அமைச்­சு­களை பொறுப்­பேற்க நாங்கள் அவ­சரப்­படமாட்டோம்

அ.இ.ம.கா. திட்டவட்டம்

0 635

அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­துள்ள அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீண்டும் தங்கள் அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்றுக் கொள்­வார்கள். ஆனால் அவ­ச­ரப்­பட மாட்­டார்கள் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் செய­லாளர் எஸ். சுபைதீன் தெரி­வித்தார். 

ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்­க­ர­வாத தாக்­கு­த­லை­ய­டுத்து கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வகித்த அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தனர். இதன்­போது, அ.இ.ம.கா. ஒரு அமைச்­ச­ரவை அமைச்­சையும் ஒரு இரா­ஜாங்க அமைச்­சையும் மற்றும் ஒரு பிரதி அமைச்சுப் பத­வி­யையும் துறந்­தது. இந்­ந­ிலையில் கடந்த வியா­ழக்­கி­ழமை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்றில் அமைச்­சுப்­பொ­றுப்பை மீள ஏற்றல் மற்றும் சமகாலப் பிரச்­சி­னைகள் குறித்து பாரா­ளு­மன்றில் கலந்­தா­லோ­சித்­தனர். இதன் பின்னர் மீண்டும் அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்­ப­தாக தீர்­மானம் மேன்­கொள்­ளப்­பட்­டது.

இவ்­வாறு மீண்டும் அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்­பது தொடர்பில் அ.இ.ம.கா. செய­லா­ள­ரி­டம் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் “இது தொடர்­பான பேச்சு வார்த்­தைகள் நடை­பெ­று­கின்­றன. கலந்­தா­லோ­சிக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் எப்போது அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பது என்று இதுவரை தீர்மானிக்கப்படவில்லை” என்றார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.