மேற்குலகு, பயங்­க­ர­வா­திகள் இணைந்து நாட்டில் நாச­கார செயலை செய்ய முயற்சி

கேந்திரத்தை கைப்பற்ற திட்டம் என்கிறார் விமல் வீரவன்ச

0 616

அமெ­ரிக்க மேற்­கு­வா­திகள் மற்றும் பயங்­க­ர­வா­திகள் இணைந்து இந்­நாட்டில் இன்­னொரு நாச­கார செயலை செய்யும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கையின் கேந்­தி­ரத்தை கைப்­பற்றும் முயற்­சியில் இவர்கள் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

எனவே, கோத்­தா­பய ராஜபக் ஷ -மஹிந்த ராஜபக் ஷ இணைந்த அர­சாங்­கத்தை உரு­வாக்கி நாட்டை மீட்­டெ­டுக்க வேண்­டு­மென தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் மூன்­றா­வது தேசிய மாநாடு நேற்று சுக­த­தாச உள்­ளக அரங்கில் இடம்­பெற்­றது.

இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த காலங்­களில் மேற்­கத்­திய மற்றும் பயங்­க­ர­வாத சக்­தி­க­ளுக்கு எதி­ராக வெற்­றியை உரு­வாக்­கிக்­கொ­டுத்த மக்­களே இன்று எம்­முடன் இணைந்­துள்­ளனர். சவால்­க­ளுக்கே சவால் விடுக்கும் மக்கள் இன்றும் எம்­முடன் இணைந்­துள்­ளனர். ஏப்ரல் 21 ஆம் திகதி சஹ்ரான் மூல­மாக இந்­நாட்டில் இரத்தம் படிந்­தது, அமை­தியை விரும்­பிய மக்கள் அச்­சத்தில் இருந்­தனர். சஹ்ரான் யாருக்கு தேவைப்­பட்டார்? இந்த தாக்­குதல் யாருக்குத் தேவைப்­பட்­டது என்­பதை தேடிப்­பார்க்க வேண்­டிய கட்டம் உரு­வா­கி­யது. விடு­த­லைப்­பு­லி­களை இல்­லாது ஒழித்­தாலும் அவர்­களின் சக்­திகள் வேறு முறை­மை­களில் எம்மை தாக்­கிக்­கொண்டே இருந்­தன. காரணம், இலங்­கையின் கேந்­தி­ரத்தை கைப்­பற்ற வேண்­டிய நோக்­கமே சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கு ஏற்­பட்­டது. இன்றும் அதே நோக்கம் உள்­ளது. மனித உரி­மைகள் என கூறிக்­கொண்டு அவர்­களின் தேவை­களை நிறை­வேற்றும் நோக்­கமே உள்­ளது. அதற்­கா­கவே சஹ்ரான் போன்­ற­வர்கள் இவர்­க­ளுக்குத் தேவைப்­பட்­டனர் . கறுப்­புப்­பணம் நாட்டில் நுழைந்­தது. இந்த ஆட்சி பயங்­க­ர­வா­தி­களை வளர்த்த ஆட்­சி­யாகும். பிர­தமர் முதற்­கொண்டு அனை­வரும் இந்தப் பயங்­க­ர­வா­தத்­திற்கு இட­ம­ளித்த நபர்கள். இந்தக் குற்­றங்­க­ளி­லி­ருந்து எவரும் தப்­பிக்க முடி­யாது. புல­னாய்வுத்துறை 97 தட­வைகள் அச்­றுத்தல் விடுத்தும் தாக்­கு­த­லுக்கு இடம் கொடுத்­தனர். ஐ. எஸ். அமைப்பை உரு­வாக்­கி­ய­வர்கள் இந்த நாட்­டுக்குள் இன்­னொரு தாக்­கு­தலை நடத்தும் நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். அமெ­ரிக்க, மேற்கு உலக சக்­திகள் இந்த நாட்டில் இன்று நாசத்தை செய்த முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலை சமூக ஊட­கங்­களின் நோக்­கங்­க­ளுக்கு ஏற்ப நடத்­தவே முயற்­சித்து வரு­கின்­றனர். இன்று சஜித் மூல­மாக தமது பய­ணத்தை உரு­வாக்க மங்­கள போன்­ற­வர்கள் முயற்­சித்து வரு­கின்­றனர். சஜித்­தி­னால்­கூட நாட்­டினை மீட்­டெ­டுக்க முடி­யாது. சஜித் அணியில் தான் ரிஷாத் பதி­யுதீன் அணி­யி­னரும் உள்­ளனர். அடிப்­ப­டை­வா­திகள் அனை­வரும் அவர்­க­ளுடன் தான் உள்­ளனர். இவர்­க­ளுக்கு இனியும் இட­ம­ளிக்க முடி­யாது. ஆகவே இவர்கள் அனை­வ­ர­யையும் நிரா­க­ரித்து நாட்டு மக்கள் ஒன்­றி­ணைய வேண்டும். அன்று நாட்டை மீட்­டெ­டுக்க மஹிந்த தேவைப்­பட்டார். இன்றும் அதே­போன்று ஒரு நாச­கார ஆட்­சியை வீழ்த்த கோத்­தா­பய தேவைப்­ப­டு­கின்றார். இன்று முழு நாடும் கோத்­தா­பய ராஜபக் ஷவின் தலை­மை­யையே கேட்­கின்­றனர். மஹிந்த -– கோத்­தாவின் மூல­மாக நாடு கேட்கும் சுதந்­தி­ரத்தை உரு­வாக்­கிக்­கொள்ள முடியும். நோயா­ளி­யாக இன்று எமது நாடு பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.
உண­வாக உட்­கொள்ளும் அனைத்­துமே விஷ­மாக செல்லும் நாடே இது. இதி­லி­ருந்து நாம் விடு­பட வேண்டும். இந்த நாடு பிச்­சைக்­கார நாடல்ல. அவ்­வா­றான நாடாக மாற்­றி­ய­மைக்க வேண்­டிய தேவை உள்­ளது. தேசிய பாது­காப்பை பலப்­ப­டுத்தும், நாட்­டினை கட்­டி­யெ­ழுப்பும் தலைவர் ஒருவர் எமக்கு கிடைத்­துள்ளார். அதையும் தாண்டி புத்­தி­சா­லித்­தனம் கொண்ட தலைவர் எமக்கு கிடைத்­துள்ளார். அவர்தான் எமது கோத்­தா­பய ராஜபக் ஷ. அவ­ரையே நாம் தலை­வ­ராக்க வேண்டும்.

சஜித்தை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்க கோரிக்கை விடுத்து வரும் வேளையில் ரணில், தானே ஜனா­தி­பதி வேட்­பாளர் என்று கூறு­கின்றார். இது எவ்­வாறு என்றால் கல்­யாண பத்­தி­ரி­கையை சஜித் நாடு பூரா­கவும் பகிர்ந்து செல்லும் நிலையில் மணப்­பெண்ணை கடத்தும் வேலையை ரணில் செய்­கின்றார். இவ்­வா­றா­னவர்­க­ளுக்கு நாட்­டினை கொடுப்பதில் எந்த அர்த்­தமும் இல்லை. ஆகவே, மஹிந்த – –கோத்தா ஆட்­சியே எமக்கு வேண்டும். சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மோதிக்கொள்ளாது அனைவரும் இணைந்து வாழக்கூடிய நாட்டினை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தப் போராட்டத்தில் எமது வெற்றியைப்பேச வைக்க வேண்டியதே மக்களின் கடமை. கோத்தாபய ராஜபக் ஷவை வெற்றிபெற வைத்து நாட்டினை மாற்றுப் பாதையில் கொண்டு செல்வோம் அதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என கூறினார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.