பேரா­யரின் கருத்­துகள் உடன் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்டும்

0 763

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்று கடந்த ஞாயிற்றுக் கிழ­மை­யுடன் மூன்று மாதங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன. அன்­றைய தினம் கொழும்பு – கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம் மற்றும் கட்­டு­வாப்­பிட்டி புனித செபஸ்­தியார் தேவா­லயம் ஆகி­ய­வற்றில் திருப்­பலி பூஜை­களும், விஷேட ஆரா­த­னை­களும் இடம்­பெற்­றுள்­ளன.

இந்த ஆரா­த­னை­களில் கலந்­து­கொண்டு உரை நிகழ்த்­திய பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை முக்­கிய தக­வல்கள் சில­வற்றைத் தெரி­வித்­தி­ருக்­கிறார். ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்புக் கூற வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. முஸ்லிம் குழு­வொன்­றினால் இந்தத் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டது என்­பதை என்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சர்­வ­தேச தலை­யீட்­டினால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­க­ளா­கவே இதனை நான் நம்­பு­கிறேன்’ என்று அவர் தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் தலை­வர்­க­ளி­டமும் முஸ்லிம் மக்­க­ளி­டமும் அறை­கூவல் ஒன்­றினை அவர் விடுத்­துள்ளார். மாற்று மதத் தலைவர் ஒருவர் வழங்­கி­யுள்ள அறி­வு­ரை­களை முஸ்லிம் சமூகம் மிகவும் ஆழ­மாகக் கவ­னத்தில் கொள்­ள­வேண்டும்.
‘சர்­வ­தேச அர­சியல் நிகழ்ச்சி நிரல்­க­ளுக்கு முஸ்லிம் மக்கள் பயன்­ப­டுத்­தப்­படுகிறார்கள். எனவே சர்­வ­தேச அதி­கார சக்­தி­க­ளுக்­காக அடிப்­ப­டை­வா­தத்தை நோக்கிப் பய­ணிக்­காமல் உண்­மை­யான இஸ்­லா­மிய மத­போ­த­னை­களைப் பாது­காக்க சகல முஸ்லிம் மக்­களும் ஒன்­று­ப­ட­வேண்டும்” என முஸ்­லிம்­களை அவர் கோரி­யுள்ளார்.

அத்­தோடு முஸ்லிம் தலை­வர்­க­ளி­டமும் ஒரு கோரிக்­கையை முன்­வைத்­துள்ளார். ‘இஸ்­லாத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­களைத் திரி­பு­ப­டுத்தி அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் இனங்­கா­ணப்­பட்டால் அவர்­களை சமூ­கத்தி லிருந்து முற்­றாக ஒதுக்­கி­வி­ட­வேண்டும். ஆயு­தங்­களை உற்­பத்தி செய்யும் நாடுகள் அவற்றை விற்­பனை செய்­வ­தற்கும், தமது தவ­றான கொள்­கை­களை ஏனையோர் மீது திணிப்­ப­தற்கும் அப்­பாவி இளை­ஞர்­களைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­கி­றார்கள். இதற்கு உள்­நாட்டில் இட­ம­ளிக்கக் கூடாது’ என வேண்­டி­யுள்ளார்.

சர்­வ­தே­சத்தின் தேவை­க­ளுக்­காக புல­னாய்வுத் துறையை வலு­வி­ழக்கச் செய்து சகல பிரச்­சி­னை­களும் தோற்­று­விக்­கப்­பட்­ட­தா­கவும், எனவே எவரும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­ப­டக்­கூ­டாது என்றும் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இதற்கப்பால் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு சுயா­தீ­ன­மான உறுப்­பி­னர்­க­ளைக்­கொண்ட ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட வேண்டும் என்ற பேரா­யரின் கருத்தும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.

தற்­கொலைக் குண்­டுத்­தாக்­குதல் தொடர்பில் ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்­கைக்கு இந்­தியா புல­னாய்வுத் தக­வல்­களை வழங்­கி­யி­ருந்­தது. அது மாத்­தி­ர­மன்றி ஏப்ரல் 9 ஆம் திகதி மீண்டும் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தது. ஆனால் எச்­ச­ரிக்­கைகள் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை. 21 ஆம் திகதி தாக்­கு­தல்கள் இடம்­பெற்று நூற்­றுக்­கணக் கானோர் பலி­யா­னார்கள். தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஒன்­றினை நிய­மித்தார்.

ஆணைக்­கு­ழுவின் அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்டும் அது இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. ஜனா­தி­ப­தியும் பாது­காப்பு அமைச்சும் உரிய பாது­காப்பு ஏற்­பா­டு­களைச் செய்­ய­வில்லை என குற்­றம்­சாட்­டப்­பட்­டது. ஆனால் உரிய புல­னாய்வு அறிக்கை தனக்குக் கிடைக்­க­வில்லை என ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார். இவ்­வி­வ­காரம் தொடர்பில் பொலிஸ் மா அதி­பரும், பாது­காப்புச் செய­லா­ளரும் கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள்.

அத்­தோடு பாரா­ளு­மன்ற விஷேட தெரி­வுக்­கு­ழுவும் விசா­ர­ணை­களை நடாத்தி வரு­கி­றது. விசா­ரணை அறிக்கை அடுத்­த­மாதம் பாரா­ளு­மன்­றத்­துக்குச் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் பல்­வேறு கோணங்­களில் ஆரா­யப்­பட்­டாலும் அவை சுயா­தீ­ன­மா­னதா என சந்­தே­கிக்க வேண்­டி­யுள்­ளது. இதனையே பேராயரும் வலியுறுத்தியுள்ளார்.

பேராயரின் இந்தக் கருத்துக்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியதாகும். இந்தத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் நம்பிக்கை தருவதாக இல்லை என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதாகும். அந்த வகையில் உண்மையைக் கண்டறிவதற்கும் தகவல்களை அறிந்திருந்தும் இந்த அனர்த்தத்தை தடுத்து நிறுத்த தவறியோர் யார் என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும். இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் மீது சுமத்தப்பட்டுள்ள அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் களையப்பட வேண்டும்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் அரசியல்,கருத்து வேறுபாடுகளுக்கப்பால் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.