் தினேஷ் குண­வர்­தன ஆகியோர் பிர­மு­கர்­க­ளா­கவும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

மேலும் ரவூப் ஹக்கீம் குறிப்­பி­டு­கையில்;

சேர். ராசிக் பரீத் கால­னித்­து­வத்தின் போது மட்­டு­மல்ல, சுதந்­திரம் கிடைத்­ததன் பின்பும் கூட முஸ்­லிம்­களின் அபி­லா­சை­களைப் பிர­தி­ப­லிப்­ப­வ­ரா­கவே விளங்­கினார். இவர் எம்.பி. யாகவும் செனட்­ட­ரா­கவும் நீண்ட சேவை செய்­தி­ருக்­கிறார் எனவும் கூறினார். பின்­வரும் இவ­ரது தர­வுகள் பய­னுள்­ள­வை­யாக இருந்­தன.

· 1893 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி செல்வம் மிக்க குடும்­பத்தில் பிறந்த ராசிக் பரீத் சமூக அந்­தஸ்தும் செல்­வமும் பெற்­றி­ருந்தார்.

· 1915 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனக் கல­வ­ரத்தின் போதும் முதலாம் உலகப் போரின்­போதும் சேர். ராசிக் பரீத் கொழும்பு காவற்­ப­டையில் லெப்­டினன்ட் ஆக இருந்தார்.

· அவர், கொழும்பு ரோயல் கல்­லூ­ரியின் மாணவர்.

· சேர். ராசிக் பரீத் பின்­நாட்­களில் முன்னாள் பிர­த­மர்­க­ளான டி.எஸ். சேனா­நா­யக்க, டட்லி சேன­நா­யக்க, சேர் .ஜோன். கொத்­த­லா­வல, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க, ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க ஆகி­யோ­ருடன் நல்­லு­றவு கொண்­டி­ருந்தார்.

· அவர் தீவிர அர­சி­ய­லி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற பின் இலங்­கைக்­கான தூத­ராகப் பாகிஸ்­தா­னுக்கு அனுப்­பப்­பட்டார்.

· அவரது தந்­தை­யான ஹொன­ரபல் அப்துர் ரஹ்மான் பாரா­ளு­மன்ற முறை உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­பி­ருந்த சட்ட நிர்­ணய சபையின் அங்­கத்­த­வ­ராக இருந்­தி­ருக்­கிறார்.

· சேர். ராசிக் பரீதின் பாட்­ட­னா­ரான அரசி மரைக்கார் வாப்­பிச்சி மரைக்கார் பின்­வரும் சேவை­களைச் செய்­தி­ருக்­கிறார்.

· அவர் தலை­சி­றந்த கட்­டடக் கலை­ஞ­ராகத் திகழ்ந்து ஆங்­கி­லேயே அர­சுக்கே கொழும்பில் பல அரச கட்­ட­டங்­களைக் கட்டிக் கொடுத்­தி­ருக்­கிறார். அவற்றில் தேசிய நூத­ன­சாலை இன்­ற­ளவும் போற்­றப்­ப­டு­கி­றது. அவை கால­னித்­துவக் காலத்தின் நினைவுச் சின்­னங்­க­ளா­கவும் கரு­தப்­ப­டு­கின்­றன. இவரே கொழும்பு ஸாஹி­ராக கல்­லூ­ரி­யையும் ஸ்தாபித்­தி­ருந்தார்.

· சேர். ராசிக் பரீத் பம்­ப­லப்­பிட்டி முஸ்லிம் மகளிர் கல்­லூ­ரியை ஆரம்­பித்து பெண் கல்வி மேம்­பாட்­டுக்­காக நிலத்­தையும் அன்­ப­ளித்தார்.

· சேர். ராசிக் பரீத் கொழும்­புவாழ் வறிய மக்­க­ளுக்­கென மகப்­பேற்று நிலை­யங்­க­ளையும் மருத்­து­வ­ம­னை­க­ளையும் நிறு­வினார்.

· கால­னித்­து­வத்தின் போதும் சுதந்­தி­ரத்தின் பின்பும் தேசிய நல்­லி­ணக்­கத்­துக்கும் சேர். ராசிக் பரீத் பாடு­பட்­ட­தோடு தனது சமூக தனித்­துவ அடை­யா­ளத்­தையும் கலா­சார விழு­மி­யங்­க­ளையும் பேணிக்­காப்­ப­திலும் அதிக கவனம் செலுத்­தினார்.

