ஹஜ்ஜாஜிகளை ஏமாற்றிய முகவர் பணத்தை மீள கையளிக்க உறுதி

0 1,266

இவ்­வ­ருட ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்கு ஹஜ் முகவர் நிலை­ய­மொன்­றுக்கு உரிய கட்­ட­ணங்­களைச் செலுத்தி பய­ணிக்கத் தயா­ராக இருந்த 8 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களை இறுதி நேரத்தில் கைவிட்ட ஹஜ் முகவர் பாதிக்­கப்­பட்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் செலுத்­திய கட்­ட­ணங்­களைத் திருப்பிச் செலுத்­து­வ­தாக உறு­தி­ய­ளித்து முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு கடிதம் கைய­ளித்­துள்­ள­தாக திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்தார்.

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­க­ளின்­போது ஹஜ் முகவர் ஒருவர் 8 ஹஜ் விண்­ணப்­ப­தாரிகளிடம் ஹஜ் கட­மைக்­கான கட்­ட­ணங்­களைப் பெற்­றுக்­கொண்டு இறுதி நேரத்தில் கைவிட்­ட­மை­யினால் அவர்கள் ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்ற முடி­யா­மற்­போ­னது.

குறிப்­பிட்ட 8 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் முறைப்­பா­டு ­களைச் செய்­தி­ருந்­தனர். ஹஜ் முகவர் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்டார். இத­னை­ய­டுத்து 8 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களில் இரு­வரின் கட்­ட­ணங்­களை ஹஜ் முகவர் திருப்பிச் செலுத்­தி­ய­துடன் ஏனைய அறுவர் செலுத்­திய கட்­ட­ணங்­களை எதிர்­வரும் 10 ஆம் திகதி செலுத்­து­வ­தாக கடிதம் மூலம் உறுதியளித்துள்ளார். அவ்வாறு 10 ஆம் திகதி கட்டணங்கள் செலுத்தப்படாவிட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.