எந்தவொரு முஸ்லிம் தலைவரும் தெரிந்துக் கொண்டே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கமாட்டார்கள்

'சலகுன' நிகழ்ச்சியில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி

0 913

உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாத தாக்­குதல் தொடர்பில் பார­பட்­ச­மற்ற விசா­ர­ணைக்கு வழி­விடும் வகையில் நீங்­களும் ஏனைய அமைச்­சர்­களும் பதவி வில­கி­னீர்கள். அதே­வேளை இது சம்­பந்­த­மாக ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­விலும் நீங்கள் அங்­கத்­துவம் வகிக்­கின்­றீர்கள். இது ஒன்­றுக்­கொன்று முர­ணா­ன­தாகத் தெரி­ய­வில்­லையா?

உயிர்த்த ஞாயிறு சம்­பவம் சம்­பந்­த­மாக விசா­ரணை நடாத்­து­வது எமது செயற்­பா­டல்ல. மாறாக இது எவ்­வாறு நடந்­தது, இந்த விட­யத்தில் எங்கே தவறு நடந்­தது என்­பதை ஆராய்­வதே இதன் முக்­கிய நோக்கம். அதன்­மூலம் எதிர்­கா­லத்தில் நிக­ழக்­கூ­டிய அபா­யங்­களைத் தவிர்ப்­பதே எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதை­வி­டுத்து குற்­ற­வாளி யாரென்று காட்­டிக்­கொ­டுப்­பதோ அல்­லது அது­பற்றி விமர்­சிப்­பதோ விசா­ர­ணையின் நோக்கம் கிடை­யாது. இப்­ப­டி­யான சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் நடந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக, அதற்கு முன்னர் எடுக்­கக்­கூ­டிய பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அறி­விப்­பதே அவ­சி­ய­மாக உள்­ளது.

நீங்கள் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் கலந்து கொள்­ளாது விட்டால் நன்­றாக இருக்­கு­மென்று தோன்­ற­வில்­லையா?

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்ட தெரி­வுக்­கு­ழுவை அமைப்­பது சம்­பி­ர­தா­ய­மா­ன­தொரு விடயம். கட்­சி­களின் எண்­ணிக்­கையைப் பொறுத்து சபா­நா­ய­க­ரினால் குழு அங்­கத்­த­வர்கள் நிய­மிக்­கப்­ப­டுவர். குறித்த தெரி­வுக்­குழு அமைக்­கப்­பட வேண்­டு­மென பிரே­ரித்த இரு கட்­சி­களின் உறுப்­பி­னர்கள் இதில் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. இத­ன­டிப்­ப­டையில் பாரா­ளு­மன்­றத்தின் பெரும்­பான்மை இந்த தெரி­வுக்­கு­ழுவை காலத்தின் தேவை­க­ருதி நிய­மனம் செய்­துள்­ளது.

இத்­தாக்­குதல் சம்­ப­வத்­தோடு பேசப்­படும் சிலரும் உங்­க­ளுடன் சேர்ந்து பதவி வில­கி­யுள்ள நிலையில், அவர்­களை தெரி­வுக்­கு­ழுவில் விசா­ரிக்க நேரி­டும்­போது உங்கள் நிலைமை என்­ன­வாக இருக்கும்?

எமது மனச்­சாட்­சிக்­கேற்ப நடந்து கொள்வோம். இதில் கட்சி அர­சியல் பார்க்­க­மாட்டோம். சிலர் அவ்­வாறு நினைக்­கலாம். நான் இதற்கு முன்­னரும் ஐந்­தாறு தெரி­வுக்­கு­ழுக்­களில் உறுப்­பி­ன­ராக இருந்­துள்ளேன். ஆனால், இந்த தெரி­வுக்­குழு கொஞ்சம் வித்­தி­யா­ச­மா­ன­துதான். எனது 25 வருட அர­சியல் அனு­ப­வத்தில் இரண்டு முறை­கள்தான் எதிர்க்­கட்சி இல்­லாத நிலையில் இருந்­துள்ளேன். ஸ்ரீயானி பண்­டா­ர­நா­யக்கவை உயர் நீதிமன்ற நீதியரசர் விசா­ரிக்­கும்­போது எதிர்­கட்­சியில் இருந்த ஐ.தே.க. அந்த தெரி­வுக்­கு­ழுவை புறக்­க­ணித்­தது. தற்­போ­தைய தெரி­வுக்­குழு அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்று பிரே­ரித்த இரண்டு முக்­கிய கட்­சி­களும் இம்­முறை இந்த தெரி­வுக்­கு­ழுவை புறக்­க­ணித்­துள்­ளன. நான் ஆரம்­பத்­திலும் சொன்­ன­து­போல இப்­போதும் அதே தீர்­மா­னத்­தி­லேயே இருக்­கிறேன்.

றிஷாத் பதி­யுதீன் சம்­பந்­த­மாக தெரி­வுக்­குழு விசா­ரணை நடத்­தக்­கூ­டாது. தெரி­வுக்­கு­ழுவை நிய­மிக்க முன்­னரே சபா­நா­ய­க­ரி­டமும் இது தொடர்பில் வேண்­டுகோள் விடுத்தேன். எதிர்க்­கட்சி தெரி­வுக்­கு­ழுவை புறக்­க­ணிப்­ப­தற்­கான முக்­கிய காரணம் றிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ரான கருத்­து­களே என்­பது வெளிப்­படை­யாகத் தெரியும். இந்­நி­லையில் நாம் எந்த தீர்­மா­னத்தை எடுத்­தாலும், அவர்­களின் முடிவு அர­சியல் மட்­டத்தில் இருக்­கலாம். சில­வேளை இந்த விசா­ர­ணை­களில் தமது குற்­றங்­களும் வெளிப்­பட வாய்ப்­புண்டு என்று நினைப்­பதால் மறக்­கா­ம­லி­ருக்கும் நிலை­யி­லுள்­ளார்கள் என்றும் நினைக்க இட­முண்டு.

எதிர்­பார்ப்­புகள் எப்­ப­டி­யி­ருப்­பினும் தெரி­வுக்­குழு பற்­றிய நம்­ப­கத்­தன்­மைக்கு பங்கம் ஏற்­ப­டக்­கூ­டாது. ஸ்ரீயானி பண்­டா­ர­நா­யக்­காவின் விட­யத்தில் இது நடந்­தது. அப்­போது எதி­ர­ணி­யி­லி­ருந்த ஐ.தே.க. இது­பற்றி விமர்­சித்து குற்­றம்­சாட்­டி­யது. அதே­போன்று இந்த சம்­ப­வத்­திலும் நடக்­கக்­கூ­டாது என்­பதே எனது குறிக்கோள். அது­போன்று இங்கே நடந்தால், நிச்­சயம் நான் தெரி­வுக்­கு­ழு­வி­லி­ருந்து விலகி நிற்பேன். கட்­டா­ய­மாக ஒரு பிர­தி­வாதம் ஏற்­படும். எனது நடு­நி­லை­மையை பற்­றிய சந்­தேகம் தோன்­றலாம்.

ஹிஸ்­புல்­லாஹ்வை விசா­ரிக்­கும்­போதும் உள்­ளூ­ராட்சி செய­லா­ளரை விசா­ரிக்­கும்­போதும் நீங்கள் நடந்து கொண்ட விதங்கள் உங்­க­ளது நடு­நி­லைமை பற்­றிய சந்­தே­கத்தை தோற்­று­விக்­கி­றதே?

தொலைக்­காட்சி விமர்­ச­னங்­களை பார்த்தேன். ஹிஸ்­புல்லாஹ் விப­ரங்­களை சொல்­லும்­போது அவற்றை நான் அமை­தி­யாக செவி­ம­டுத்துக் கொண்­டி­ருந்தேன். சில இடங்­களில் இடைக்­கி­டையே அவர் எமது பக்­கத்­துக்கு பந்தை குறி­வைப்­பதும் தெரிந்­தது.

நான் அவ­ரிடம் ஒரே­யொரு கேள்­விதான் கேட்டேன். குண்­டு­தாரி ஸஹ்ரான் ஏதேனும் ஒரு கட்­சியில் உறுப்­பி­ன­ராக இருந்­தாரா அல்­லது குறிப்­பிட்ட ஒரு கட்­சியின் ஆத­ர­வா­ள­ராக இருந்­தாரா என்று. அதற்­கவர் இல்­லை­யென்று சொன்னார். அத்­தோடு எனக்­கி­ருந்த பிரச்­சினை முடிந்­தது. அதன்­பின்னர் நான் அவ­ரிடம் எதுவும் கேட்கப் போக­வில்லை. அவர் உணர்ச்­சி­வ­சப்­பட்டு குழப்­ப­ம­டைந்த நிலையில் தன்­மீ­தான குற்­றச்­சாட்­டு­களை வேறொரு பக்­கத்­துக்கு திசை­தி­ருப்ப முயற்­சித்­தது தெரிந்­தது.

