ஒரே நாடு ; ஒரே சட்டம்?

0 970

இலங்கை இயற்கை வளங்­களை நிறை­வாகக் கொண்ட ஓர் அழ­கிய நாடு. ஒரு சிறிய நாடாக இருந்த போதும் பௌத்தம், ஹிந்து, கிறிஸ்­தவம், இஸ்லாம் என்ற நான்கு மதங்­களைக் கொண்ட நாடு அது. அத­னது இந்தப் பன்­மைத்­துவம் பல­வீ­ன­மாக அன்றி நாட்டைக் கட்­டி­யெ­ழுப்பும் பல­மா­கவே கொள்­ளப்­பட வேண்டும்.

உண்­மையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்­பது நல்­ல­தொரு அழ­கான கோஷம் என்­பதில் சந்­தே­க­மில்லை. ஒரு நாட்டின் அனைத்து சமூ­கங்­களும் இணக்­கப்­பாட்­டுடன் வாழ்­வதில் அதற்கு ஒரு பங்­க­ளிப்பு இருக்­கி­றது என்­ப­திலும் சந்­தே­க­மில்லை. இலங்­கையில் முஸ்லிம் சமூ­கமும் ஏனைய சமூ­கங்­களும் இவ்­வா­றா­ன­தொரு ஒரு­மைப்­பாட்­டுக்கு வர­வேண்டும் என்­பது ஒரு பெரிய எதிர்­பார்ப்­பாகும்.

எனினும், ஒவ்­வொரு சமூ­கத்­திற்கும் சில விஷேட கலா­சார, மார்க்க ஒழுங்­குகள் உள்­ளன என்­ப­தையும் யாரும் மறுப்­ப­தில்லை. பல சமூ­கங்­களும் நாடு­களும் இந்த உண்­மையை ஏற்று அங்­கீ­க­ரிக்­கின்­றன. இந்த விஷேட கலா­சார மார்க்க ஒழுங்­குகள் தனி­ம­னித வாழ்­வோடு சம்­பந்­தப்­ப­டு­கின்­ற­ன­வே­யன்றி பொது வாழ்­வோடு அவை சம்­பந்­தப்­ப­டு­வ­தில்லை என்­பது இங்கு கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்டும்.

இந்தப் பின்­ன­ணி­யி­லி­ருந்தே பல்­வேறு விஷேட சட்ட நகல்கள் நோக்­கப்­பட வேண்டும். இந்த வகையில் கண்­டிய சட்டம், தேச­வ­ழமைச் சட்டம், முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் என்ற சில விஷேட சட்ட ஒழுங்­குகள் இலங்­கையில் காணப்­ப­டு­கின்­றன. இலங்கை முஸ்­லிம்­களைப் பொறுத்த வரையில் அவர்கள் குற்­ற­வியல் சட்டம், வியா­பாரக் கொடுக்கல் வாங்­கல்கள் போன்ற பல்­வேறு பொதுச் சட்­டங்­களின் போது ஏனைய அனைத்து சமூ­கங்கள் போன்றே அவற்றை ஏற்று, கட்­டுப்­பட்டே வாழ்­கின்­றனர். அவர்கள் விஷே­ட­மாகப் பெற்­றி­ருக்கும் சட்ட ஒழுங்கு விவாகம், விவா­க­ரத்து என்ற சட்­டத்தின் ஒரு சிறிய பகு­தி­யே­யாகும்.

