முஸ்லிம்கள் தொடர்பிலான கருத்து முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

உலமா சபை பிரதிநிதிகளிடம் அஸ்கிரிய பீடாதிபதி எடுத்துரைப்பு

0 603

முஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­த­லை­வர்­களும் கலந்­து­ரை­யாடித் தீர்த்­துக்­கொள்வோம். இது மதத்­த­லை­வர்­களின் பொறுப்­பாகும். இதற்­கான பேச்­சு­வார்த்­தை­களைத் தொடர்ந்தும் நடத்­துவோம். சந்­தே­கங்­களைத் தீர்த்­துக்­கொள்வோம் என அஸ்­கி­ரிய பீடா­தி­பதி வர­கா­கொட ஞான­ர­தன மகா­நா­யக்­க­தேரர் தன்னைச் சந்­தித்த உல­மாக்­க­ளிடம் தெரி­வித்தார்.

உலமா சபையின் பிர­தி­நி­திகள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை காலை கண்டி அஸ்­கி­ரிய பீடா­தி­பதி வர­கா­கொட ஞான­ர­தன மகா­நா­யக்க தேரரை கண்­டியில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­னார்கள். நாட்டில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களையடுத்து முஸ்லிம் சமூகம் சந்­தே­கிக்­கப்­ப­டு­வ­தா­கவும், பல்­வேறு சவால்­க­ளுக்குட் படுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், ஒரு குறிப்­பிட்ட குழு­வி­னரே இந்த கொடூர செயலில் ஈடு­பட்­ட­தா­கவும் இதற்கு முஸ்லிம் சமூகம் பொறுப்­பா­ன­தல்ல எனவும் உல­மாக்கள் அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்க தேர­ரிடம் எடுத்து விளக்­கி­னார்கள். அப்­போதே அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர் இவ்­வாறு கூறினார்.

இந்தச் சந்­திப்­பினை நாவின்ன ரஜ­ம­கா­வி­காரை விகா­ரா­தி­பதி பரா­முர நன்­தா­னந்த தேரர் ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.

அங்கு உல­மாக்கள் அஸ்­கி­ரிய பீடா­தி­ப­தி­யிடம் கருத்து தெரி­விக்­கையில்;
ஒரு­சில குறிப்­பிட்ட தேரர்கள் உலமா சபை­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தக்­கூ­டாது எனத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள். ஆனால் அப்­ப­டி­யா­ன­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­து­வ­தற்கு நாம் விரும்­ப­வில்லை. அஸ்­கி­ரிய, மல்­வத்து மற்றும் ராமன்ய நிகாய தலை­வர்­க­ளு­ட­னேயே பேச்­சு­வார்த்­தைகள் நடத்தி தற்­போது நிலவும் பிரச்­சினை களுக்கும் சந்­தே­கங்­க­ளுக்கும் தீர்­வு­காண விரும்­பு­கிறோம். இன்று முஸ்­லிம்­களை தவ­றாக விமர்­சிக்­கி­றார்கள். தீவி­ர­வா­தி­க­ளாக சந்­தே­கிக்­கி­றார்கள். இவை நிறுத்­தப்­பட வேண்டும் என வேண்­டிக்­கொண்­டார்கள்.

குர்ஆன் மொழி­பெ­யர்ப்புப் பிரதி அஸ்­கி­ரிய பீடா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­ட­துடன் குர்ஆன் மற்றும் சில ஆயத்­து­க­ளுக்­கான தெளி­வு­களும் வழங்­கப்­பட்­டன. தேசிய ஒற்­றுமை, இனங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்கம் தொடர்­பாக உலமா சபை வெளி­யிட்ட சிங்­கள மொழி­யி­லான நூல்­களும் கைய­ளிக்­கப்­பட்­டன.

அஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­வ­தற்கு உல­மாக்கள் தொப்­பியைக் கழற்­றிய பின்பு அனு­ம­திக்­கப்­பட்­டனர். அது சம்­பி­ர­தா­ய­மென்று தெரி­விக்­கப்­பட்­டது.
சந்­திப்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் உப செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம், உப தலைவர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன், கண்டி மாவட்ட ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் உப தலைவர் பஸ்ருல் ரஹ்மான் மற்றும் உறுப்­பி­னர்­க­ளான அஷ்ஷெய்க் பாசில் பாரூக், அஷ்ஷெய்க் பரீத், அஷ்ஷெய்க் கபீர், அஷ்ஷெய்க் லரீப், அஷ்ஷெய்க் ஹைதர் அலி, அஷ்ஷெய்க் ஹாசிம் ஷுரி ஆகியோர் கலந்து கொண்­டனர்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.