அதை விடுத்து வேறு கேள்­வி­க­ளுக்கு போக­வில்லை என்று நீங்கள் சொல்­கி­றீர்கள். ஹிஸ்­புல்­லாஹ் கூறி­ய­படி, முஸ்லிம் காங்­கிரஸ் உட்­பட எல்லா கட்­சிக்­கா­ரர்­களும் சஹ்­ரானின் உத­வியை தேடிச் சென்­றார்கள் என்று பயப்­ப­டு­கி­றீர்­களா?

இல்லை. அதில் பயப்­ப­டு­வ­தற்கு எந்தக் கார­ண­மு­மில்லை. ஆனால், ஒரு விட­யத்தை நாம் நினைவில் வைத்துக் கொள்­ள­வேண்டும். இந்த ஸஹ்ரான் எல்லாக் கட்­சி­க­ளு­டனும் ஒப்­பந்­தங்கள் செய்தார். தேர்தல் சம்­பந்­தப்­பட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளும்­போது இஸ்லாம் மார்க்­கத்­துக்கு ஏற்­ற­வாறு நடந்­து­கொள்ள வேண்டும் என்று அவர் கதைக்கத் தொடங்­கினார். இதைப்­பற்றி நான் அறிந்­த­போது, அவர் சொல்­வ­து­போல அர­சியல் செய்ய நம்மால் முடி­யாது என்று சொன்னேன். நாம் எமது கட்சிக் கீதத்தை இசைப்போம். மேடை போடுவோம். அவற்­றை­யெல்லாம் எம்மால் செய்­யா­தி­ருக்க முடி­யாது. ஏனைய கட்­சிகள் செய்­ப­வற்றை நாமும் நிச்­சயம் செய்­தாக வேண்டும் என்று சொன்னேன்.

அவ்­வா­றெனில் நீங்கள் வெளிப்­ப­டை­யாக அவ­ரது வேண்­டு­கோளை புறக்­க­ணித்­தி­ருக்­க­லாமே. உங்கள் பிர­தி­நிதி அவ­ரோடு இருக்­கின்றார். முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­குத்தான் சஹ்­ரானின் வாக்­குகள் விழுந்­தன என்று ஹிஸ்­புல்லா சொல்­கின்­றாரே?

எப்­படி அவ்­வாறு சொல்ல முடியும். மக்கள் இர­க­சி­ய­மான முறையில் வாக்­க­ளிக்­கின்­றனர். யார் யாருக்கு வாக்­க­ளித்­தார்கள் என்று யாராலும் சொல்­ல­மு­டி­யுமா? எல்­லோ­ரு­டனும் ஒப்­பந்­தம்­செய்த குண்­டு­தா­ரியோ அவ­ரது ஆத­ர­வா­ளர்­களோ இந்தக் கட்­சிக்­குத்தான் வாக்­க­ளித்­தார்கள் என்று எப்­படிச் சொல்­வது? அடுத்­த­தாக பயங்­க­ர­வா­திகள் எனப்­ப­டுவோர் எமக்கு வாக்­க­ளித்­தார்கள் என்­பதால் நாமும் பயங்­க­ர­வா­திகள் ஆகு­வ­தில்லை. இந்த பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் அனைத்தும் பின்­னொரு காலத்­திலே நடந்­துள்­ளன. இவர் பயங்­க­ர­வாதி என்­பது தெளி­வா­னது இப்­பொ­ழு­துதான். அப்­போது இல்­லையே. எனவே, இது­தொ­டர்பில் நாம் குழம்­பிக்­கொள்ளத் தேவை­யில்லை.

காத்­தான்­குடி நக­ர­சபை தலைவர் உட்­பட பலதும் சஹ்­ரானின் நட­வ­டிக்­கை­களின் தோற்றம் பற்றி பல இடங்­களில் பல­வா­றாக முறைப்­பாடு சொல்­கின்­றார்கள். 2015ஆம் ஆண்­டி­லி­ருந்தே இது­தொ­டர்பில் நீங்கள் அக்­கறை கொள்­ள­வில்­லையா? பயங்­க­ர­வா­தத்தை நோக்­கிய பயணம் என்று விளங்­க­வில்­லையா? கட்­சி­களை தன்­னிடம் வரு­மாறு அவர் ஆதா­ரத்­துடன் அழைத்­தி­ருக்­கிறார். இது சரி­யா­கப்­பட்­டதா?

இல்லை. காத்­தான்­குடி நகர சபைத் தலைவர் முறைப்­பாடு செய்­தது பின்னால் வந்த காலத்­தில்தான். சொல்­லப்­பட்ட காலத்தில் சஹ்­ரானின் தீவிரம் பற்­றிய விமர்­ச­னங்கள் இருந்­தாலும், அவ­ருக்­கென்று ஒரு வாக்­கு­வங்கி இருந்­தது. தேர்தல் வெற்­றிக்கு அது அவ­சியம். அதனை நோக்­க­மாகக் கொண்டே அர­சியல் கட்சி பிர­தி­நி­திகள் அவரை நாடிச் சென்­றி­ருக்­கலாம்.

தீவி­ர­வா­திகள் எனப்­ப­டு­வோரில் பல பிரி­வுகள் உள்­ளன. இவர்கள் அதில் கடைசிப் பிரி­வினர். தாம் சொல்­வதே சரி. அதை பிழை­யென யாரும் சொன்னால், அவர்­களை எதி­ரி­க­ளாக விமர்­சிப்­பார்கள். இந்த மாதி­ரி­யான நிலை­மை­களில் நாம் சுதா­க­ரித்­துக்­கொள்ள வேண்டும். ஏனெனில், தாம் விரும்­பு­வதை செய்­யா­தோரை கொலை செய்­ய­வேண்டும் என்ற பயங்­க­ர­வாத நிலைக்கு தள்­ளப்­ப­டு­கின்­றனர். இது மாதி­ரி­யான ஒரு நிலையைக் கண்டால் நாம் வில­கி­யி­ருப்­பதே புத்­தி­சா­லித்­தனம்.

இந்த நிலைக்கு சஹ்ரான் வரு­வ­தற்கு சில காலங்கள் சென்­றன. அந்த குறிப்­பிட்ட காலத்­தில்தான் அவ­ருக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. கல­கங்கள், அடி­தடி சம்­ப­வங்கள் நிகழ்ந்­தன. பொலிஸ் பிடி­யா­ணையும் பிறப்­பிக்­கப்­பட்­டது. அதன்­பின்னர் பயங்­க­ர­வாத குற்­றத்­த­டுப்பு பிரி­வி­னரால் நீல அறிக்­கையும் (Blue Notice), பின்னர் சர்­வ­தேச மட்­டத்தில் சிவப்பு அறிக்­கையும் (Red Notice) எடுத்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

2017இல் மட்­டக்­க­ளப்பு நீதி­மன்­றத்­தினால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டது. 2019இல் குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெ­று­கின்­றது. இந்த நீண்­ட­தொரு காலத்தில் உங்­க­ளது சமூ­கத்தை பாது­காப்­ப­தற்­காக, இவர்­க­ளுக்­கெ­தி­ரான நட­வ­டிக்கை பற்றி நீங்கள் கருத்திற் கொள்­ள­வில்­லையா? ஒரு அமைச்­ச­ராக இருந்த நிலையில் நீங்கள் இதில் கூடு­த­லான அக்­கறை செலுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மல்­லவா?

ஆம். நிச்­ச­ய­மாக. நான் விசே­ட­மாக இது­பற்றி விளித்துக் கொண்­டது மாவ­னல்லை புத்தர் சிலை உடைப்பின் பின்­னர்தான். நானும் அமைச்சர் கபீர் ஹாசிமும் இது­பற்றி பல­முறை கலந்­து­ரை­யா­டினோம். அமைச்­ச­ர­வையில் இரண்டு மூன்று தட­வைகள் இது­பற்றி கார­சா­ர­மாக அறி­வித்தோம். பிர­தமர் மற்றும் ஏனைய அமைச்­சர்­க­ளுடன் ஜனா­தி­ப­தி­யி­டமும் இது­கு­றித்து பேசினோம். இந்தக் குழுவைப் பற்றி எமக்கு ஒரு பீதி­யுண்டு. முஸ்­லிம்­களை பலிக்­க­டா­வாக்கி, நாட்டில் பாரிய அழிவை ஏற்­ப­டுத்த திட்­ட­மி­டு­கின்­றார்கள் என்­ப­தையும் அறி­வு­றுத்­தினோம்.

