கல்­முனை தமிழ் உப பிர­தேச செய­லக விவ­கா­ரமும் வாதப்­பி­ர­தி­வா­தங்­களும்

0 869

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் மறைந்த தலை­வ­ரான முன்னாள் அமைச்­ச­ரான எம்.எச்.எம்.அஷ்­ர­பினால் இலங்கை வாழ் முஸ்­லிம்­களின் முக­வெற்­றிலை எனவும், தென்­கி­ழக்கு அலகின் தலை­ந­க­ரமும் என அழைக்­கப்­பட்ட கல்­முனை நகர், அண்மைக் கால­மாக நாட்டில் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்ள விட­யங்­களில் ஒன்­றாக­வுள்­ளது.

இதற்கு பிர­தான காரணம் கல்­முனை உப பிர­தேச செய­லக விட­ய­மாகும். இது தொடர்­பாக கடந்த புதன்­கி­ழமை (10) பாரா­ளு­மன்­றத்­திலும் கடும் வாதப் பிர­தி­வா­தங்கள் இடம்­பெற்­றன.

எவ்­வா­றா­யினும் இந்த உப பிர­தேச செய­லகம் 1989ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் விடு­தலைப் புலி­க­ளினால் ஆயு­த­மு­னையில் உரு­வாக்­கப்­பட்­டது என்ற வர­லாற்­றினை பலர் இன்று மறந்­து­போ­யுள்­ளனர்.

இன்­று­வரை உப பிர­தேச செய­ல­க­மாக செயற்­படும் இதனை, கல்­முனை தமிழ் பிர­தேச செய­லகம் மற்றும் கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் என அழைக்­கப்­ப­டு­கின்­றமை சட்­ட­ரீ­தி­யற்ற ஒரு செயற்­பா­டாகும்.

வரவு – செலவுத் திட்டம் அல்­லது அர­சாங்­கத்­திற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை போன்ற சந்­தர்ப்­பங்­க­ளி­லேயே இந்த சட்ட ரீதி­யற்ற உப பிர­தேச செய­லக விடயம் பேசு­பொ­ரு­ளாக மாறும்.

தமது அர­சியல் எதிர்­கா­லத்­தினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு குறித்த சந்­தர்ப்­பங்­க­ளி­லேயே இந்த விட­யத்­தினை தமிழ் அர­சி­யல்­வா­திகள் கையி­லெ­டுக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இந்த உப பிர­தேச செய­ல­கத்­தினை தர­மு­யர்த்­து­வ­தற்கு கல்­முனை வாழ் முஸ்­லிம்கள் ஒரு­போதும் எதிர்க்­க­வில்லை. ஆனால் இதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்­ப­தாக தமிழ் அர­சி­யல்­வா­திகள் போலிக் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றனர்.

இதற்கு முன்னர் நிந்­த­வூ­ரி­லி­ருந்து காரை­தீவும், அக்­க­ரைப்­பற்­றி­லி­ருந்து ஆலை­ய­டி­வேம்பும், சம்­மாந்­து­றை­யி­லி­ருந்து நாவி­தன்­வெளி ஆகிய பிர­தே­சங்கள் பிரிந்து சென்று தனி­யான பிர­தேச செய­ல­கங்கள், தனி­யான உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் உரு­வாக்­கப்­பட்­டன.

இதன்­போது, குறித்த பிர­தே­சங்­க­ளினைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் ஒரு­போதும் எதிர்க்­க­வில்லை. மாறாக ஆத­ர­வி­னையே வழங்­கினர். அவ்­வாறு அப்­பி­ர­தே­சங்­க­ளி­லுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்த்­தி­ருந்தால் இன்று தனிப் பிர­தேச செய­ல­கங்­களோ, தனி­யான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களோ உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­க­மாட்­டாது. அத்­துடன் அதன் ஆட்சி அதி­கா­ரங்­களை தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு அலங்­க­ரித்­தி­ருக்­க­வு­மாட்­டாது.

கல்­மு­னையில் தமி­ழர்­க­ளுக்­கென்று தனி­யான பிர­தேச செயலகம் கோரும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் தமிழ் –- முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் தோப்­பூ­ரிற்கு தனி­யான பிர­தேச செய­லகம் உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து வரு­கின்­றது.