நிறைய நாடுகள் சமூ­கங்­களின் விஷேட மத, கலா­சார ஒழுங்­கு­களைக் கவ­னத்திற் கொண்டு தனிச் சட்­டங்­களை ஆக்கிக் கொடுத்­துள்­ளன. “தனியார் சட்ட ஒழுங்­கிற்­கேற்ப கிறிஸ்­த­வர்­களின் உரி­மை­களும் கட­மை­களும்” என்ற நூலை ஆக்­கிய கலா­நிதி பஸ்ஸாம் ஷஹாதீத் என்ற கிறிஸ்­தவ ஆய்­வா­ளரின் அந்நூல், அற­பு­லகின் கிறிஸ்­தவ சட்ட ஒழுங்­கு­களை ஆராய்­கி­றது. இந்­தி­யாவில் முஸ்­லிம்­க­ளுக்­கென தனி­யான முஸ்லிம் தனியார் சட்ட ஒழுங்கு காணப்­ப­டு­கி­றது. அவ்­வாறே பிலிப்­பைன்­ஸிலும் முஸ்லிம் தனியார் சட்ட ஒழுங்­குக்கு இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக 1973 பிலிப்பைன்ஸ் அர­சி­ய­ல­மைப்புக் கூறு­கி­றது. இந்­நி­லையில் இலங்­கையும் அவ்­வா­றா­ன­தொரு சட்ட ஒழுங்கைக் கொண்­டி­ருப்­பது ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற கருத்­திற்கு எதி­ரா­னது எனக் கொள்ளத் தேவை­யில்லை. அது அடுத்த சமூ­கங்­களின் தனித்­து­வங்­களை அனு­ம­தித்த சிறி­ய­தொரு விதி­வி­லக்கு என்றே கொள்­ளப்­பட வேண்டும்.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் சில பகு­தி­களில் சில விஷே­ட­மான, பொதுச் சட்­டத்தை விட்டு வித்­தி­யா­ச­மான ஒழுங்கை கொண்­டி­ருப்­ப­த­னா­லேயே ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற கருத்தை விட்டு சிறி­ய­தொரு விதி­வி­லக்கைப் பெறு­வது அவ­சி­ய­மா­கி­றது.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தைப் பொறுத்த வரை­யிலும் கூட சில விட­யங்கள் பொதுச் சட்­டத்­துடன் உடன்­படும் வகையில் திருத்­தங்­களை மேற்­கொள்ள முடியும்.  உதா­ர­ண­மாக திரு­மண வய­தெல்லை நிர்­ண­யத்தைக் குறிப்­பி­டலாம். அது 18 வய­தாக அமைய வேண்­டு­மென பொதுச் சட்­டத்­தோடு உடன்­படும் வகையில், முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை பரிந்­து­ரைக்­க­வென நீதி­ய­மைச்­சினால் நிய­மிக்­கப்­பட்ட குழு பரிந்­துரை செய்­துள்­ளது. எனினும் பல­தார மணம் என்ற விட­யத்தில் அது வித்­தி­யா­சப்­ப­டு­கி­றது. அங்கும் அவ­தா­னிக்­கத்­தக்க விடயம், அதனை அல்­குர்ஆன் பல ஷரத்­துக்­க­ளுடன் இறுக்­க­மா­கவே அனு­ம­திக்­கி­றது. அத்­தோடு திரு­மண ஒப்­பந்­தத்தின் போது மனைவி “தனக்குப் புறம்­பாக இன்­னொரு பெண்ணைத் திரு­மணம் முடிக்கக் கூடாது” என நிபந்­தனை இடலாம் என்­பது ஹன்­பலி மத்­ஹபின் கருத்­தாகும். சிரிய நாட்டு தனியார் சட்டம் இந்த அபிப்­பி­ரா­யத்தை ஏற்று சட்ட ஒழுங்­குக்கு கொண்டு வந்­துள்­ளது.

பல்­லின சமூக ஒழுங்­கொன்றில் அனைத்து சமூ­கங்­க­ளதும் கலா­சார மத தனித்­து­வங்­களை அங்­கீ­க­ரிப்­பதும், சகித்துக் கொள்­வதும் நாட்டின் ஸ்திர­மான, அமை­தி­யான வாழ்­வுக்கு அவ­சி­ய­மா­ன­தாகும். அது நாட்டின் முன்­னேற்­றத்­திற்கும் வளர்ச்­சிக்கும் அனைத்து சமூ­கங்­களும் தோளோடு தோள் நின்று உழைக்கும் மன­நி­லைக்கும் தூண்­டு­த­லாக அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

முஸ்லிம் தனியார் சட்­டத்தின் விவா­க­ரத்துப் பகு­தியில் சில தனி­யான போக்­குகள் உள்­ளன. அது மார்க்க வழி­காட்­ட­லோடு நேர­டி­யாகச் சம்­பந்­தப்­பட்ட பகு­தி­யாகும். அப்­ப­குதி நாட்டின் பொது வாழ்வைப் பாதிப்­பதோ அடுத்த சமூ­கங்கள் மீது மோச­மான தாக்­கத்தை விளைப்­பதோ அல்ல என்­பதே உண்­மை­யாகும்.

ஒரு சமூ­கத்தின் ஏதா­வ­தொரு, மத, கலா­சார ஒழுங்கு அடுத்த சமூ­கத்தின் மீது மோச­மான தாக்­கத்தை விளை­விக்­கு­மாயின் அல்லது ஏதோ ஒரு காரணத்தால் அதனைச் சகிக்க முடியாது என அடுத்த ஏதாவதொரு சமூகம் கண்டால் அந்நிலையில் அதனைத் தீர்க்க வன்முறைக்கோ அதிகாரத் திணிப்புக்கோ செல்லாது அழகானதொரு நீண்ட கலந்துரையாடலுக்குச் செல்வதே நாகரிகமான, பண்பாடான வழிமுறையாக அமையும்.!!

இவ்வழிமுறை ஓர் அறிவுப் பகிர்வாகவும் நாகரிகங்களுக்கிடையிலான கலந்துரையாடலாகவும் அமைந்து, நாட்டை சர்வதேச ரீதியாக முன்மாதிரி நாடாக முன்வைக்கும் என்பதே உண்மையாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.