மாவ­னல்லை புத்தர் சிலை உடைப்­புதான் அனை­வரின் கவ­னத்­தையும் திரும்பச் செய்­தது. அதன்பின் வணாத்­த­வில்லு பகு­தியில் ஆயுதம், வெடி­பொ­ருட்கள் சிக்­கின. மாவ­னல்லை மற்றும் வணாத்­த­வில்லு சம்­பவங்­களில் தொடர்­பு­டை­ய­வர்­களை பாது­காக்கும் நோக்கில் அவர்­களை விடு­தலை செய்­வ­தற்­காக அர­சியல் சக்­திகள் முயற்சி செய்­த­தாக அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்­பிட்டார். நீங்கள் இரு­வரும் இது­பற்றி பேசி­ய­தாக குறிப்­பிட்­டீர்கள். அப்­ப­டி­யானால் இந்தப் பின்­ன­ணியில் செயற்­பட்ட அந்த அர­சியல் சக்தி யார்? பல­வந்­தப்­ப­டுத்­தி­யது யார்? ஏன் அதற்­கான விசா­ரணை இடையில் நிறுத்­தப்­பட்­டது?

அதைப் பற்றி குற்­றத்­த­டுப்பு பிரிவு அதி­கா­ரி­க­ளிடம் கேட்டு தெரிந்­து­கொள்ள முடியும். நமது தெரி­வுக்­குழு விசா­ர­ணை­க­ளின்­போது, இது சம்­பந்­த­மான விசா­ர­ணை­களை தெளி­வு­ப­டுத்­திக்­கொள்ளல் அவ­சியம். அதி­லி­ருக்­கின்ற ஒரு உய­ர­தி­கா­ரி­யோடு நான் கதைத்தேன். அப்­போது அவர் வேறொரு விடயம் சம்­பந்­த­மாக சொன்னார். இவர்கள் பாரி­ய­தொரு அழிவை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை தெரிந்து கொண்டோம்.

இவற்றை ஆராய்­வ­தற்கு 50 குழுக்கள் நாடு­மு­ழு­வதும் நிய­மிக்­கப்­பட்­டன.  யார் இதில் இருக்­கின்­றார்கள்? எவ்­வா­றான வகுப்­பு­க­ளுக்கு செல்­கின்­றார்கள்? இவர்கள் தமது வகுப்­பு­களில் சொல்லும் விட­யங்­களை நன்­றாக ஆராய்ந்து பார்த்தோம். இவர்கள் மார்க்­கத்தின் போர்­வையில் வேறொரு நாச­கார செயல்­க­ளுக்கு துணை­போ­னார்கள். அப்­ப­டி­யானால் அதனால் அவர்­களை எப்­ப­டி­யா­வது பிடிக்க வேண்டும் என்று நான் சொன்னேன். சஹ்ரான் என்ற பெய­ரையோ இவர்தான் என்று யாரையும் சுட்­டிக்­காட்­ட­வில்லை. மாவ­னல்லை இப்­றாகீம் மௌல­வியின் பிள்­ளைகள் இரண்டு பேர் பற்­றித்தான் கதைத்தார். அவர்­களின் மகன்கள் கம்­ப­ளையில் சப்­பாத்துக் கடையில் வைத்து சிக்­கினர்.

இவர்­க­ளுக்­கொரு அர­சி­யல்­வாதி அடைக்­கலம் கொடுத்­த­தாக சொல்­லப்­ப­டு­கி­றதே?

அது­பற்றி எனக்குத் தெரி­யாது. அது­பற்றி அதி­கா­ரி­க­ளி­டம்தான் கேட்க வேண்டும். ஆனால், ஒரு சம்­பவம் நடந்­தது. வணாத்­த­­வில்லு சம்­ப­வத்­தின்­போது தெரி­யாத்­த­ன­மாக அந்த இடத்­துக்குச் சென்ற ஒரு பாட­சாலை மாணவர் கைதான விடயம் சொல்­லப்­பட்­டது. அது­பற்றி பல வேண்­டு­கோள்கள் கிடைத்­த­தா­கவும் அது­பற்றி நான்­றாக விசா­ரித்துப் பார்த்­தபின், அவர் தற்­செ­ய­லாக வந்­தவர் என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டதால் அந்த மாண­வனை விடு­தலை செய்­த­தா­கவும் அந்த அதி­காரி என்­னிடம் தெரி­வித்தார்.

வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கைப்­பற்­றப்­பட்ட துப்­பாக்­கியைக் கொண்டே மட்­டக்­க­ளப்பு வவு­ண­தீவு பொலி­ஸாரை சுட்டுக் கொன்­ற­தாக பொலிஸ் விசா­ர­ணைகள் தெரி­விக்­கின்­றன. ஆனால், அது விடு­தலைப் புலி­க­ளினால் செய்­யப்­பட்­ட­தாக ஆரம்­பத்தில் சொல்­லப்­பட்­டது. இது விசா­ர­ணையை திசை­தி­ருப்­பு­வ­தற்­கான செயற்­பா­டாக நீங்கள் நினைக்­க­வில்­லையா?

வவு­ண­தீவில் கொலை நடை­பெ­று­வ­தற்கு ஓரிரு தினங்­க­ளுக்கு முன்னர் விடு­தலைப் புலி­களின் நினை­வேந்தல் செயற்­பா­டுகள் அந்தப் பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்­டதால், அத­னோடு இந்த சம்­ப­வத்தை பிணைத்து பொலிஸார் ஒரு தீர்­மா­னத்­துக்கு வந்­தார்­களோ தெரி­யாது. நினை­வேந்தல் நிகழ்­வு­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக சென்ற பொலிஸ் படை­யுடன் கைக­லப்­புகள் நடந்த பின்­ன­ணியில், இது அவர்­களால் நடந்­தி­ருக்­கலாம் என்று பொலிஸார் நினைத்­தி­ருப்­பார்­களோ என்­னவோ. யாருக்கும் பிழை நேரு­வது சக­ஜம்தான்.

இந்தப் பயங்­க­ர­வாத செயல்­க­ளோடு சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எந்த அர­சி­யல்­வா­தியும் பாது­காப்பு வழங்­க­வில்லை என்று உங்­களால் உறு­தி­யாக கூற­மு­டி­யுமா?

எந்­த­வொரு முஸ்லிம் தலை­வரும் தெரிந்­து­கொண்டே, தனது சமூ­கத்­துக்கு எதி­ரான பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு அடைக்­கலம் கொடுப்­பார்கள் என்று நான் நம்­ப­வில்லை. அதுதான் எனது நிலைப்­பாடு. நான் குறித்த முஸ்லிம் தலை­வர்கள் பற்றி அறிந்து வைத்­துக்­கொண்­டுதான் சொன்னேன். ஆனால், அதற்­காக நான் எந்த உறு­திப்­பாட்­டையும் வழங்க முடி­யாது. குற்றம் செய்­த­வர்தான் என்று விசா­ர­ணைகள் மூலம் உறு­தி­ப­்படுத்­தப்­பட்டால், நிச்­சயம் நாம் அதனை ஏற்­றுக்­கொண்டே ஆக­வேண்டும்.

அவர்­க­ளது அர­சியல் செயற்­பா­டு­களில் குறை­பா­டுகள் இருக்­கலாம். சிலர் தேவை­யற்ற விட­யங்­களைப் பேசியே மாட்­டிக்­கொள்­வர்கள். அவ்­வாறு இருக்க முடியும். யாரும் தெரிந்­து­கொண்டே பயங்­க­ர­வா­தத்­துக்கோ அல்­லது பயங்­க­ர­வா­தி­யாக மாறப்­போ­வதை பார்த்­துக்­கொண்டே அதற்கு உத­வி­யா­கவா போவார்கள் என்று நான் நம்­ப­வில்லை.

குற்­றம்­சாட்­டப்­பட்ட ஒரு­வ­ரையும் சேர்த்­துக்­கொண்டு எல்லா அமைச்­சர்­களும் பத­வி­வி­லகி, அந்த குற்­ற­வா­ளியை விசா­ரிப்­ப­தற்கு இருந்த சந்­தர்ப்­பத்தை இல்­லாமல் செய்­ததன் மூலம் நீங்­களும் பயங்­க­ர­வா­தத்­துக்கு துணை­போ­யுள்­ளீர்கள் என்று நான் சொல்­கின்றேன்?