· சேர். ராசிக் பரீத் 1930 ஆம் ஆண்டு கொழும்பு மாந­கர சபை உறுப்­பி­ன­ராகி நகர அபி­வி­ருத்­திக்குப் பெரிதும் பங்­க­ளித்தார்.

· சேர். ராசிக் பரீத் வாழ்வில் தனக்­கெ­னவும் குறிக்­கோள்­களைக் கொண்­டி­ருந்­ததால் கால­னித்­துவ விடு­த­லை­யா­ளர்­க­ளோடு சேர்ந்து தேசப்­பற்­றா­ளர்­க­ளோடு இருந்­த­போதும் முஸ்லிம் சமூக அர­சியல் செல் நெறியை வகுப்­பதில் ஓர­ளவு முன்­னே­றியும் இருந்தார்.

· சேர். ராசிக் பரீத், கிழக்கு மாகாண அர­சி­யலில் கரி­சனை கொண்­டி­ருந்­ததால் தான் கல்­கு­டாவில் 40 வீத முஸ்­லிம்­களும் இரட்டைத் தொகு­தி­யான மட்­டக்­க­ளப்பில் 25 வீத முஸ்­லிம்­களும் இருப்­பார்­க­ளாயின் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் மகிழ்­வோடு இருப்­பார்கள் எனவும் அவர் ஒரு நூலில் எழு­தி­யி­ருந்தார்.

· அக்­கா­லத்தில் சோனகர் சங்­கத்­துக்கும் முஸ்லிம் லீக்­குக்கும் அர­சியல் போட்­டி­யி­ருக்­கையில் சேர். ராசிக் பரீத் சிங்­கள மொழி அரச கரும மொழி­யாக ஆக்­கப்­படும் சட்­டத்தை ஆத­ரிக்கக் காரணம் பற்றி ஓர் இந்­திய சமூ­க­வி­ய­லாளர் இவ்­வாறு கூறு­கிறார். அதா­வது சிங்­கள தேசி­ய­வாத நிகழ்ச்சி நிரல் அப்­போது இருந்­தது. வச­தி­க­ளோடு அர­சி­யலில் தீவிர ஈடு­பாடும் கொண்­டி­ருந்த முஸ்­லிம்கள் சிங்­கள மொழி பேசப்­படும் பிர­தே­சங்­களில் வாழ்ந்து வந்­த­த­தா­லேயே சேர். ராசிக் பரீத் அரச கரும மொழி­யாக சிங்­க­ளத்தை ஆத­ரித்­தி­ருந்தார் என்­கிறார் என்­றெல்லாம் ரவூப் ஹக்கீம் குறிப்­பிட்டார்.

மீலாத் தினத்தை விடு­முறை நாளாக்க சேர். ராசிக் பரீத் இவ்­வாறு அர­சிடம் கோரிக்கை விடுத்தார். மன்­னிக்­கவும் நான் அன்று இங்கு இருக்­க­வில்லை. பௌத்தர் 12 நாட்­களை மேல­திக விடு­முறை நாட்­க­ளாகப் பெறு­கையில் மீலாத் விடு­முறை மறுக்­கப்­பட்டி ருக்­கி­றது. பௌத்­தரின் உரி­மை­க­ளுக்கு நான் எதி­ராவன் அல்ல. நீங்கள் முஸ்­லிம்­களின் உரி­மை­களைப் பறிக்­கா­தீர்கள். இந்­நாட்டின் 6 இலட்ச முஸ்­லிம்­க­ளுக்கும் அடிப்­படை உரி­மைகள் வழங்­கப்­பட வேண்டும். இது சுதந்­திர நாடு. நாம் சுதந்­திரம் பெற்­ற­வர்­க­ளா­கவே எமது வாக்­கு­களை வழங்­கி­யி­ருந்தோம் என்றார்.

· சேர். ராசிக் பரீத் வார்த்­தையில் மாறு­பாடு செய்­த­வ­ரல்ல. இந்­திய வம்­சா­வளி முஸ்லிம் என்­பதை விடுத்து சோனகர் என்னும் அடை­யா­ளத்­தையே முன்­னி­லைப்­ப­டுத்­தினார். இதைக் கரை­யோர முஸ்­லிம்கள் என்றே குறிப்­பிட்­டி­ருந்தார்.