அத்­துடன் மாத்­திரம் நின்­று­வி­டாமல் தோப்பூர் பிர­தேச செய­லகம் உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வரும், திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கு பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­க­விற்கும் கடி­தமும் எழு­தி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

எவ்­வா­றா­யினும், கடந்த 30 வரு­டங்­க­ளாக செயற்­படும் இந்த உப பிர­தேச செய­ல­கத்­தினை பிர­தேச செய­ல­க­மாக தர­மு­யர்த்தி கொடுப்­ப­துடன் தமிழ் மக்­க­ளுக்­கான நக­ர­சபை ஒன்­றையும் உரு­வாக்கி கொடுக்க முஸ்­லிம்கள் தயா­ரா­க­வுள்­ளனர். இது தொடர்பில் கல்­முனை தொகுதி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான எச்.எம்.எம்.ஹரீஸ் பகி­ரங்­க­மாக ஊட­கங்­களில் அறி­வித்­துள்ளார்.
இதற்கு மேல­தி­க­மாக, தற்­போது செயற்­படும் கல்­முனை உப பிர­தேச செய­லக கட்­டிடம், குவைத் நாட்டின் நிதி­யு­த­வி­யுடன் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது என்ற உண்­மை­யினை யாரும் கூறு­வ­தில்லை.

இவ்­வா­றான நிலையில், கல்­முனை பிர­தேச செய­லகம் நிரந்­தரக் கட்­டி­ட­மொன்­றில்­லாமல் கடந்த பல தசாப்­தங்­க­ளாக கல்­முனை மாந­ரக சபை கட்­டி­டத்தில் இயங்கி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இப்­ப­டி­யான விட­யங்­களை மூடி மறைத்­து­விட்டு, கல்­முனை உப பிர­தேச செய­ல­கத்­தினை தரமு­யர்த்த முஸ்­லிம்கள் எதிர்ப்­ப­தாக தமிழ் அர­சி­யல்­வா­திகள் கூறி வரு­வ­துடன் மாத்­திரம் நின்­று­வி­டாது, கல்­மு­னையில் முஸ்­லிம்கள் நிலத் தொடர்­பற்ற நிலை­யிலும், தமி­ழர்கள் நிலத் தொடர்­புள்ள ரீதி­யிலும் வாழ்ந்து வரு­கின்­றனர் என்ற பொய்­யான தக­வல்­களை முன்­வைக்­கின்­றனர்.

கல்­முனை பிர­தேச செய­லகம் மற்றும் உப பிர­தேச செய­லகம் ஆகிய இரண்டும் தற்­போது நிலத் தொடர்­பற்ற ரீதி­யி­லேயே செயற்­ப­டு­கின்­றன.
இவ்­வா­றான நிலையில் கடந்த பல தசாப்­த­மாக கல்­முனை பிர­தே­சத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மிக ஒற்­று­மை­யாக வாழ்ந்து வரு­கின்­றனர். அத்­துடன் வியா­பாரம், மருத்­துவம், பொதுச்­சேவை உள்­ளிட்ட அனைத்து வித­மான நட­வ­டிக்­கை­க­ளிலும் இரு சமூ­கமும் பின்னிப் பிணைந்தே வாழ்ந்து வரு­கின்­றன.
இவ்­வா­றுள்ள மக்­களை பிரிக்கும் நோக்கில் சில அர­சி­யல்­வா­தி­க­ளினால் இந்த கல்­முனை விவ­காரம் இன்று கையில் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு மேல­தி­க­மாக கல்­முனை உள்­ளிட்ட அம்­பாறை மாவட்­டத்தின் அர­சியல் அதி­காரம் கடந்த பல தசாப்­த­மாக தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் கையி­லுள்­ளது.

இதனை பறிக்க வேண்­டு­மென்ற அடிப்­ப­டையில் பலர் இன்று கல்­மு­னையில் கள­மி­றங்­கி­யுள்­ளனர். அதில் ஒரு­வர்தான் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அமல் என செல்­ல­மாக அழைக்­கப்­படும் எஸ். வியா­ழேந்­திரன்.
இதற்கு ஒரு உதா­ரணம் தான், கடந்த ஜூன் மாதம் கல்­மு­னையில் இடம்­பெற்ற உண்­ணா­வி­ரதத்­திற்கு அமைச்­சர்­க­ளான தயா கமகே, மனோ கணேசன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் வருகை தந்­த­போது, கூச்­ச­லி­டப்­பட்டு வெளி­யேற்­றப்­பட்­ட­மை­யாகும். அத்­துடன் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் கல்­முனை மாந­கர சபை உறுப்­பி­னர்­களும் இந்த விட­யத்தில் அமைதிப் போக்­கினை கடைப்­பி­டிப்­ப­த­னையே அவ­தா­னிக்க கூடி­ய­தா­க­வுள்­ளது.

இதே­வேளை, நாட்டில் மிகவும் பின்­தங்­கிய மாவட்­ட­மான மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய அடிப்­படைத் தேவைகள் பல உள்ள நிலையில் அவற்­றினை கவ­னிக்­காது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வியா­ழேந்­திரன், கல்­முனை விவ­கா­ரத்தில் மூக்கு நுழைத்­துள்­ளமை பாரிய சந்­தே­க­மொன்றை தோற்­று­வித்­துள்­ளது.