நீங்கள் யாரையும் எப்­படி அவ்­வாறு குற்­ற­வாளி என்று சுட்­டிக்­காட்ட முடியும்? ரதன தேரரின் உண்­ணா­வி­ர­தத்தை தொடர்ந்து ஞான­சார தேரர் விடுத்த 12 மணி­கெடு கார­ண­மாக நாட்டில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான மாபெரும் அழிவு ஏற்­ப­ட­போ­வ­தையும் அதன் மூல­மாக நாடே பற்றி எரி­யப்­போகும் பயங்­க­ரத்தை தடுப்­ப­தற்­கா­கவே நாம் அந்த முடிவை ஒருங்­கி­ணைந்து எடுத்தோம். அவ­ச­ர­கால சட்டம் அமுலில் இருக்­கும்­போதே இந்தப் பயங்­கர நிலை­மையை தடுக்கும் ஒரு தேவைப்­பாடு அர­சுக்கு இல்லை என்ற தோற்­றத்தை கண்­ணுற்றோம். சிறி­ய­தொரு குழுவின் செய­லுக்கு முழு முஸ்லிம் சமு­தா­யமும் குற்­ற­வா­ளிக்­கூண்டில் ஏற்­றப்­ப­டு­வது போன்ற ஒரு அபாய நிலை இருந்­தது.

நீங்கள் அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து மொத்­த­மாக வில­கி­யதன் மூலம்­தானே முழு சமூ­கத்­தையும் குற்­ற­வா­ளி­க­ளாக பார்க்கும் நிலைமை ஏற்­பட்­டது?

சந்­திக்கு சந்தி கறுப்புக் கொடி­க­ளோடும் தடி­க­ளோடும் பொலன்­ன­றுவை முதல் அக்­கு­றணை வரை கோஷங்கள் கொடுத்­த­வாறே கடை­களை மூடச்­சொல்லி பலாத்­காரம் செய்து நூற்­றுக்­க­ணக்­கானோர் ஊர்­வ­ல­மாக வரு­வதை அறிந்தோம். இவை­ய­னைத்தும் நடப்­பது அவ­ச­ர­காலச் சட்டம் இருக்­கும்­போது. அரசு அதனை தடை­செய்ய எந்­த­வொரு முயற்­சியும் எடுப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. நாம் நிர்க்­க­தி­யானோம். அப்­போது எமக்கு வேறு வழி தெரி­ய­வில்லை.

இதற்­கெல்லாம் அடிப்­படை மூன்று பேரின் இரா­ஜி­னா­மாக்­களின் அழுத்தம் அல்­லவா? விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க சம்­பந்­தப்­பட்ட மூன்று பேரும் இரா­ஜி­னாமா செய்­யுங்கள் என்­று­தானே நீங்கள் வலி­யு­றுத்­தி­யி­ருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதி­லாக எல்­லோரும் இரா­ஜி­னாமா செய்­தது சரியா? உங்­களின் இந்த ஒரு­மித்த முடிவு கார­ண­மாக வேறு பிரச்­சி­னை­களை தலையில் போட்­டுக்­கொண்­டீர்கள் என்று நினைக்­க­வில்­லையா?

இதன் பின்­ன­ணியில் நடந்த விட­யங்கள் பற்றி உங்­க­ளுக்குத் தெரி­யாது. நாட்­டுக்குத் தெரி­யாது. அது­பற்றி நான் விளக்க வேண்டும். இந்த சம்­பவம் நடந்­தது திங்­கட்­கி­ழமை. அதற்கு முந்­திய இரவு கபீர் ஹாசீம் என்னை தொலை­பே­சியில் அழைத்து நீண்ட உரை­யா­டலின் பின்னர் தற்­போது நாட்டில் பாரிய குழப்பம் ஏற்­படும் நிலை­யுள்­ள­தா­கவும் என்ன செய்வோம் என்றும் கேட்டார்.

இரா­ஜி­னா­மாக்­களை கேட்­டுத்தான் இந்த உண்­ணா­வி­ரதப் போராட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. இது­பற்றி நீங்கள் பிர­த­ம­ரோடு கலந்து ஒரு முடிவு எடுக்­க­லாமே என்றேன். அவர் பிர­த­ம­ரோடு கதைப்­ப­தா­கவும் அவர் பாது­காப்பு பற்றி வழங்­கிய உறு­திப்­பாட்டில் நாட்டின் நிலை­மை­களை பார்க்­கும்­போது திருப்தி கொள்ள முடி­யாது என்றும் கூறினார்.

றிஷாத் பதி­யுதீன் பற்றி குறிப்­பிட்­ட­போது என்னால் இரா­ஜி­னாமா செய்­யு­மாறு அவ­ரிடம் சொல்­ல­மு­டி­யாது. வேண்­டு­மானால் நீங்கள் அவ­ரிடம் பேசிப்­பா­ருங்கள் என்று குறிப்­பிட்­ட­தா­கவும் சொன்னார். அதன் பிர­காரம் றிஷா­திடம் பேசினேன். தன்னால் இரா­ஜி­னாமா செய்ய முடி­யாது என்று அவர் உறு­தி­யாக சொல்­லி­விட்டார் என்றும் சொன்னார். நான் ஒக்­டோபர் மாதம் அர­சாங்­கத்தை பாது­காப்­ப­தற்­காக வழங்­கிய பங்­க­ளிப்­புக்­காக என்னை பழி­வாங்கும் நோக்­க­மாக எதிர்க்­கட்­சி­யினர் செய்யும் சதி முயற்­சிதான் இது. என்னை அவர்­களின் பலிக்­க­டா­வாக்க வேண்டாம் என்று அவர் சொன்­ன­தாகச் சொன்­னார்கள். அவர் இரா­ஜி­னா­மா­வுக்கு தயா­ரில்லை என்றால், அவர் சொல்லும் கார­ணத்­திலும் ஒரு நியாயம் இருப்­ப­தாக தெரிந்­தது.

நான் மற்றும் றிசாத் எல்­லோரும் மக்­கா­வுக்கு சென்று அரசைப் பாது­காத்­தது உங்கள் எல்­லோ­ருக்கும் தெரியும். அப்­ப­டி­யானால் இந்த விட­யங்­களும் ஒக்­டோபர் விட­யத்­தோடு முடிச்சுப் போடப்­ப­டு­வதால் வேறு வழி­யில்­லாமல் இந்த முடி­வுக்கு வந்தோம். இது ஒரு பக்கம். அடுத்த பக்கம் பார்த்தால் அடுத்­தநாள் ஏதேனும் விப­ரீதம் ஏற்­பட்­டி­ருந்தால், நாட்டில் களி­யாட்டம் நடக்கும் என்று ஞான­சார தேரர் கூறி­யி­ருந்த நிலைமை என்­ன­வா­கி­ருக்கும் என்­ப­தையும் சிந்­தித்துப் பார்க்க வேண்டும்.

எஸ்.பி. திஸா­நா­யக்க கூறும் இந்த காணொ­லியை பாருங்கள். றிஷாத் பதி­யு­தீனை சுத்­தப்­ப­டுத்­து­வ­தற்­காக ரணிலின் ஏற்­பாட்டில் சகல முஸ்லிம் அமைச்­சர்­க­ளையும் பதவி விலகச் செய்து முஸ்லிம் சமூ­கத்தை தனி­மைப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக உங்கள் மீது குற்­றம்­சு­மத்­து­கி­றாரே?

எஸ்.பி. மிகவும் சூட்­டோடு கதைத்­ததை நான் கண்டேன். அவ்­வாறு ஆவே­சப்­பட வேண்டிய தேவை எனக்­கில்லை. இங்கே ஓர் அர­சியல் கோணம் இருப்­பது தெளி­வாகப் புரியும் விடயம். கனவு ஆவே­சத்­தோடு பேசு­வதை விட்­டு­விட்டு யதார்த்­தத்­தையும் பேச வேண்டும். ரணிலின் தேவைக்கு நம்மை கொண்டு செய்­வித்­த­தாக சொல்­வது முழுப் பொய்­யாகும்.

நாம் மக்­களின் பாது­காப்பை விசே­ட­மாகக் கொண்டு ஓர் அடை­யாளம் செய்­தியையே இதன்­மூலம் வழங்­கி­யுள்ளோம். நாட்­டுக்கும் இதனால் சர்­வ­தேச மட்­டத்தில் ஒரு பாரிய அப­கீர்த்­தியும் ஏற்­ப­டலாம். அத்­தோடு நாம் இவ்­வாறு செய்­தி­ருக்­கா­விட்டால் ஏதும் பாரிய விப­ரீதம் நடந்து, ஒரு குறிப்­பிட்ட சமூ­கத்­தி­ன­ருக்கு ஏற்­படும் இழப்பு மற்றும் கொடு­மைகள் கார­ண­மாக அந்த சமூ­கத்­தி­லி­ருக்கும் இளை­ஞர்கள் கொதித்­தெ­ழுந்து போராடத் தொடங்­கினால் என்ன நடக்கும்?

