4/21 தாக்குதல் விவகாரம் : மட்டு. மாவட்டத்தில் கைதான 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

0 688

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட 64 பேரின் விளக்­க­ம­றியல் எதிர்­வரும் 12 ஆம் திகதி வரையில் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

காத்­தான்­கு­டி­யையும் அதனைச் சூழ­வுள்ள பிர­தே­சங்­க­ளிலும் இருந்தும்கைது செய்­யப்­பட்ட இச் சந்­தேக நபர்கள் விளக்க மறி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். கடந்த வெள்­ளிக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ஏ.சி. ரிஸ்வான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது எதிர்­வரும் 12ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அவர் உத்­த­ர­விட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் இவர்கள் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட நிலையில், சுமார் நான்கு மாதங்­க­ளுக்கும் மேலாக இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.