பொலித்தீன், கட்அவுட் இல்லாத தேர்தல் பிரசாரங்களே தேவை

0 1,202

மாகாண சபைத் தேர்­தலை பழைய முறையின் கீழோ அல்­லது புதிய முறையின் கீழோ நடத்­து­வ­தற்கு ஜனா­தி­ப­திக்கு அதி­காரம் இல்­லை­யென உயர்­நீ­தி­மன்றம் தெரி­வித்­துள்­ள­தாக ஜனா­தி­ப­தியின் செய­லகம் நேற்று முன்­தினம் அறி­வித்­தது.

உயர்­நீ­தி­மன்­றத்தின் ஐவ­ர­டங்­கிய நீதி­ப­திகள் குழாம் ஏக­ம­ன­தாக இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்­ளது.

இந்­நி­லையில் முதலில் ஜனா­தி­பதித் தேர்­த­லே நடத்­தப்­படும் என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது. இது­வரை ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளாக பொது­ஜன பெர­முன கட்­சியின் சார்பில் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சார்பில் அதன் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்­கவும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மையில் அமை­ய­வுள்ள ஜன­நா­யக ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி அபேட்­சகர் விபரம் இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­பதி அபேட்­ச­க­ராக அறி­விக்­கப்­பட்­டதும் அவர் மக்கள் மத்­தியில் உரை­யாற்­றும்­போது தான் பொலித்தீன் மற்றும் கட்­அவுட், பதா­கைகள் அற்ற தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்தார். அத்­தோடு அவர் தனக்கு அளிக்­கப்­பட்ட வர­வேற்பு நிகழ்­வு­க­ளின்­போது அப்­ப­கு­தி­களில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த கட்­அவுட், மற்றும் பெனர்­களை அப்­பு­றப்­ப­டுத்­து­வதில் ஆர்வம் காட்­டினார் என்ற விப­ரங்­களை ஊட­கங்கள் வெளி­யிட்­டி­ருந்­தன.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநுர திஸா­நா­யக்க காலி முகத்­தி­டலில் இடம்­பெற்ற கூட்­ட­மொன்­றிலே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்டார். அந்­தக்­கூட்டம் நிறை­வுற்­றதும் அக்­கட்­சியின் அங்­கத்­த­வர்கள் கூட்டம் நடை­பெற்ற காலி முகத்­திடல் பிர­தே­சத்தை சுத்தம் செய்யும் புகைப்­ப­டங்கள் ஊட­கங்­களில் வெளி­வந்­தன. ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்ள இரு அபேட்­ச­கர்­களும் சூழல் பாதிப்­பு­றாத, மாசு­ப­டாத தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளமை இதன்­மூலம் உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது.
இது­வரை காலம் எமது நாட்டில் இடம்­பெற்­றுள்ள தேர்­தல்கள் வன்­செ­யல்­களை கொண்­ட­தா­கவும் சூழலை மாசுப்­ப­டுத்­து­வ­தா­க­வுமே அமைந்­தி­ருந்­தன. சுற்­றுச்­சூ­ழலைப் பாது­காப்­ப­தற்கும், வன்­செ­யல்­களைத் தவிர்ப்­ப­தற்கும் மக்கள் ஆலோ­ச­னை­களை முன்­வைத்­தாலும் அர­சியல்வாதி­களால் அவை கவ­னத்­திற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அர­சியல்வாதிகள் தாம் மக்­களை விட உயர்­வா­ன­வர்கள் என்றே கருதி வந்­தனர். தாங்கள் செய்­வதை மக்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்­பதே அவர்­க­ளது நிலைப்­பா­டாக இருந்­தது.

தற்­போது மக்கள் அனைத்து சவால்களையும் எதிர்­கொள்ளத் தயா­ரா­கி­விட்­ட­தாகத் தோன்­று­கி­றது. இத­னா­லேயே சூழல் மாசு­ப­டாத தேர்தல் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்கப் பட­வுள்­ளன. இந்த மாற்றம் மக்­க­ளுக்கும் நாட்­டுக்கும் நன்மை பயக்கும் என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.

தேர்தல் பிர­சா­ரங்­களில் பிர­தான இடத்­தினை பொலித்­தீனே வகிக்­கி­றது. உக்­காத மண்­ணுடன் கலக்­காத இந்த பொலித்தீன் எமது சூழலின் எதி­ரி­யாகும். என்­றாலும் அர­சியல் கட்­சிகள் இதனைப் பொருட்­ப­டுத்­து­வ­தில்லை. நாட்­டுக்கும், சூழ­லுக்கும் ஏற்­படும் ஆபத்­துக்­களை அவர்கள் கண்­டு­கொள்­வ­தில்லை. வெற்றி மாத்­தி­ரமே அவர்­க­ளது இலக்­காக இருக்­கி­றது. இத­னா­லேயே தேர்தல் நட­வ­டிக்­கைகள் சூழலை அழி­வுக்­குள்­ளாக்கும் செயற்­பா­டாக அமை­கின்­றன.

சூழல் அழி­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வ­த­னாலே நாம் பல அனர்த்­தங்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­ப­டு­கின்­றது. வெள்ள அனர்த்தம், மண்­ச­ரிவு அனர்த்தம் என்­பன இதற்­குச்­சான்­றாகும். மண்­ச­ரி­வு­க­ளினால் மக்கள் உயி­ரோடு புதை­யுண்டும் விடு­கி­றார்கள். இவை சூழல் அழி­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வதன் பிர­தி­ப­லன்­க­ளாகும்.

சூழல் அழி­வுக்­குள்­ளா­வதன் பின்­ன­ணியில் அர­சியல் வாதிகளே இருக்கிறார்கள். இவர்கள் திரைமறைவில் இருந்து செயற்படுகிறார்கள். காடுகளை அழித்தல், மணல் அகழ்வது உட்பட சூழல் மாசுபடும் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களுக்கு அரசியல் வாதிகளின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.

மக்களை சுற்றுசூழல் பாதுகாவலர்களாக மாற்றுவதற்கு முன்பு அரசியல் வாதிகள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் சூழல் பாதுகாப்புக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்களா? என்பதில் மக்கள் அவதானம் செலுத்தவேண்டும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.