எமது அர­சியல் தலை­மைகள் என்ன செய்­தார்கள். எமக்கு கொடுமை நடக்­கும்­போது அரசில் அமைச்­சர்­க­ளாக இருந்து எம்மை பாது­காக்க தவ­றி­விட்­டார்கள் என்று கொதித்துப் போவார்கள். நாங்கள் அடிக்­கடி அடி­ப­டவும், இவர்கள் சுக­வாழ்க்கை வாழ்­வ­துமா என்று கேள்வி கேட்­பார்கள். இவர்­களால் இனி பய­னில்லை, வேறு வழி பார்ப்போம் என்று வேறு திசையில் போய்­விட்டால் அது எவ்­வ­ளவு பயங்­க­ர­மா­ன­தாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தோம். அப்­படி நடக்­காமல் செய்­வதும் எமது முக்­கிய குறிக்­கோ­ளாக இருந்­தது. அது மிக முக்­கி­ய­மாக பார்க்­கப்­பட வேண்­டி­யது.

குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்­களைத் தவிர்த்து, நீங்­களும் கபீர் சிங்­கள மக்­க­ளிடம் சென்று, வாழும் எல்­லோ­ருக்கும் மத்­தியில் பகி­ரங்­க­மாக கதைத்து விப­ரித்­தி­ருந்தால் இந்தப் பிரச்­சினை இப்­படி வளர்ந்­தி­ருக்­கா­தல்­லவா? நீங்கள் ஒன்­றாக இணைந்­ததன் கார­ண­மா­கத்தான் இந்த குற்­றச்­சாட்­டுகள் உங்­க­ளுக்கும் வைக்­கப்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ளது?

எஸ்.பி.யின் கம்­பீ­ரத்தைப் பற்றி எல்­லோ­ருக்கும் தெரிந்த விட­யம்தான். அவர் ஹாய் ஹூய் என்று ஆவே­சப்­பட்­டதால் யாரும் குழம்­பிக்­கொள்ள தேவை­யில்லை. எமக்­கென சில கொள்­கைகள் உள்­ளன. அவ்­வாறு பழி சுமத்தும் அள­வுக்கு நான் எதுவும் செய்­ய­வில்லை. எமது கொள்­கை­களை யாரும் விமர்­சிக்­கலாம். அதில் பிரச்­சி­னைகள் இல்லை. நாம் நன்­றாக ஆராய்ந்து எடுத்த முடிவு நாட்டின் நல­னுக்­கா­கவும் சமூ­கத்தின் பாது­காப்­புக்­கா­கவும் எடுக்­கப்­பட்ட முடி­வு­க­ளாகும்.

நீங்கள் எடுத்த இந்த முடிவு சரி­யா­ன­துதான் என்று நினைக்­கின்­றீர்­களா?

மிகச்­ச­ரி­யான முடிவு என்றே நம்­பு­கிறேன். இந்த நாட்டில் ஏற்­பட்ட குழப்­ப­மான நிலையை ஓர­ள­வுக்­கேனும் கட்­டுப்­ப­டுத்த இந்த முடிவு கார­ண­மாக இருந்­துள்­ளது. தற்­போது அமைதி நிலைமை சமூ­கத்­துக்குள் ஏற்­பட்­டுள்­ளது. இளை­ஞர்கள் வேறு திசை­களில் மாறிப் போவதை தவிர்த்துக் கொண்டோம். எமது தலை­வர்­களை நம்­பலாம் என்ற ஒரு மனப்­பான்­மையை அவர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். இவை வெற்­றிக்கும் மேலாக, நாட்­டுக்கு ஏற்­ப­ட­வி­ருந்த பாரிய அழிவை தவிர்த்­துக்­கொள்ள ஏது­வாக அமைந்­தது.

இது இப்­ப­டியே தொட­ரு­மானால் இனங்­க­ளுக்­கி­டையே ஒரு விரி­சலும் தூர­மாக்­கலும் ஏற்­படும் என்­பதை நாம் ஒப்­புக்­கொள்­கிறோம். இதைத்தான் மகா­நா­யக்க தேரர்­களும் சங்க சபை­யி­னரும் சொன்­னார்கள். அவர்கள் அவ்­வாறு சொல்­ல­வில்லை என்று இப்­போது சொல்­லிக்­கொள்­ப­வர்­களும் இருக்­கின்­றனர். குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்­களும் இரா­ஜி­னாமா செய்­வதன் மூலம் அந்த செயற்­பாட்டில் ஒரு தாக்கம் இருப்­ப­தாக அவர்கள் குறிப்­பி­டு­வ­திலும் நியாயம் உள்­ளதை ஒப்­புக்­கொள்­கிறோம்.

நாமும் அதைத்தான் சொல்­கிறோம். பயங்­க­ர­வா­தத்­துக்கு துணை­போ­ன­தாக சில­ருக்கு குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. நீங்கள் அதில் சேர­வில்லை. சாதா­ரண முஸ்லிம் மக்­களும் சேர­வில்லை. அவர்­க­ளோடு நீங்கள் அனை­வரும் சேர்ந்­ததன் மூலம்தான் இந்த நிலைமை தோன்­றி­யது என்­பதை ஒப்­புக்­கொள்­கி­றீர்­களா?

உணர்ச்­சி­வ­சப்­பட்டு பார்த்தால் அந்த முடி­வுக்கு வர­வேண்­டி­யேற்­படும். ஆனால், அறி­வு­பூர்­வ­மாக இதை நாம் யோசித்துப் பார்த்தால் நான் சொல்லும் யதார்த்த நிலையை புரிந்­து­கொள்­ளலாம். நானும் கபீரும், சிரேஷ்ட அர­சி­யல்­வாதி பௌசியும் இந்த சம்­பா­ஷ­ணையில் இருந்தோம். அவர் சொல்லும் விட­யங்­களை நாம் ஒப்­புக்­கொள்­ளத்­தானே வேண்டும். நாம் அனை­வரும் ஒன்­றாக இணைந்து எடுத்த தீர்­மா­னமே இது.

ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தையும் ஒன்று சேர்த்து பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக நீங்கள் மற்றும் கபீர் ஹாசீம் போன்­ற­வர்கள் வெளியே வந்து குரல் கொடுத்­தி­ருந்தால் இந்த நிலை வந்­தி­ருக்­காது அல்­லவா? இரா­ஜி­னாமா செய்­வதை விட அது பிர­யோ­ச­ன­மாக இருந்­தி­ருக்­குமே? நீங்கள் குரல் கொடுத்­தது போதா­தல்­லவா?

இந்த சம்­ப­வத்­துக்கு முன்­னரும் சம்­பவம் நடந்த பின்­னரும் எம்­மா­லான அனைத்து உத­வி­க­ளையும் முழு ஒத்­து­ழைப்­பையும் கொடுத்­துள்ளோம். இந்த சந்­தர்ப்­பத்­தில்தான் குரு­நாகல், ஹெட்­டி­பொல, கினி­யம போன்ற இடங்­களில் வன்­முறை சம்­ப­வங்கள் நடந்­தே­றின. முழு­நாடும் பர­விய வன்­மு­றைகள் கடை­சி­யாக மினு­வாங்­கொ­டையில் வந்து நின்­றது. மக்கள் தாக்­கப்­ப­டும்­போதும் உட­மைகள் அழிக்­கப்­ப­டும்­போதும் பரி­தா­ப­மான நிலைக்கு அவர்கள் தள்­ளப்­ப­டும்­போது நாட்டில் பாது­காப்­புக்கும் சமா­தா­னத்­துக்கு பொறுப்புக் கூற­வேண்­டி­ய­வர்கள் கண்டும் காணாமல் செய­லற்று இருக்­கும்­போது முஸ்லிம் மக்கள் யாரையும் நம்­பாத நிலைக்கு ஆளா­கினர்.

முக்­கி­ய­மாக அவ­ச­ர­காலச் சட்­டமும் ஊர­டங்கும் இருக்கும் நிலை­யில்­கூட இவ்­வாறு நடப்­பதை மக்கள் நம்­ப­மு­டி­யாமல் இருந்­தனர். அத்­து­ர­லிய ரதன தேரரின் உண்­ணா­வி­ரதம் என்­பது அவ­ச­ர­காலச் சட்ட நிய­தி­கள்­படி அனு­ம­திக்க முடி­யாத செய­லாகும். இதன் முடிவு பாரி­ய­தொரு அழிவை ஏற்­ப­டுத்­தவே என்­பதை எல்­லோரும் ஏற்­க­னவே உணர்ந்­தினர். இது­போன்ற அசம்­பா­வி­தங்கள் நடக்­காமல் உட­னடித் தீர்­வுகள் எடுத்­தாக வேண்டும். இனங்­க­ளுக்­கி­டையே பிரி­வி­னை­வா­தத்தை தூண்டும், வெறுப்­பூட்டும் பேச்­சுகள் நிறுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால், இவை ஒன்­றையும் கண்டும் காணா­த­து­போல இருந்­த­தொரு சூழலில் பாரிய அழிவு ஏற்­பட்­டி­ருக்கும். நாங்கள் அதனைத் தடுத்துக் கொண்டோம்.

