சர்­வ­தேச பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தல்கள் இல்லை

சி.ஐ.டி. இன்டர்போல் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் தகவல்

0 728

தற்­போ­தைய சூழலில் இலங்­கைக்கு வெளி­நாட்டு பயங்­கர­வாத அச்­சு­றுத்­தல்கள் எவையும் இல்லை என குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவின் இன்­டர்போல் பிரி­வுக்கு பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்சர் ரஞ்சித் வெத­சிங்க தெரி­வித்தார்.

4/21 தாக்­கு­தல்­களின் பின்னர் இலங்­கைக்கு சர்­வ­தேச பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தல்கள் தொடர்ந்தும் நில­வு­கின்­றதா என நேற்று இன்­டர்போல் செய­லாள­ரிடம் ஊட­க­வி­ய­ல­ா­ளர்கள் வின­விய கேள்­விக்கு, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். அதே­போன்று பிர­த­மரின் தொடர் ஒத்­து­ழைப்­புக்கள் சர்­வ­தேச ரீதியில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற பாது­காப்புத் திட்­டங்­க­ளுக்குப் பேரு­த­வி­யாக அமைந்­துள்­ள­தாக இன்­டர்போல் நிறு­வ­னத்தின் செய­லாளர் நாயகம் ஜேர்ஜன் ஸ்டொக் தெரி­வித்­துள்ளார்.

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள சர்­வ­தேச பொலிஸ் இண்­டர்போல் நிறு­வ­னத்தின் தூதுக்­குழு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அலரி மாளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்­தது. இதன்­போதே மேற்­கண்­ட­வாறு கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்­டன.

இண்­டர்போல் நிறு­வனம் சர்­வ­தேச பொலிஸ் அமைப்­பாகக் கரு­தப்­பட்­டாலும் பல சந்­தர்ப்­பங்­களில் செயற்­றிறன் மிக்க சேவை­களை வழங்க அர­சியல் துறைசார் ஒத்­து­ழைப்­புக்கள் தேவைப்­ப­டு­வ­தாக ஜேர்ஜன் ஸ்டொக் தெரி­வித்தார்.

இலங்­கையில் அண்­மையில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­த­லின்­போது பிர­த­மரால் வழங்­கப்­பட்ட அர­சியல் ஒத்­து­ழைப்­புக்கள் மற்றும் வழி­காட்­டல்கள், அதே­போன்று உள்­நாட்டு பொலிஸ் மற்றும் பாது­காப்புத் துறைகள் ஆர்­வத்­துடன் செயற்­பட்­ட­மையால் குறு­கிய காலத்­திற்குள் அனைத்து சந்­தே­க­ந­பர்­க­ளையும் கைது செய்ய முடிந்­த­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பூகோள ரீதியில் எதிர்­கா­லத்தில் எதிர்­கொள்­ளக்­கூ­டிய பாது­காப்பு சவால்­களை வெற்­றி­கொள்ள வேண்­டு­மாயின் அனைத்து உலக நாடு­களும் ஓர­ணியில் செயற்­பட வேண்டும். அத்­துடன் பாது­காப்பு மற்றும் புல­னாய்வுத் தகவல் பரி­மாற்றம் மிக அவ­சி­ய­மா­ன­தொன்­றென இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

மேலும் தகவல் பரி­மாற்­றத்­துக்கு நவீன தொழி­நுட்பம் பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். இத­னூ­டா­கவே நீர், எரி­சக்தி மற்றும் நிதி மற்றும் பொருளாதார நிலைகள் போன்றவற்றுக்கு ஏற்படக்கூடிய பயங்கரவாத சவால்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் இதன் போது பிரதமர் தெரிவித்துள்ளார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.