அத்­துடன் அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் எஸ்.வியா­ழேந்­திரன் அம்­பாறை மாவட்­டத்தில் போட்­டி­யி­ட­வுள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.
இவ்­வா­றான நிலையில் இந்த உப பிர­தேச செய­ல­கத்­தினை எவ்­வா­றாவது தர­மு­யர்த்த வேண்டும் என்ற அடிப்­ப­டையில் தமிழ் தரப்­பி­னரால் இறு­தி­யாக கையி­லே­டுத்த விட­யமே கல்­முனை விகா­ரா­தி­ப­தியின் பங்­கு­பற்­ற­லு­ட­னான உண்­ணா­வி­ர­த­மாகும்.

இந்த உண்­ணா­வி­ர­தத்­தினை அடுத்தே இந்த விடயம் நாட்டின் பேசு­பொ­ரு­ளாக மாறி­யது. இத­னை­ய­டுத்து பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ர­லிய ரதன தேரர் ஆகியோர் கல்­மு­னைக்கு விஜயம் மேற்­கொண்­டனர்.

இதன்­போது, முஸ்லிம் தரப்­பினர் – குறித்த இரு தேரர்­க­ளையும் சந்­தித்து தம்­பக்க நியாயங்­களை முன்­வைத்­தனர். இதனை இரு தேரர்­களும் ஏற்­றுக்­கொண்­டனர்.

இதே­வேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் வாழும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக தமிழ் மக்­க­ளி­னாலும்; விடு­தலைப் புலி­க­ளி­னாலும் பல்­வேறு செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்கப்­பட்­டன.

இந்த சந்­தர்ப்­பங்­களில் முஸ்லிம் மக்கள் ஒரு­போதும், பௌத்த தேரர்­களை நாடிச் சென்ற வர­லா­றில்லை. இவ்­வாறு செல்­வ­தற்கு பல்­வேறு சந்­தர்ப்­பங்கள் அமையப் பெற்­றன. எனினும் எமது சகோ­தர இன­மான தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக செயற்­படக் கூடாது என்­பதில் முஸ்­லிம்கள் கண்ணும் கருத்­து­மாக செயற்­பட்­டனர்.

எனினும், ஈஸ்டர் தற்­கொலை தாக்­கு­த­லினை சாத­க­மாகக் கொண்டு உப பிர­தேச செய­லக தர­மு­யர்த்தல் விட­யத்தில் சில தனி­ந­பர்­களின் நிகழ்ச்சி நிர­லுக்­காக முஸ்லிம் சமூ­கத்­தினை பௌத்த தேரர்­க­ளிடம் காட்­டிக்­கொ­டுக்க முயற்­சித்­த­மை­யினால் இன்று முழு தமிழ் சமூ­க­முமே தலை­கு­னிய வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, கல்­முனை உப பிர­தேச செய­லக தர­மு­யர்த்தல் விட­யத்தில் கல்­முனை வாழ் முஸ்லிம் மக்கள் தம்­பக்க நியா­கங்­களை மக்கள் மயப்­ப­டுத்த தவ­றி­விட்­டனர். இது­வொரு கவ­லை­யான செயற்­பா­டாகும்.

அதா­வது, இந்த விட­யத்தில் தமிழ் தரப்பு மற்றும் சாய்ந்­த­ம­ருது பெரிய பள்­ளி­வாசல் ஏதா­வ­தொரு விட­யத்­தினை முன்­வைத்தால் அதற்கு எதி­ராக கல்­முனை வாழ் முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் செயற்­ப­டு­வதும் பின்னர் இந்த விவ­கா­ரத்­தினை மறந்­து­வி­டு­வதும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே அவர்கள் செயற்­பட்­டனர்.

எவ்­வா­றா­யினும் கடந்த மாதம் இடம்­பெற்ற உண்­ணா­வி­ரத செயற்­பாட்­டினை அடுத்து கல்­முனை வாழ் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மற்றும் புத்­தி­ஜீ­விகள் இணைந்து, தம்­பக்க நியாயங்­களை மக்கள் மயப்­ப­டுத்தி வரு­கின்­றனர். இதன் ஓர் அங்கமாகவே சம்மாந்துறை, பொத்துவில், அட்டாளைச்சேனை மற்றும் ஓட்டமாவடி ஆகிய பிரதேச மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை அண்மையில் வழங்கியமையாகும். இதுவொரு காலங்கடந்த செயற்பாடென்றாலும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

இந்த விடயத்தில் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். கல்முனை வர்த்தக சங்கம், கல்முனை அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் கல்முனை வாழ் முஸ்லிம் புத்திஜீவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் இந்த விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸுடன் இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இந்த உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும். இதற்கு இரு சமூகத்தினரும் சில விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் மீண்டுமொரு போராட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் ஆளும் அரசாங்கமும் நல்லதொரு தீர்மானமொன்றை எடுத்து இரு சமூகங்களும் ஒற்றுமையாக வாழ வழியமைக்க வேண்டும்.

றிப்தி அலி

vidivelli

Leave A Reply

Your email address will not be published.