முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

0 802

ஏ.ஆர்.ஏ.பரீல்

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யது.

ஜனா­தி­ப­தியின் தலை­மையில் நேற்றுமுன்தினம் நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திலே இவ் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள

ஆகிய இரு­வரும் இணைந்து அமைச்­ச­ர­வைக்குச் சமர்ப்­பித்­தி­ருந்­தனர். முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக 2009 ஆம் ஆண்டு தற்­போ­தைய ஓய்வு நிலை நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டதை சுட்­டிக்­காட்­டிய அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் திருத்­தங்­க­ளுக்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்ள திருத்­தங்­களின் அடிப்­ப­டையில் முஸ்லிம் ஆண் –பெண்­களின் திரு­மண வய­தெல்லை 18 ஆகும். விவா­க­ரத்தின் போது பாதிக்­கப்­படும் பெண்­க­ளுக்கு நஷ்ட ஈடு வழங்­கப்­ப­டு­வதும் திருத்­தங்­களில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது.

காதி­நீ­தி­மன்­றங்கள் தர­மு­யர்த்­தப்­ப­டு­வ­துடன் காதி­நீ­தி­ப­திகள் நிரந்­தர முழு­நேர நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். இஸ்­லா­மிய சட்ட அறி­வுடன் கூடிய ஆண் சட்­டத்­த­ர­ணி­களே காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் தற்­போ­தைய ஓய்­வு­நிலை நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­கான குழு தனது அறிக்­கையை 2018 ஆம் ஆண்டு நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ளித்­தது.

நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்ட அறிக்கை இரண்டு அறிக்­கை­களை உள்­ள­டக்­கி­யி­ருந்­தது. குறிப்­பிட்ட குழு கருத்து முரண்­பா­டு­க­ளினால் இரு வேறு­பட்ட அறிக்­கை­களைச் சமர்ப்­பித்­தி­ருந்­தது. இந்த அறிக்­கை­களில் பிர­தான அறிக்கை சட்­டத்­தி­ருத்தக் குழுவின் தலைவர் சலீம் மர்­சூபின் தலை­மையில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தாக இருந்­தது. அதே அறிக்­கை­யுடன் இணைக்­கப்­பட்­டி­ருந்த மற்­றைய சிறிய அறிக்கை அந்த சிபா­ரி­சு­க­ளுக்கு முர­ணா­ன­தாக அமைந்­தி­ருந்­தது. இந்த முரண்­பட்ட சிறிய அறிக்கை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை உள்­ளிட்ட தரப்­பி­ன­ரி­ன­தாகும்.

அறிக்­கையைப் பெற்­றுக்­கொண்ட நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள பிள­வு­பட்­டுள்ள குழு­வி­னரை இணக்­கப்­பாட்­டுக்குக் கொண்­டு­வர முயற்­சித்து அது பல­ன­ளிக்­காமல் போகவே திருத்த சிபா­ரி­சு­க­ளுக்­கான அங்­கீ­காரம் வழங்கும் பொறுப்­பினை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைத்தார்.
முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இத்­தி­ருத்­தங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யாடி இறு­தி­யாக ஜுலை மாதம் 11 ஆம் திகதி ‘பெண் காதி நிய­மனம்’ தவிர்ந்த ஏனைய சிபா­ரி­சு­க­ளுக்கு சில திருத்­தங்­க­ளுடன் அங்­கீ­காரம் வழங்­கி­னார்கள். இத்­தி­ருத்­தங்­களே அமைச்­ச­ர­வையில் நேற்று அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன. திருத்­தங்­களில் பின்­வ­ரு­வன உள்­ள­டங்­கப்­பட்­டுள்­ளன.

*முஸ்லிம் ஆண், பெண்­களின் திரு­மண வய­தெல்லை 18.

* திரு­மண பதிவும், நிக்­காஹ்வும் கட்­டாயம்.

*தலாக், குலா மற்றும் பஸ்ஹ் விவா­க­ரத்தின் போது மனை­விக்கு நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்டும்.

*பல­தார திரு­மணம் நிபந்­த­னை­க­ளுடன் அனு­ம­திக்­கப்­படும். காதி நீதி­ப­தியின் அனு­ம­தி­யில்­லாமல் நடை­பெறும் திரு­மணம் வலி­தற்­ற­தாகும்.

*திரு­மணப் பதிவு புத்­த­கத்தில் ‘வொலி’ கையொப்­ப­மி­டு­வ­துடன் மண­ம­களும் கையொப்­ப­மிட வேண்டும்.

*காதி நீதி­ப­தியின் அனு­ம­தி­யில்­லாமல் செய்து கொள்ளும் பல­தார மணம் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும்.

*கைக்­கூ­லியை திருப்பி பெற்றுக் கொள்­வது போன்று அசை­யாத சொத்­துக்­க­ளையும் பெற்­றுக்­கொள்ள முடியும்.

* முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து ஆலோ­சனை சபை மற்றும் காதிகள் சபையில் பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம் உள்­ள­டக்­கப்­படும்.

*பெண்கள் விவாகப் பதி­வா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டுவர்.

*காதி நீதி­மன்­றங்கள் தர­மு­யர்த்­தப்­படும்.

*காதி நீதி­ப­திகள் நிரந்­தர முழு­நேர காதி­நீ­தி­ப­தி­க­ளாக நியமிக்கப்படுவர்.

*இஸ்லாமிய சட்ட அறிவுடைய ஆண் சட்டத்தரணிகளே காதிநீதிபதிகளாக நியமிக்கப்படுவர்.

*முஸ்லிம் விவாகத்தில் ஒரு தரப்பு அல்லது இரு தரப்பினரும் எந்த மத்ஹபையும் சார்ந்தவர்களாக இல்லாதவிடத்து அல்லது அவர்களது திருமணம் இருவேறுபட்ட மத்ஹபுகளுக்கு உட்பட்டதாக இருந்து அவர்கள் மத்ஹப் தொடர்பில் இணக்கப் பாடொன்றினை எட்டாதவிடத்து அவர்களது திருமணம் தொடர்பான அனைத்து விடயங்களும் இஸ்லாமிய சட்டவிதிகளுக்கு அமையவே கையாளப்படுமே தவிர எந்தவொரு மத்ஹபின் அடிப்படையிலும் கையாளப்படமாட்டாது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.