ரிஷாதுக்கு எதிராக ரதன தேரர் பிரேரணை கொண்டுவந்தால் அதனையும் தோற்கடிப்போம்

இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார

0 941

அமைச்சுப் பத­வியை இரா­ஜி­னாமா செய்த ரிஷாத் பதி­யுதீன் மீண்டும் அமைச்சுப் பத­வியை ஏற்கும் போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்­கெ­தி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்டு வரு­வா­ரே­யானால் அதனைத் தோற்­க­டிக்க ஐ.தே.க. ஒரு போதும் பின் வாங்க மாட்­டாது என மாத்­தளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் விவ­சா­யத்­துறை இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான வசந்த அலு­வி­ஹார தெரி­வித்தார்.

இரா­ஜாங்க அமைச்சர் வசந்த அலு­வி­ஹார தான் அர­சி­ய­லுக்குக் கால் பதித்து முப்­பது வருட பூர்த்­தியை முன்­னிட்டு மாத்­தளை “சுவிஸ்டேல்” ஹோட்டல் மண்­ட­பத்தில் நடாத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரி­வித்த இரா­ஜாங்க அமைச்சர்,

கடந்த வாரம் ஜே.வி.பி.யினர் ஆட்­சி­யி­லி­ருக்கும் அர­சுக்­கெ­தி­ராக களுத்­து­றை­யி­லி­ருந்து மாபெரும் பேர­ணியை நடத்­தி­விட்டு ஐ.தே.க. ஆட்­சியை வீட்­டுக்கு அனுப்­புவோம் என பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை முன்­வைத்­தது. ஜே.வி.பி.யின் இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஐ.தே.க.வும் ஏனைய கட்­சி­களின் ஒற்­று­மை­யோடு படு­தோல்­வி­ய­டையச் செய்தோம். ரிஷாத் பதி­யு­தீ­னுக்­கெ­தி­ராக அத்­து­ர­லிய ரதன தேரர் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வந்தால் ஜே.வி.பி.யினர் தழுவிக் கொண்ட இதே படு­தோல்­வியை அவரும் தழுவிக் கொள்ள நேரிடும் என்­பதை ரதன தேரர் தெளி­வாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஐ.தே.க. இந்­நாட்­டி­லி­ருக்கும் பழைமை வாய்ந்த அர­சியல் கட்சி. ஐ.தே.கட்­சிக்­கென ஒரு அர­சியல் வர­லாறு உள்­ளது. அதற்­கென ஒரு அர­சியல் கொள்கை உள்­ளது. நீண்ட அர­சியல் வர­லாற்­றுடன் தீர்க்­க­மான அர­சியல் கொள்­கை­க­ளை­யு­டைய ஐ.தே.க வையும், அதனைச் சார்ந்த அமைச்­சர்­க­ளையும் ஒரு சில சந்­தர்ப்­ப­வாத மற்றும் இன­வாத அர­சி­யல்­வா­தி­க­ளிடம் தாரை வார்க்­கவோ, சர­ணா­கதி அடையச் செய்­யவோ ஐ.தே.க.வைச் சார்ந்த நாம் ஒரு­போதும் தயா­ரில்லை. அதற்கு ஒரு­போதும் நாம் இட­ம­ளிக்­கவும் மாட்டோம்.

கடந்த வாரம் ஜே.வி.பியினர் அர­சுக்­கெ­தி­ராக கொண்டு வந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்கச் செய்து ஜே.வி.பி.யினரை எவ்­வாறு முழங்­காலில் இருக்கச் செய்­தோமோ அமைச்சுப் பத­வியை மீண்டும் பொறுப்­பேற்கும் ரிஷாத் பதி­யு­தீ­னுக்­கெ­தி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்டு வந்தால் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பலத்­துடன் அதனைத் தோற்­க­டிக்கச் செய்து எமது ஆட்­சியில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் கௌர­வத்தை நிச்­சயம் நாம் பாது­காப்போம்.

பத­வி­யி­லி­ருக்கும் இந்த ஆட்­சியை எந்த அர­சியல் ஜாம்­ப­வான்­க­ளி­னாலும் இல­குவில் கவிழ்க்க முடி­யாது. அடுத்து நடை­பெற உள்ள பாரா­ளு­மன்றத் தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெற உள்­ளது.

இதில் கடந்த காலங்­களைப் போன்று பொது அபேட்­சகர் என்ற சொல்­லுக்கே இட­மில்லை. ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐ.தே.கட்சி அபேட்­ச­கர்கள் பற்றி பல­ரது பெயர்கள் பேசப்­பட்ட போதும் எமது கட்­சியின் நிறை­வேற்றுக் குழுவின் முடிவே இறுதி முடி­வாகும். ஐ.தே.கட்சி முன்­வைக்­கின்ற ஜனா­தி­பதி அபேட்­ச­க­ரையே வெற்றி பெறச் செய்­யும்­படி நாம் இந்­நாட்டு வாக்­கா­ளர்­களை கேட்டுக் கொள்வோம்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உட்­பட அனைத்து எதி­ரணி அர­சியல் கட்­சிகள் ஒன்­றாக இணைந்து ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒரு அபேட்­ச­கரை முன்­னி­றுத்­தி­னாலும் கூட அந்த அபேட்­ச­க­ரையும் அந்த எதி­ரணிக் கட்­சி­க­ளையும் படு­தோல்­வி­ய­டையச் செய்து ஐ.தே.க.வின் ஜனா­தி­பதி அபேட்­ச­கரை வர­லாறு காணாத வெற்­றியை பெற்றுக் கொடுப்போம்.

முக்­கி­ய­மாக இன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூட 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 08 ஆம் திகதி ஐ.தே.க.வின் பாரிய தய­வு­ட­னேயே ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்றார் என்­பதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மறந்து விட்­டாலும் இந்­நாட்டு தமிழ், முஸ்லிம், பௌத்த மற்றும் ஏனைய மதத்­தினர் இன்றும் மறந்து விட­வில்லை என்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சி அபேட்சகர் வெற்றி பெற்று நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுக் கொள்வார். ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக் கொண்டு வந்தால் அதனையும் தோல்வியடையச் செய்து எதிரணியினரின் அரசியல் கொட்டத்தை அடக்கி வைப்போம் எனவும் இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார மேலும் கூறினார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.