அத்­து­ர­லிய ரதன தேரர் உண்­ணா­வி­ரதம் இருந்­தது இரா­ஜி­னாமா கோரித்தான். ஆளுநர் இரு­வரும் இரா­ஜி­னாமா செய்­ததும் அவர் உண்­ணா­வி­ர­தத்தை முடித்துக் கொண்டார். ஆனால், அதன் பின்­னரும் நீங்கள் இரா­ஜி­னா­மாவில் தங்­கி­யி­ருந்­தது றிஷாத் பதி­யு­தீனை பாது­காப்­ப­தற்­குத்­தானே?

நான் அதை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ஞான­சார தேரர் ஊர்­வ­ல­மாக வந்து கொண்­டி­ருக்கும் நிலையைத் தடுப்­ப­தற்­காக ஏதேனும் பாது­காப்பு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று நாங்கள் எதிர்­பார்த்தோம். சம்­பந்­தப்­பட்­டோரை அடிக்­கடி விளித்துக் கொண்டும் இருந்தோம்.

இல்லை. ஆளு­நர்­களின் இரா­ஜி­னா­மா­வோடு கண்டி, கெட்­டம்பே ஊர்­வலம் நின்­றது. உண்­ணா­வி­ரதம் முடி­வுக்கு வரு­கி­றது. அதன் பின்­னர்­தானே நீங்கள் அனை­வரும் ஒன்­றாக இரா­ஜி­னாமா செய்­தீர்கள்?

ஊர்­வலம் நின்­றது என்று நீங்கள் சொன்­னாலும், அந்த நேரத்தில் சந்­திக்கு சந்தி மக்கள் குழப்பம் விளை­விக்க தயா­ரா­கவே இருந்­தனர். இதை தடுப்­ப­தற்கு எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

உங்கள் இரா­ஜி­னா­மாக்­க­ளோடு அவர்கள் கலைந்து சென்­றார்கள் என்றா நினைக்­கி­றீர்கள்? அவர்கள் கலைந்­து­போ­னது உண்­ணா­வி­ரதம் முடிந்து போனதால்…?

புலி­களின் யுத்தம் முடிந்த கையோடு அடிப்­ப­டை­வா­தி­களைக் கொண்டு வேறொரு குழப்­பத்­துக்­கான வித்­துகள் தூவப்­பட்டுக் கொண்­டி­ருந்­ததை நாம் கவ­னித்தோம். இது நீங்கள் நினைப்­ப­துக்கு மேலான பிரச்­சி­னை­யல்ல.

றிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னத்தால் அரசு குழம்­பப்­போ­கின்­றது. அதற்கு முன்னர் இதை தடை செய்ய வேண்டும் என்று உங்­க­ளுக்கு அரசின் மேல்­மட்­டத்­தி­லி­ருந்து செய்தி வந்­ததா?

இல்லை. நாம் அப்­படி யாரையும் பாது­காக்கத் தேவை­யில்லை. இந்த அறியாப் படங்­களை நாமும் பார்த்துக் கொண்­டி­ருப்­பதால் குற்­றங்­க­ளுக்கு எதி­ராக ஒரு விசா­ரணை வேண்டும் என்­ப­தையே நாமும் கேட்டோம். ஒரு நப­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க நாடினால் அவரைப் பற்றி ஒரு குற்றப் பத்­தி­ரி­கை­யோடு பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு செல்­லாது கமெ­ராக்­க­ளோடு வரு­வார்கள். அங்­கி­ருந்து வெளியே வந்­ததும், நாம் இன்­னா­ருவருக்­கெ­தி­ராக குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­துள்ளோம் என்று ஊட­கங்­க­ளுக்கு செல்­வார்கள்.

குற்­றப்­பத்­தி­ரி­கையில் என்ன இருக்­கின்­றது. எதை சொல்­கின்­றார்கள், சாட்­சியம் உள்­ளதா என்று ஒன்றும் தெரி­யாது. ஆனால், குறித்த நபரை குற்­ற­வா­ளி­யாக்கி விடு­வார்கள். இந்த விட­யத்­திலும் சம்­பவம் நடை­பெ­றும்­வரை எவ­ருமே யாருக்கும் விரோ­த­மாக பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு செல்­ல­வில்லை. சம்­பவம் நடந்­ததும் எல்­லோரும் போகின்­றார்கள்.

 குண்­டு­தா­ரிகள் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான தொழிற்­சாலை வெல்­லம்­பிட்­டிய பகு­தி­யி­லுள்­ளது. அவ­ருக்கு பாவிக்­கப்­பட்ட தோட்­டாக்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. வெடி­பொருள் கிடைக்­கின்­றது. அடுத்து எந்­த­ர­முல்ல பகு­தியில் குண்­டு­தா­ரிகள் மறைந்­தி­ருந்த வீடு பற்­றிய குற்­றச்­சாட்டில் பிர­தேச சபை உறுப்­பினர் ஒருவர் கைதா­கிறார். அவர் குறிப்­பிட்ட அர­சி­யல்­வாதி ஒரு­வரின் சகா என்று சொல்­லப்­பட்­டது. இவை உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட சாட்­சி­யங்கள் இல்­லையா? நீங்கள் இதற்­காக குரல் கொடுக்­க­வில்­லையே?

வெல்­லம்­பிட்­டிய சம்­பவம் பற்றி வெல்­லம்­பிட்­டிய பொலிஸார் விசா­ரணை நடத்­தி­னார்கள். 9 பேர் விடு­விக்­கப்­பட்­டார்கள் என்றும் சொன்­னீர்கள். ஆம். பொலிஸார் செயற்­பட வேண்­டிய ஒரு முறை­யுள்­ளது. இது­போன்ற விப­ரீ­த­மான சம்­ப­வங்­க­ளின்­போது அவர்கள் சட்ட ஆணை­யா­ளரின் ஆலோ­ச­னைக்­கேற்ப நடந்­து­கொள்ள வேண்டும். நீதி­மன்­றத்­துக்கு சரி­யான முறையில் சட்டப் பிரி­வு­களை சொல்லி குற்­ற­வா­ளி­களை முன்­னி­லைப்­ப­டுத்­தக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள பொலிஸார் எல்லா பொலிஸ் நிலை­யங்­க­ளிலும் இருக்­க­மாட்­டார்கள்.

இவை எல்­லா­வற்­றுக்கும் காரணம் அரசின் மெத்­தன போக்­கல்­லவா? குறித்த நேரத்தில் சரி­யான நட­வ­டிக்­கை­களை அரசு எடுத்­தி­ருந்தால், களி­யாட்டம் நடக்க வேண்­டிய நிலையும் ஏற்­பட்­டி­ருக்­கா­தல்­லவா? உங்­க­ளுக்கு இரா­ஜி­னாமா செய்­யவோ, களி­யாட்டம் நடத்­தவோ தேவை­யி­ருக்­கா­தல்­லவா?

எல்லா இடத்­திலும் குறை­பா­டுகள் இருந்­தன. அதை ஒப்­புக்­கொள்ள வேண்டும். பொலிஸ்மா அதிபர் பல­வந்­த­மாக விடு­மு­றையில் அனுப்­பப்­பட்­டதும் புல­னாய்­வுத்­துறை பொறுப்­ப­தி­காரி கொடுத்த விளக்­கங்­களும் தெரிந்­த­து­தானே. ஒரு மெத்­த­ன­மான போக்­கையே கடைப்­பி­டித்­தி­ருந்­தார்கள் என்­ப­தற்­கான சாதகம் உள்­ளது. ‘மிக மெத்­த­ன­மாக’ என்று சொல்­லவும் முடி­யாது. ஏனெனில் கிடைக்­கப்­பெற்ற தக­வல்­களின் பிர­காரம் சில முக்­கி­ய­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆனால் எதை செயற்­ப­டுத்த வேண்­டுமோ அது நடை­பெ­ற­வில்லை. தெரி­வுக்­கு­ழுவில் மேலும் பல விப­ரங்­களைப் பெறலாம். குறை­பா­டு­களை அப்­போது நிவர்த்­தி­செய்து கொள்­ளலாம். ஒவ்­வொரு இடத்­திலும் ஒவ்­வொரு அதி­கா­ரிக்கும் பொறுப்­புக்­கூ­றலும், பொறுப்­பேற்­றலும் இருந்­துள்­ளன. மேலி­ருந்து கீழே வரை சில மெத்­தனப் போக்கு இருந்­துள்­ளதை ஒப்­புக்­கொள்ள வேண்டும்.