· சோனகர் என்னும் சொற்­ப­தத்தில் சேர். ராசிக் பரீத் பிடி­வா­த­மாக இருந்தார்.

· குறு­கிய பழங்­கு­டி­வாத சிந்­த­னைக்கு எதி­ரான கருத்­து­களே சேர். ராசிக் பரீதின் பாரா­ளு­மன்ற உரை­களில் இருந்­தன.

· ஒரு முறை சேர் ராசிக் பரீத் பிர­தமர் டட்­லிக்கும் கூட சவால் விட்­டி­ருந்தார். இங்கு எவ­ரேனும் உறுப்­பி­னர்கள் தமது தந்­தை­யரின் பிறப்புச் சான்­றி­தழ்­களைத் தர முடி­யுமா என அவர் கேட்­டதும், பிர­தமர் டட்லி முடி­யாது எனக் கூறி­விட்டார். உடனே அவர் பிர­தமர் டட்­லி­யிடம் காலஞ்­சென்ற பிர­தமர் டி.எஸ். சேனா­நா­யக்­க­விடம் அவ­ரது பிறப்புச் சான்­றிதழ் இருந்­ததா எனவும் கேட்டார்.

· பின்னர் இல்லை. அது எக்குத் தெரியும் இங்­குள்­ளோரை விட சொலமன் டயஸ் பண்­டா­ர­நா­யக்­க­வையும் எனக்குத் தெரியும். இவர்கள் எவ­ரி­டமும் பிறப்புச் சான்­றி­தழ்கள் இருக்­க­வில்லை. பிர­ஜா­வு­ரிமை மசோதா கொண்டு வரு­கி­றீர்­களே உங்கள் நிலை என்ன? எனவே சோன­கரின் பிர­ஜா­வு­ரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். அதற்­கான வாக்­கு­று­தியை டி.எஸ். சேன­நா­யக்க அந்த சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் முன் வைக்­கையில் நிறை­வேற்­று­வ­தாக என்­னிடம் கூறினார் எனவும் சேர். ராசிக் பரீத் குறிப்­பிட்­டி­ருந்தார்.

· முக்­கி­ய­மாக சேர். ராசிக் பரீதின் பாரா­ளு­மன்ற உரைகள் மரண தண்­டனை ஒத்­தி­வைப்பு, வாடகை வீட்­டா­ளர்கள் யாப்பு திருத்தம் ஆகி­யவை குறிப்­பி­டத்­தக்­க­வை­யாகும்.

· இவர் தூரப் பிர­தே­சங்­களில் தனி­மை­யாக ஓரங்­கட்­டப்­பட்டு துரு­வப்­பட்டு வாழ்ந்த முஸ்­லிம்­களின் கஷ்­டங்­களைப் பற்­றியும் பேசி­யி­ருக்­கிறார்.

· நேர்த்­தி­யான தூய ஆடையை அணிந்து அலங்­கா­ரத்­துக்­காகக் கோட்டில் ஒக்கிட் மலரைச் செரு­கி­யி­ருப்பார்.

· கல்­குடா, காத்­தான்­குடி, கண்டி, கிரிந்த போன்ற பல பிர­தே­சங்­களில் வாழ்ந்த முஸ்­லிம்­களின் துயரக் கதை­க­ளையும் முன்­னி­லைப்­ப­டுத்திப் பேசினார். இவ்­வா­றுதான் அவர் குர­லெ­ழுப்ப சக்­தி­யற்­றோ­ருக்­காகக் குர­லெ­ழுப்­பினார்.

· 1958 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனக்­க­ல­வ­ரத்தைப் பற்றி சேர். ராசிக் பரீத் பாரா­ளு­மன்­றத்தில் பேசு­கையில்;

இதுவும் 1915 ஆம் ஆண்டைப் போல் இருண்­ட­தாகும். இதை நான் கூறா­விட்டால் கடமை தவ­றி­ய­வ­னாக ஆகி­வி­டுவேன் என்றார்.

· முஸ்­லிம்கள் இலங்­கையர் என்னும் தேசிய உணர்­வோடு வாழ­வேண்­டிய அவ­சி­யத்தை சேர். ராசிக் பரீத் எப்­போதும் வலி­யு­றுத்தி வந்­தி­ருந்தார்.

