இலங்கை வானொலியில் நாளை பாக்கிர் மாக்கார் நினைவுப் பேருரை

0 128

மர்ஹூம் பாக்கிர் மாக்­காரின் சேவை­களை நினைவு கூர்ந்து அமைச்­சர்கள் இலங்கை வானொலி தேசிய சேவையில் மும்­மொ­ழி­க­ளிலும் நினைவுப் பேரு­ரை­களை நிகழ்த்­த­வுள்­ளனர். நாளை 10ஆம் திகதி இலங்கை வானொலி தேசிய சேவையில் இவ் நினைவுப் பேரு­ரைகள் இடம்­பெ­ற­வுள்­ளன.

அன்­றைய தினம் பிற்­பகல் 7.30 மணி­முதல் 7.45 மணி­வரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமிழ்­மொ­ழியில் உரை­யாற்­ற­வுள்ளார். இரவு 8.05 முதல் 8.15 வரை தேசிய வானொலி முஸ்லிம் சேவையில் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தமிழில் உரை­யாற்­ற­வுள்ளார். அமைச்சர் ஹர்ச டி சில்வா மாலை 6.30 மணி முதல் 6.40 வரை ஆங்­கில மொழி­யிலும் இரா­ஜாங்க அமைச்சர் புத்­திக பத்­தி­ரண இரவு 7.45 மணி­முதல் 8.00 மணி­வரை சிங்கள மொழியிலும் உரையாற்றவுள்ளனர்.

vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.