முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் : அமைச்சரவை பாத்திரம் விரைவில் தயாராகும்

முஸ்லிம் சமய அமைச்சும் நீதியமைச்சும் இணைந்து நடவடிக்கை என்கிறார் தலதா

0 124

முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய திருத்­தங்கள் அடங்­கிய பிரே­ரணை என்­னிடம் இது­வரை கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை. இது­தொ­டர்பில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும் நீதி அமைச்சும் இணைந்து அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்றை தயா­ரிக்­கவே எதிர்­பார்க்­கின்றோம் என நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ள­வேண்­டிய திருத்­தங்கள் அடங்­கிய பிரே­ரணை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் செய்தி தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், முஸ்லிம் விவாக விவா­க­ரத்து திருத்­தச்­சட்டம் தொடர்பில் ஆராய கடந்த 9 வரு­டங்­க­ளுக்கு முன்னர் நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்கை கடந்த வருடம் என்­னிடம் கைய­ளிக்­கப்­பட்­ட­போதும் அதில் இரு வேறு அறிக்­கைகள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. குறிப்­பிட்­ட­தொரு சம­யத்­துடன் தொடர்­பு­பட்ட விடயம் என்­ற­ப­டி­யாலும் நான் ஒரு முஸ்லிம் பிரஜை அல்ல என்­ப­தாலும் என்னால் இது தொடர்­பாக தீர்­மானம் ஒன்­றுக்கு வர­மு­டி­யா­தி­ருந்­தது. இதனால் இது­தொ­டர்­பாக பொது­வான இணக்­கப்­பா­டொன்றை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்டும் என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை சந்­தித்து தெரி­வித்­தி­ருந்தேன்.

அதன் பிர­காரம் கடந்த வாரம் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்ற வளா­கத்தில் இது தொடர்­பாக கலந்­து­ரை­யாடி, சில திருத்­தங்­களை மேற்­கொள்ள இணக்­கப்­பாட்­டுக்கு வந்­தி­ருப்­ப­தாக அறி­வித்­தி­ருந்­தனர். எனினும் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய பிரே­ரணை என்­னிடம் இது­வரை கைய­ளிக்­க­வில்லை. என்­றாலும் இது­தொ­டர்­பாக எனது அமைச்சும் முஸ்லிம் விவ­கார அமைச்சும் இணைந்து ஒரு அமைச்­ச­ரவை பத்­திரம் தயா­ரித்து அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கவே எதிர்­பார்க்­கின்றோம் என்றார்.

இது தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைஸர் முஸ்­த­பா­விடம் வின­வி­ய­போது, முஸ்லிம் விவாக விவா­க­ரத்து திருத்­தச்­சட்ட மூலத்தில் மேற்­கொள்­ள­வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­று­கூடி ஆராய்ந்து பொது­வான இணக்­கப்­பாட்­டுக்கு வந்தோம். குறிப்­பாக பெண்­களின் திரு­மண வயதை 18ஆக அதி­க­ரித்தல், பெண் காதி நீதி­வான்­களை நிய­மித்தல், விவாக அத்­தாட்சிப் பத்­தி­ரத்தில் பெண்ணும் கைச்­சாத்­திடல் மற்றும் காதி நீதி­வான்­களை நிய­மிக்­கும்­போது கடைப்­பி­டிக்­க­வேண்­டிய தகை­மை­களை அதி­க­ரித்தல் போன்ற விட­யங்­க­ளுக்கு அனை­வரும் இணக்கம் தெரி­வித்­தனர்.

தற்­போது இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருக்கும் விட­யங்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு நீதி அமைச்­ச­ருடன் இணைந்து முஸ்லிம் விவ­கா­ரத்­துக்கு பொறுப்­பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ஹலீம் அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்றை தயா­ரிக்­க­வேண்டும். அத்­துடன் திருத்தம் மேற்­கொள்­ள­வேண்­டிய விட­யங்கள் தொடர்பில் முஸ்லிம் சமூ­கத்­துடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­ள­வேண்டும் என அமைச்சர் ஹலீம் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

கலந்துரையாடுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் தொடர்ந்து இதனை காலம் தாழ்த்தாமல் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் நீதி அமைச்சுடன் இணைந்து அமைச்சரவை பத்திரம் தயாரித்த பின்னர், அதுதொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இறுதித் தீர்மானத்துக்கு வரவே எதிர்பார்க்கின்றோம் என்றார்.

எம்.ஆர்.எம்.வஸீம்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.