· விடாப்­பிடி, சுய­வி­ருப்பு ஆகி­ய­வற்றில் முரண்டு காட்­டிய சில முஸ்­லிம்­களை சேர். ராசிக் பரீத் நெறிப்­ப­டுத்­தவும் பாடு­பட்­டி­ருந்தார்.

· இவர் மு.கா. வின் ஸ்தாபகத் தலை­வ­ரான அஷ்­ர­பி­டமும் பிர­தி­ப­லித்­தி­ருந்தார். பய­னுள்ள அதி­காரப் பரவல் பற்­றிய அஷ்­ரபின் பார்வை சேர். ராசிக் பரீதின் நோக்­கி­லி­ருந்து அதிகம் வேறு­ப­ட­வில்லை.

என்­றெல்லாம் ரவூப் ஹக்கீம் பல அரிய தக­வல்­களை அங்கு தெரி­வித்­தி­ருந்­தமை சிறப்­பாகக் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். என்­றாலும் கூட சில விட­யங்­களை இங்கு தெரி­விக்­கா­மலும் இருக்க என்னால் முடி­ய­வில்லை.

இவர் நீண்ட காலம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய கொழும்பு முஸ்­லிம்­களின் இன்­றைய நிலை என்ன? அர­சி­ய­லிலும் அபி­வி­ருத்­தி­யிலும் இவர்கள் அனா­த­ர­வா­கி­யி­ருக்­கி­றார்கள். சேர். ராசிக் பரீதின் தனித்­துவம் ஒரு­முறை பிர­தே­ச­வா­தத்தால் பொத்­து­வில் தேர்­தலில் தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­த­போதும் மறு­முறை கொழும்பு மத்­திய தொகு­தியில் பெருந்­தே­சியக் கட்­சி­களை எதிர்த்து இவர் சுயேச்­சை­யாகப் போட்­டி­யிட்டு மூன்றில் ஓர் ஆச­னத்தைப் பெற்­றி­ருந்­ததன் மூலம் இலங்­கைவாழ் முஸ்­லிம்­களின் தனித்­து­வத்­துக்கு முன்­னோ­டி­யாகத் திகழ்ந்தார் என்­ப­தையும் நான் இங்கு குறிப்­பிட்­டாக வேண்டும். சேர். பொன் இரா­ம­நா­தனின் தமிழ் பேரி­ன­வா­தத்தின் மீது சிறு­வ­யது முதல் இவர் கொண்­டி­ருந்த எதிர்ப்பே இதற்குக் கார­ண­மாக அமைந்­தது.

சேர். ராசிக் பரீதின் தனித்­துவ விதைப்பே அஷ்­ர­புக்கு பிற்­கா­லத்தில் அறு­வ­டை­யா­கி­றது. நாடு முழுக்க 144 முஸ்லிம் பாட­சா­லை­களை உரு­வாக்க உழைத்த சேர். ராசிக் பரீத் தனித்­து­வத்தை சிறு வய­தி­லேயே உரு­வாக்க முஸ்லிம் பாலர் வாசகம் என்னும் பாட நூலையும் வெளி­யிட்­டி­ருந்தார்.