யுத்­தத்தின் பின்­ன­ரான சமா­தான சூழலும் ‘ரெடி­யாக இரு’ என்­றி­ருந்த புல­னாய்­வுத்­து­றையை ‘ஓய்­வாக இரு’ என்ற நிலைக்கு மாற்­றி­யதோ என்றும் நினைக்கத் தோன்­று­கின்­றது. இப்­போ­தெல்லாம் முடிந்­து­விட்ட நிலை. ஒரு­வ­ருக்­கொ­ருவர் கைநீட்டி குற்றம் சாட்­டு­வதை நிறுத்­திக்­கொண்டு எங்கே தவறு நடந்­தது என்­பதை ஆராய்ந்து அதற்­கான சிறந்த தீர்­வு­களை எடுப்­பதே சாலச்­சி­றந்­தது என நம்­பு­கின்றேன்.

தெரி­வுக்­கு­ழுவில் கைநீட்டி குற்றம் சாட்­டப்­ப­டு­வ­து­போல இருக்­கின்­றதே?

நான் என்றால் அதை எதிர்க்­கிறேன். நான் ஊட­கங்­க­ளுக்கு எதி­ரா­னவன் அல்ல. சுடச்­சுட செய்­தி­களை அவர்கள் தேடிக் கொள்­கி­றார்கள். இந்த தெரி­வுக்­குழு விசா­ர­ணை­களை ஊட­கங்­க­ளுக்கு திறக்கக் கூடா­தென்று நான் ஆரம்­பத்­தி­லேயே கூறினேன்.

இது பௌத்த நாடு என்­பதை நீங்கள் ஒப்­புக்­கொள்­கி­றீர்­களா?

ஆம். இது பௌத்­தர்கள் பெரும்­பான்­மை­யாக வாழும், பல்­லின சமூ­கத்­த­வர்கள் வாழும் நாடு.

(ஹிஸ்­புல்­லாஹ்வின் காணொ­ளியைக் காட்டி) இவ­ரு­டைய பேச்சைப் பற்றி நீங்கள் என்ன நினைக்­கின்­றீர்கள்?

அவ­ரது பேச்சில் ஓரி­டத்தில் மாத்­தி­ரம்தான் சிறு­பிள்­ளைத்­த­ன­மாக கதைக்­கிறார். அதைப்­பற்றி என்­னிடம் சிறு விமர்­சனம் உண்டு. அவர் அதற்­காக வேறொரு அர்த்­தத்­தையும் சொன்னார். தெரி­வுக்­கு­ழு­வுக்கு வந்­தி­ருந்­த­போது, நாம் இங்­கேதான் சிறு­பான்மை உல­க­ளவில் பெரும்­பா­ன்மை. எனவே, பயப்­படத் தேவை­யில்லை என்று அவர் சொன்­னதை இங்கே வாழும் பெரும்­பான்மை மக்கள் வேறொரு அர்த்­தத்தில் பார்க்­கக்­கூ­டிய வாய்ப்­புள்­ளது. உல­க­ளா­விய உத­வியைப் பெற்று இலங்­கையில் பிரச்­சி­னையை உரு­வாக்கப் போகின்­றார்­களா என்ற சந்­தேகம் பெரும்­பான்­மைக்கு ஏற்­ப­டலாம்.

முஸ்லிம் என்­பது மதமா அல்­லது இனமா?

இஸ்லாம் என்­பது மதம். அதைப் பின்­பற்­றுவோர் முஸ்­லிம்கள்.

ஈராக்கில் இருப்­பவர் ஈராக் இனத்­தவர். அரே­பி­யாவில் அரே­பிய இனத்­தவர். இலங்­கையில் இருக்கும் முஸ்­லிம்கள் முஸ்லிம் இனம் என்று சொல்­லப்­ப­டு­கி­றதே?

தமிழ்­பேசும் மக்­க­ளுக்­கி­டையே இருப்­பதால் தம்மை தமி­ழ­ரி­ட­மி­ருந்து வேறு­ப­டுத்திக் காட்­டியே தனித்­து­வ­மான உரி­மை­களைப் பெறலாம். தனித்­து­வ­மான ஓர் இன­மாக அர­சி­யல்­ரீ­தி­யா­கவும் வகைப்­ப­டுத்­தப்­பட்­டார்கள். இனம் என்­பது மத ரீதி­யா­கவும் ஏற்­ப­டலாம், மொழி ரீதி­யா­கவும் ஏற்­ப­டலாம்.

நீங்கள் தெரி­வுக்­கு­ழுவில் இருக்­கி­றீர்கள். அங்கு ஹிஸ்­புல்­லாஹ்வின் கிழக்கு பல்­க­லைக்­க­ழகம் பற்­றியும் கேள்­வி­யெ­ழுப்­பப்­பட்­டது. 3.9 பில்­லியன் ரூபா பணம் நேர­டி­யாக தனி­நபர் கணக்கில் வரவு வைக்­கப்­பட்­ட­தாக குறிப்­பி­டப்­பட்­டது. இலங்­கையில் நாணய பரி­மாற்ற சட்­டத்தின் கீழ் அவ்­வாறு செய்ய இய­லுமா?

முத­லீட்­டுக்­காக ஒரு நிறு­வ­னத்தை உரு­வாக்கி அதற்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஒரு கணக்கு மூல­மாக வரலாம்.

மத்­திய வங்­கியின் அனு­மதி பெறாமல் அவ்­வாறு வர­லாமா?

சாதா­ர­ண­மாக ஒரு வர்த்­தக வங்­கியில், கணக்கு திறக்­கும்­போது மத்­திய வங்­கியின் அனு­ம­தியின் பேரில்தான் அது திறக்­கப்­படும். சியரா கணக்கு என்று ஒன்­றுள்­ளது. அதன் மூலமும் வரலாம்.

இதுதான் சியரா கணக்கு மூல­மாக இல்­லையே. அவ்­வாறு அங்கே சொல்­லப்­ப­ட­வில்­லையே. அவர் சொல்­கிறார் அது­பற்றி தெரி­யாது என்று. நீங்கள் அவரைப் பாது­காக்­கின்­றீர்­களா?

சட்டம் மீறப்­பட்­டுள்­ளதால் அவர் அதற்­காக பொறுப்­புக்­கூற வேண்டும்.

அத்­து­ர­லிய ரதன தேரரின் உண்­ணா­வி­ரதம் சம்­பந்­தப்­பட்ட சட்டப் பிரச்­சி­னையில் நேர­டி­யாக பதில் வழங்கும் நீங்கள் இந்தக் கேள்­விக்கு நேர­டி­யாக பதிலை தரு­கின்­றீர்கள் இல்­லையே?

இல்லை. இது பணப்­ப­ரி­மாற்றம் அல்­லது நாட்­டுக்குள் பணம் வரு­விக்­கப்­படும் முறை. இது வர்த்­தக வங்கி பொறுப்­புக்­கூற வேண்­டிய விடயம். இது­போன்ற ஒரு கணக்­குக்கு பாரிய தொகை வைப்புச் செய்­யப்­ப­டும்­போது, பணப்­ப­ரி­மாற்றம் பற்றி புதிய சட்­டங்கள் இயற்­றப்­பட்­டுள்­ளன. இந்த சட்­டங்­க­ளுக்குள் உட்­பட்­டுத்தான் ஒரு வர்த்­தக வங்கி ஒரு கணக்கை திறக்­க­வேண்டும். கணக்கு வைத்­தி­ருப்­பவர் மட்­டு­மல்ல, வர்த்­தக வங்­கியும் இதற்கு பொறுப்­புக்­கூற வேண்டும்.

மகன் சொல்­கிறார், இது நன்­கொடை என்று. தந்தை ஹிஸ்­புல்லா சொல்­கிறார் கடன் என்று. இதில் எது உண்மை?

தெரி­வுக்­கு­ழுவில் அவர் கடன் என்­றுதான் குறிப்­பிட்டார். நன்­கொடை பின்னர் கட­னாக மாற்­றப்­பட்­டதா என்று தெரி­யாது. கடன் என்றால் அதற்கு வட்டி கொடுப்­ப­தில்லை. ஆனால், தமது வரு­மா­னத்தில் ஒரு பகு­தியை செலுத்த வேண்டும் என்ற ஒப்­பந்­தப்­படி அது கட­னாக மாற்­றப்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புள்­ளது.

சட்­டத்­துக்கு முர­ணாக ஒரு அரச காணியை பாவிக்­க­மு­டி­யுமா?

அரச காணி­களை சட்­டத்­துக்கு முர­ணாக யாரும் பாவிக்­க­மு­டி­யாது.

8 ஏக்கர் காணி அவரால் சட்­டத்­துக்குப் புறம்­பாக பாவிக்­கப்­ப­டு­வ­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதே?

