முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான இன­வாத செயற்­பா­டு­களின் பின்­ன­ணியில் எதிர்க்­கட்சி

அரபு நாட்டுத் தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

0 685

நாட்­டி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகக் கடந்த சில மாதங்­க­ளாக தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் இன­வாத செயற்­பா­டு­களின் பின்­ன­ணியில் எதிர்க்­கட்சி செயற்­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன தெரி­வித்தார். இந்த இன­வாத செயற்­பா­டுகள் அடுத்த தேர்­தலை மையப்­ப­டுத்­தியே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் கொழும்­பி­லுள்ள இஸ்­லா­மிய நாடு­களின் கூட்­ட­மைப்பின் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்கும் இடை­யி­லான முக்­கிய சந்­திப்­பொன்று நேற்­று­முன்­தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றது.

இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இதே­வேளை, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆகி­யோரை கொழும்­பி­லுள்ள இஸ்­லா­மிய நாடு­களின் கூட்­ட­மைப்பின் இரா­ஜ­தந்­தி­ரிகள் நேற்­று­முன்­தினம் தனித்­த­னி­யாக சந்­தித்து பேச்சு நடத்­தி­யமை குறிப்­பி­டத்த­க்­கது. இலங்கை முஸ்­லிம்­களின் பாது­காப்பு தொடர்பில் அரபு நாட்டு இரா­ஜ­தந்­தி­ரிகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வரு­வ­தாக இந்த சந்­திப்­புக்­களின் போது தெரி­வித்­தனர். அத்­துடன் சகல இனங்­களும் சமா­தா­ன­மா­கவும் சக­வாழ்­வு­டனும் வாழ்­வ­தற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­யினை அர­சாங்கம் மேற்­கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் குறிப்­பிட்­டனர். இலங்­கைவாழ் மக்­க­ளி­டையே இன­வாத வன்­மு­றை­களை தடுப்­ப­தற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி மற்றும பிரதமர் ஆகியோரிடம் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இராஜதந்திரிகள் கூட்டாக கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.