ஜே.ஆர். 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த திம்புப் பேச்­சு­வார்த்­தையில் தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளுக்கு மட்­டுமே அழைப்பு விடுத்து வடக்கு, கிழக்கு முஸ்­லிம்­களைக் கைவிட்­ட­போது அஷ்ரப் சேர். ராசிக் பரீத்­தையே நாடி­யி­ருந்தார். அதன்­படி 1985 ஆம் ஆண்டு சேர். ராசிக் பரீத் தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு பேச்­சு­வார்த்தை நடத்த கலா­நிதி பதி­யுதீன் மஹ்மூத் ஏ.டபிள்யூ.எம். அமீர் ஆகி­யோ­ரோடு அஷ்­ர­பையும் பெங்­க­ளூ­ருக்கு அழைத்துச் சென்­றி­ருந்தார். அப்­போது ஹக்­கீ­முக்கு தொடர்பு இருக்­க­வில்லை. 1986 ஆம் ஆண்­டுக்குப் பின் தமிழ் ஆயுதப் போரா­ளிகள் முஸ்­லிம்­களின் தனித்­துவ அர­சி­ய­லுக்குத் தடை விதித்து உயிர் அச்­சு­றுத்­த­லுக்கு உட்­ப­டுத்­திய பின் அஷ்­ரபும் அவ­ரது சகாக்­களும் கொழும்பில் புக­லிடம் பெற்­றார்கள். பின்னர் கொழும்­பி­லி­ருந்தே பாஷா விலாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­ய­தோடு பதிவும் செய்து கொண்­டார்கள். 1987 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்தில் முஸ்­லிம்கள் தவிர்க்கப்பட்­டி­ருந்­த­தா­லேயே இத்­த­கைய தனித்­துவ முஸ்லிம் அர­சியல் கட்சி உரு­வா­கி­யி­ருந்­தது. எனினும், முதலில் 1988 ஆம் ஆண்டு நிகழ்ந்த மேல் மாகாண சபைத் தேர்­த­லி­லேயே அக்­கட்சி தனது மரச் சின்­னத்தில் போட்­டி­யிட்டு 06 ஆச­னங்­களைப் பெற்­றி­ருந்­தது. கொழும்பில் மூன்றும் களுத்­துறை மாவட்­டத்தில் இரண்டும் கம்­ப­ஹாவில் ஒன்­று­மாக ஆச­னங்கள் கிடைத்­தன.

இத் தேர்­தலில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி போட்­டி­யி­டா­ததால் ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­ட­னேயே முஸ்லிம் காங்­கிரஸ் நேர­டி­யாகப் போட்­டி­யிட்­டி­ருந்­தது. கொழும்பு முஸ்­லிம்கள் அஷ்­ரபை தோளில் தூக்­கிக்­கொண்டு சென்­றார்கள். செல்­வந்­தர்கள் நிரம்­பிய ஐக்­கிய தேசியக் கட்சி வலி­மையோடு இருக்­கை­யி­லேயே எளிய முஸ்­லிம்கள் அத்­தனை வசதி வாய்ப்­பு­க­ளுக்கும் அன்­றாட வாழ்வுத் தேவை­க­ளுக்கும் உள்­ளங்­களில் இட­ம­ளிக்­காது முஸ்­லிம்­களின் தனித்­து­வத்­துக்கே இங்கு முக்­கி­யத்­துவம் அளித்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
மத்­திய கொழும்பில் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் 7 பகு­திகள் இருக்­கின்­றன. இவர்கள் முழு­மை­யா­கவே அஷ்­ரபை ஆத­ரித்­தி­ருந்­தார்கள். தெருக்கள், ஒழுங்­கைகள், முடுக்­குகள் தோறும் அஷ்ரப் 1988 ஆம் ஆண்டு அத் தேர்­தலில் சென்று அங்­கெல்லாம் வாழ்ந்த முஸ்­லிம்­களின் பின்­தங்­கிய வாழ்வைக் கண்டு பரி­தா­பப்­பட்டார். கூடிய விரைவில் அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் வாக்­க­ளித்தார்.

எனினும் அவர் இறக்­கும்­வரை 12 ஆண்­டு­க­ளாக அங்­கெல்லாம் சிறு அபி­வி­ருத்­தி­க­ளேனும் இடம்­பெ­ற­வில்லை. அதற்கும் பின் இற்றை வரைக்­கும் 19 ஆண்­டுகள் கழிந்தும் கூட அதே நிலைதான் இங்­கெல்லாம் தொடர்­கி­றது. எதையும் எதிர்­பார்த்து கொழும்பு முஸ்­லிம்கள் தனித்­துவ அர­சி­ய­லுக்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை. என்­றாலும் கூட அக்­கட்சி, அர­சி­ய­லிலும் வசதி வாய்ப்­பிலும் உச்ச நிலைக்கு வந்து 40 ஆண்­டுகள் கழிந்தும்கூட கொழும்பு முஸ்­லிம்­களின் வாழ்வு அப்­ப­டியே இருக்­கி­றது. ஹக்கீம் தற்­போது வெள்ளி விழா எம்.பி, 20 ஆண்டு தலைவர் எனினும் அன்று அஷ்ரப் முன்­னெ­டுத்­தி­ருந்த முஸ்லிம் அர­சியல் தனித்­து­வம்தான் தற்­போது ஓங்கி வளர்ந்து ஆல­வி­ருட்­ச­மா­யி­ருக்­கி­றது. அது பல­கூ­று­க­ளாகப் பிரிந்தும் கூட வலிமை குன்­ற­வில்லை. அவற்­றிலும் இரட்டைக் கூறுகள் பிர­தா­ன­மா­ன­வை­யாக இருக்­கின்­றன. ரவூப் ஹக்கீம் ஒரு கூறுக்கும் ரிஷாத் பதி­யுதீன் மற்­றொரு கூறுக்கும் தலைமை வகிக்­கி­றார்கள். ரவூப் ஹக்­கீ­முக்கு 7 எம்.பி. க்களும் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு 5 எம்.பி. க்களும் இருக்­கி­றார்கள். ஆக 12 எம்.பி. க்கள்.

