200 மில்லியன் நஷ்டஈடு கோரி ஹிஸ்புல்லா எனக்கெதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்

கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை: ரதன தேரர்

0 117

சிறைப்­பி­டித்­தால்­கூட செலுத்­து­வ­தற்கு என்­னிடம் பணம் இல்லை. இவ்­வா­றா­ன­வொரு நிலையில் ஹிஸ்­புல்­லா­வுக்கு நட்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கான எந்த அவ­சி­யமும் எனக்கு இல்லை. மாறாக இந்தப் பல்­க­லை­க் க­ழகம் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள வழக்கை உட­ன­டி­யாக விசா­ர­ணைக்­குட்­ப­டுத்த வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ரெ­லியே ரதன தேரர் தெரி­வித்தார்.
ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள சதம செவன பௌத்த மத்­திய நிலை­யத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது.

மட்­டக்­க­ளப்பு தனியார் பல்­க­லைக் ­க­ழ­கத்­துக்­கான காணி­யா­னது தொழில் பயிற்சி நிலை­யத்தை அமைப்­ப­தற்கென்றே பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. ஆயினும் காலப்­போக்கில் இந்த நிறு­வ­னத்தின் நோக்­கங்கள் மாற்­ற­ம­டைந்­துள்­ளன. முன்னாள் ஆளுநர் ஹஸ்­புல்­லாவின் மட்­டக்­க­ளப்பு தனியார் பல்­க­லைக்­க­ழகம் சட்­டத்­துக்குப் புறம்­பா­னது என்­ப­தனை பல­முறை வலி­யு­றுத்­தி­யுள்ளோம். தற்­போது இந்த தனியார் கல்வி நிறு­வ­னத்தின் விவ­காரம் தொடர்பில் நீதி­மன்­றத்தில் வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி மட்­ட­க்க­ளப்பு தனியார் பல்­க­லை­க்க­ழ­கத்தை அரச உட­மை­யாக்­கு­மாறு கோரி மட்­டக்­க­ளப்பு பிர­தே­சத்தில் பேர­ணி­யொன்றை ஏற்­பாடு செய்­தி­ருந்தோம். இதன்­போது மக்­க­ளிடம் துண்டு பிர­சு­ரங்­களும் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த மக்கள் பேரணி நட­வ­டிக்­கைகளின் போது மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அந்த துண்டு பிர­சு­ரத்­தினால் ஹிஸ்­புல்­லா­வுக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அதற்­காக 200 மில்­லியன் ரூபா நட்­ட­ஈட்­டினை செலுத்­து­மாறும் கோரி சட்­டத்­த­ரணி ஊடாக கடி­த­மொன்றை எனக்கு அனுப்பி வைத்­துள்ளார்.

இந்தப் பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் பாரா­ளு­மன்ற விவா­த­மொன்றும் இடம்­பெற்­றி­ருந்­தது. இதன்­போது மட்­டக்­க­ளப்பு தனியார் பல்­க­லை­க்க­ழ­கத்­துக்­கான காணியை பெற்­றுக்­கொண்ட விதம் தொடர்பில் தெளிவு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் உட்­பட எதிர்த்­த­ரப்பு உறுப்­பி­னர்­களும் இந்த பல்­க­லைக்­க­ழகம் சட்­டத்­துக்கு புறம்­பா­னதை வலி­யு­றுத்தி பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்­தார்கள். அவ்­வா­றாயின் அவர்­க­ளுக்கும் இவ்­வாறு கடிதம் அனுப்பி வைக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஹிஸ்­புல்­லாவின் இந்த தனியார் பல்­க­லை­க்க­ழகம் தொடர்பில் வழக்கு தொட­ரப்­பட்­டுள்ள நிலையில் நான் அவ­ருக்கு நட்­ட­ஈ­டாக ஐந்து சதம் கூட செலுத்தப் போவதில்லை. முதலில் இந்த பல்கலைக்கழகத்துக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை உடனடியாக விசாரணைக்குட்படுத்த வேண்டும். எனக்கு கடித்தத்தினூடாக அறிவித்து எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. வழக்கு விசாரணைகளின் போது இதுகுறித்து அவர் சட்டத்துக்கு முன் பதிலளிக்க வேண்டியது அவசியமாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.