வறுமையை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்த பேதமின்றி ஒன்றுபடுவதே நாட்டின் இன்றைய தேவை

போரா சமூக சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

0 1,338

வறு­மையை ஒழித்து சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இனம், மதம், சமயம் என்ற பேத­மின்றி அனை­வரும் ஒன்­று­ப­டு­வதே இன்று நாட்டின் தேவை­யாகும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.
இதுவே முஹம்மத் நபி­ய­வர்­களின் போத­னை­யாகும் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்தார். போரா சமூ­கத்­தி­னரின் சர்­வ­தேச மாநாட்­டிற்கு தனது நல்­லா­சி­களை தெரி­வித்து உரை­யாற்­றும்­போதே ஜனா­தி­பதி இதனைக் குறிப்­பிட்டார்.

போரா சமூ­கத்­தி­ன­ரது சர்­வ­தேச மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள போரா சமூ­கத்தின் பிர­தான பள்­ளியை மையப்­ப­டுத்தி ஆரம்­ப­மா­ன­துடன், 10 நாட்கள் தொடர்ந்து இடம்­பெறும் இம்­மா­நாட்டின் 04 ஆவது தின­மான நேற்­றைய தினம் மாநாட்டு மண்­ட­பத்­திற்கு சென்ற ஜனா­தி­பதி, மாநாட்டில் கலந்து கொண்­டுள்­ள­வர்­க­ளுக்கு தனது வாழ்த்­துக்­களை தெரி­வித்தார்.

சமா­தா­னத்­திற்­காக அர்ப்­ப­ணித்த சமூ­கத்­தி­ன­ரான போராக்­களின் இம்­மா­நாடு இம்­முறை இலங்­கையில் நடை­பெ­று­வது நாட்­டுக்கு கௌர­வ­மாகும் என்றும் அது குறித்து தனது நன்­றியை தெரி­விப்­ப­தா­கவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

“எமக்கு இலங்கை மீது நம்­பிக்கை உள்­ளது” என்ற கருப்­பொ­ருளின் கீழ் 40 நாடு­களைச் சேர்ந்த 21,000 போரா சமூ­கத்­தி­னரின் பங்­கு­பற்­று­த­லுடன் இம்­மா­நாடு இலங்­கையில் நடை­பெ­று­வ­துடன், வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சுமார் 18,500 போராக்கள் கலந்­து­கொண்­டுள்­ள­துடன், இலங்­கையைச் சேர்ந்த சுமார் 2,500 போரா சமூ­கத்­தி­னரும் பங்கு பற்­றி­யி­ருக்­கின்­றனர்.

அனைத்து இனங்கள், சம­யங்­க­ளுக்கு மத்­தியில் சமா­தா­னத்­தையும் நம்­பிக்­கை­யையும் கட்­டி­யெ­ழுப்பி இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்கும் நிகழ்ச்சித் திட்­டங்­க­ளுக்கு பலம் சேர்ப்­பது, தீவி­ர­வா­தத்தை நிரா­க­ரித்து சமா­தா­னத்­திற்கு அர்ப்­ப­ணிப்­புள்ள போராக்­களின் இந்த மாநாட்டின் நோக்­க­மாகும் என்­ப­துடன், இலங்கை சுற்­றுலா துறைக்கும் வர்த்­த­கத்­திற்கும் பொருத்­த­மான நாடு என்­பதை எடுத்துக் கூறு­வதும் இதன் மற்­று­மொரு நோக்­க­மாகும்.
இந்த மாநாட்டின் மூலம் இலங்­கைக்கு சுமார் 31 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் அந்­நியச் செலா­வ­ணி­யாக கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக கணிக்­கப்­பட்­டுள்­ளது. இது போன்­ற­தொரு மாநாடு 2007ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றதுடன், அம்மாநாட்டில் 7,000 பேர் பங்குபற்றினர்.

பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா, பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.