கிழக்கில் முஸ்லிம் தனித்­துவ அர­சியல் தலை­தூக்­கி­யதும் கொழும்­பி­லி­ருந்த முஸ்லிம் அர­சியல் ஆளுமை சிறிது சிறி­தாக ஒடுங்­கிப்­போ­னது. தனித்­துவ முஸ்லிம் அமைச்சர் கிழக்­கி­லி­ருந்து பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரி­வா­கி­யி­ருந்­த­போ­தும் முழு நாட்டின் முஸ்­லிம்­க­ளுக்­கா­கவே அவர் செயற்­பட வேண்டும்.
எனினும், தனித்­துவ அர­சியல் பேசி அமைச்­ச­ராகும் எமது முஸ்­லிம்கள் வடக்கு கிழக்கை மட்­டுமே முன்­னி­லைப்­ப­டுத்தி அபி­வி­ருத்தி செய்­கி­றார்கள். முழு நாட்­டுக்­கு­மாக ஒதுக்­கப்­படும் வளத்தை ஒரு பகு­திக்கு மட்­டுமே சொந்­த­மாக்கிக் கொள்­ள­லாமா? தனித்­துவ அர­சி­யலால் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு இப்­ப­டியும் ஓர் அனு­பவம் கிடைத்­தி­ருக்­கி­றது.

அதிகமான முஸ்லிம் அமைச்சர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் என்றானால் அவர்களும் அவற்றுக்கே என்றானால் நாடு முழுக்க வாழும் முஸ்லிம்கள் சம அபிவிருத்தி பெறுவது எப்படி? அந்த வகையில் முஸ்லிம் தனித்துவ அரசியல் கட்சிகள் இனிமேலாவது தமது அபிவிருத்தி செயற்பாடுகளில் இலங்கை முழுக்க வாழும் முஸ்லிம்களுக்கும் பரவலாக்க வேண்டும்.

கிழக்குக்கு வெளியே தனித்துவ முஸ்லிம் கட்சிகள் அஷ்ரபின் இறப்புக்குப் பின் படிப்படியாக வலிமை குன்றிப்போகக் காரணம் பெருந்தேசியக் கட்சிகளைப் பேரினக் கட்சிகள் என அடையாளப்படுத்திய முஸ்லிம் தனித்துவக் கட்சிகள் அவற்றின் முகவர் கட்சிகளாக மாறி முழு இலங்கை முஸ்லிம்களினதும் வளங்களுக்கான பங்களிப்பை ஒரு பகுதிக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொண்டதாகும்.

· 40 ஆண்டுகளுக்கு முன் அஷ்ரப் முன்வைத்த கரையோர மாவட்டமும் அதிகார அலகும் கிடப்பில் இருக்கின்றனவே.

· ஆட்சிகளை மாற்றியமைக்க அமைச்சுக்களுக்கும்

ரப்பிரசாதங்களுக்குமாகப் பேரம் பேசல் கொள்கைகளுக்கு இல்லையா? தனித்துவத்தின் பெயரால் பல பிரிவுகளாகியுள்ள முரண்பாட்டு அரசியல்.

· எந்த கட்சி மூலமும் போட்டியிட்டு ஒரு முஸ்லிமால் தெரிவாக முடியாத மாவட்டங்களுக்கு இடைக்கிடையே தெரிவுப் பட்டியல் மூலம் எம்.பி. பதவியை ஒதுக்கினால் என்ன? அதுவும் கிழக்குக்கே என்றால் என்ன நியாயம்? சேர். ராசிக் பரீதின் பெயரால் இவை பற்றியும் சிந்திப்போமாக!

ஏ.ஜே.எம். நிழாம்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.