அது உண்­மை­யானால் அது­பற்றி கரு­ம­மாற்ற முடியும்.

சட்டம் சரி­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. நிதிச்­சட்­டத்தை மீறு­வது தண்­ட­னைக்கு உட்­பட்­ட­து­தானே? அதற்கு பிணை இல்­லை­யல்­லவா?

அப்­படி மீறப்­பட்­டி­ருந்தால், குற்­றப்­பத்­தி­ரத்தை சமர்ப்­பிக்­கப்­பட்டு செயற்­ப­டலாம்.

 இவை பற்றி எல்லாம் பேசப்­ப­டு­கி­றது, நட­வ­டிக்கை எடுக்க  குற்­றப்­பத்­தி­ரிகை சமர்­ப்பிக்­கப்­பட வேண்­டுமா? அரசு இது­பற்றி தேடக்­கூ­டாதா?

அரசு இப்­போது தேடிக்­கொண்­டி­ருக்­கி­றது. இந்த நாட்­டிற்கு உயர்­கல்­விக்­காக ஒரு முத­லீடு வரு­வ­தென்­பது தவ­றில்லை என்­பது எனது கருத்து. அது ஒரு உயர்­கல்வி நிறு­வனம். பல்­க­லைக்­க­ழ­க­மாக்­கப்­படும் அல்­லது வேறு உயர்­கல்வி நிறு­வ­ன­மாக்­கப்­படும்.

 ஆனால் பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழு­விடம் அனு­மதி பெறப்­ப­ட­வில்லை. தனியார் பல்­க­லைக்­க­ழகம் பற்­றிய மசோதா உள்­ளது. அந்த அனு­ம­தியும் பெறப்­ப­ட­வில்லை அல்­லவா?

அரச சார்­பற்ற தனியார் பல்­க­லைக்­க­ழ­கங்கள் மூலம் பட்டம் வழங்கும் அனு­ம­திக்­கான ஒரு நடை­மு­றை­யுள்­ளது. நான் சிறிது காலம்தான் இதற்­கான அமைச்­ச­ராக இருந்­தி­ருக்­கிறேன். அந்தக் காலத்­திற்குள் சில விட­யங்­களைத் தெரிந்து கொண்டேன் “ஸ்கா” எனும் தரப்­ப­டுத்தும் சபை மூல­மாக ஒவ்­வொரு பாடத்­திட்­டத்தைப் பற்­றியும் பரீட்­சித்துப் பார்க்க நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­ப­டுவர். கற்கை நெறி­க­ளுக்­கான பௌதீக வளங்கள் உள்ளனவா, அவற்றுக்கான விரிவுரையாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனரா  என்பதை சபை கவனிக்கும்.

நீங்கள் அன்று தெரிவுக்குழுவில் இருந்தீர்கள். ஆனால் பெரிதாக கேள்விகள் கேட்கவில்லைதானே. அங்கே தெளிவாக குறிப்பிடப்பட்ட விடயங்களில் தவறுகள் நடந்திருப்பதற்கான சாட்சியங்கள்  தெளிவாக தெரிந்தன. இதற்கான சட்ட செயற்பாடு உடனடியாக எடுக்கப்பட வேண்டுமா இல்லையா? இதற்கு  உங்களிடம் இருந்து நேரடி பதில் வேண்டும்.

சட்டம் ஒழுங்காக செயற்பட வேண்டும். அதில் விவாதம் இல்லை. நான் கண்டது இதுதான், நான் உண்மையையே பேச வேண்டும். கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அவரிடம் ஒரு பதில் இருந்தது. ஆனால் அவர் கூறிய பதில்களினால் பிழை நடந்திருப்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் வங்கிக் கணக்கு விபரங்களை எல்லாம் காட்டினார். கணக்குக்கு வந்த பணம் செலவுகளுக்கான விபரங்களையும் காட்டினார்.

 மேலதிகமாக  8 ஏக்கர் சரி என்றா சொல்கிறீர்கள் ?

8 ஏக்கர் பற்றி அங்கே குறிப்பிடப்படவில்லையே.

 இல்லை குறிப்பிடப்பட்டது. அவருக்கு கொடுக்கப்பட்டது 35 ஏக்கர் மகாவலி காணியிலிருந்து 65 ஏக்கர். அவர் அதை ரிஸவேசன் என்கிறார். ஆசு மாரசிங்க சொன்னார் அது ரிஸவேசன் இல்லை என்று. உங்களுக்கு அது கேட்கவில்லையா ?

இவை எல்லாம் நடந்திருப்பது சென்ற அரசாங்கத்தின் காலத்தில். டலஸ் அழகப்பெரும வந்து அதை திறந்து வைத்தார். அவர் சென்ற அரசாங்கத்திலிருந்து காணியை எடுத்தது எதற்காகவென்று தெரிந்திருக்க வேண்டுமல்லவா?

 அது எதற்காக கட்டப்படுவது என்று சொல்லப்பட்டது? தொழில்நுட்ப பயிற்சிக்கு என்றும் இலவசமாக கல்வி கற்கும் நிறுவனம் என்றும்தான் சொல்லி இருக்கிறார்கள். அதனால்தான் 35 ஏக்கர் கொடுக்கப்பட்டது இது பற்றி நீங்கள் கொஞ்சம் தேடிப்பார்ப்பது  நல்லதில்லையா ?

தேடிப்பார்க்க முடியும். தொழில்நுட்பப் பயிற்சிக்கென்று ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தாலும்  பின்னர் நாம் அதை பல்கலைக்கழகமாக மாற்றுவோம் என்று சிந்தித்திருந்தால் அதில் பிழையில்லையே. அதற்காக முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் உள்ளனர். நன்கொடையாக வழங்கவோ கடனாக வழங்கவோ அதற்குத் தேவையான ஒரு நிறுவனத்தையோ நிறுவி செயற்படலாம் என்று தீர்மானித்ததில் தவறு காண முடியாது.

அவரை குற்றவாளியாகப் பார்க்கின்றீர்களா ?

ஆங்கிலத்தில் Stereo Typing (ஸ்ரிரியோ ரைபிங்) என்பார்கள்.  முஸ்லிம் என்ற ஒரே காரணத்தால் அவர் செய்வது எல்லாம் தவறு என்று ஒரேயடியாக தீர்மானம் மேற்கொள்வது தவறாகும்

 இவை எல்லாம் தெரிவுக்குழுவில் அத்தாட்சிகளோடு சொல்லப்பட்ட விடயங்கள். வங்கி தவறு செய்திருந்தால் வங்கிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் சிறு குழந்தை இல்லையே. சட்டத்திற்குப் புறம்பாக உங்கள் கணக்கில் ஒரு வங்கி பணத்தை வைப்பிலிட்டால் நீங்கள் அதை ஒப்புக்கொள்வீர்களா?

அவர் அன்று காட்டிய விபரங்களை பார்த்தபோது சட்டப்படிதான் பணம் கணக்குக்கு வரவு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. வெளிநாட்டிலிருந்து இந்நாட்டு வங்கி கணக்குக்கு பணம் வருவது மற்றும் தெரிந்து கொண்டு தவறான பணபரிமாற்றல் சட்டம், பயங்கரவாதத்திற்கு உதவும் வகையில் பணப்பரிமாற்றம் சம்பந்தமான சட்ட திட்டங்கள் வர்த்தக வங்கிக்கு நன்றாக தெரியும். சந்தேகம் இருந்தால் உடனடியாக மத்திய வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். அது நடந்ததா, இல்லையா? அதேபோன்று சந்தேகம் ஏற்பட்டதா இல்லையா? இதெற்கெல்லாம் வர்த்தக வங்கியும் பொறுப்புக்கு கூற வேண்டும்

அவர் சொன்ன பதில்தான் தெரியாது என்பது

அவரது வங்கி இலங்கை வங்கி என்று எண்ணுகிறேன். அந்த வங்கி இது பற்றி அவரிடம் விளக்கம் கேட்டிருக்காத பட்சத்தில் இது போன்ற ஒரு பாரிய தொகைப் பணம் வந்திருந்த ஒரு சமயத்தில் அதுவும் ஒரு அரசாங்க வங்கி கேட்டிருந்திருக்க வேண்டும். அது முதலீட்டுக்காக வந்திருந்தால்  பிரச்சினைகள் குறைவுதான். ஒரு முஸ்லிம் என்றில்லாமல் இருந்தாலும் கூட நான் யாரையும் நேரடியாகக் குற்றவாளி என்று சொல்ல மாட்டேன் குற்றங்கள் சாட்சியங்களோடு  நிரூபிக்கப்பட்டால்தானே குற்றவாளி எனக்கூற முடியும்.

Leave A Reply

Your email address will not be published.