சவாலுக்குட்ப்பட்டுள்ள முஸ்லிம்களின் அடையாள அரசியல்

3 1,744
  • மொஹமட் பஸ்லான்

அரசறிவியல் துறை – கொழும்பு பல்கலைக்கழகம்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்குப் பின்னர், இலங்கை முஸ்­லிம்கள் பல்­வேறு நெருக்­கு­தல்­க­ளுக்கும், வன்­மு­றை­க­ளுக்கும் மற்றும் அச்­சத்­துக்கும் ஆளாக்­கப்­பட்­டுள்­ளனர். சுமார் 10 வீத­மான சனத்­தொ­கையைக் கொண்ட இலங்கை முஸ்­லிம்கள், 0.1 வீதத்­துக்கும் குறை­வா­ன­வர்­களின் பயங்­க­ர­வாதத் தற்­கொலைத் தாக்­கு­த­லினால் பெறும் அவ­மா­னத்­துக்கும் அச்­சத்­துக்கும், வன்­மு­றை­க­ளுக்கும் முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். முஸ்­லிம்கள் அர­சியல், பொரு­ளா­தார, சமூக, சமய மற்றும் தொழில்­வாண்மை ஆகிய துறை­களில் நெருக்குதல்களை சந்­திக்­கின்­றனர். முஸ்­லிம்­க­ளுக்குள் பிள­வுகள் மற்றும் பிரி­வு­களின் போக்கு மற்றும் போட்­டியின் அதி உச்ச வன்­முறைப் பிர­யோ­கமே உயிர்த்த ஞாயிறுத் தாக்­கு­த­லாகும். இலங்கை முஸ்­லிம்­க­ளு­டைய அடை­யாளம் எவ்­விதம் அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது? முஸ்­லிம்­க­ளுக்­கி­டையில் பல்­வேறு குழுக்கள் தோன்­றி­யதன் வர­லாறும்  முஸ்­லிம்­க­ளு­டைய அர­சியல் ஆகி­ய­வற்றை இக்­கட்­டுரை விளக்­கு­கின்­றது. ஏற்­க­னவே முஸ்லிம் உள்­ளக மோதல்கள் பற்றி எழு­தப்­பட்ட ஆய்­வினைத் தழு­வி­யா­கவும் இக்­கட்­டுரை எழு­தப்­பட்­டுள்­ளது.

அடை­யாளம் என்­பது பற்றி சமூக விஞ்­ஞானத் துறை­களில் அதி­க­ளவில் விவா­திக்­கப்­ப­டு­கின்ற ஓர் எண்­ணக்­க­ரு­வாகும். இந்த அடை­யாளம் என்­பதை அடிப்­ப­டை­யாக வைத்தே உலகில் பல்­வேறு போராட்­டங்கள் மற்றும் மோதல்கள் ஏற்­பட்­டுள்­ளன. அர­சி­யலின் முக்­கி­ய­மா­ன­தொரு ஒன்­று­தி­ரட்டும் சக்­தி­யாக ‘அடை­யாளம்” காணப்­ப­டு­கின்­றது.. இவ்­வ­கையில் இனத்­துவம், இனம், பால்­நிலை, மதம் மற்றும் கலா­சார பின்­ன­ணி­களைக் கொண்ட குறிப்­பிட்ட மனி­தர்­களை உள்­ள­டக்­கிய குழு­வினர், தங்­க­ளது அர­சியல் நல­னுக்­காக கூட்­டி­ணை­வது ‘அடை­யாள அர­சியல்’ எனப்­ப­டு­கின்­றது. இவ்­வி­த­மாக அர­சியல் நலனை பெற்­றுக்­கொள்­வ­தற்கு, இலங்கை முஸ்­லிம்கள் இஸ்­லா­மிய மதம் என்ற அடிப்­ப­டையில் முஸ்­லிம்­களை ஒன்­று­தி­ரட்டி, பிறி­தொரு இனக்­கு­ழு­வாக அடை­யாள அர­சி­யலில் ஈடு­பட்டு வரு­கின்­றதை அவ­தா­னிக்­கலாம். இந்த அடை­யாள அர­சி­யலின் வர­லாற்றுப் போக்­கினை சுருக்­க­மாகப் பார்க்­கலாம்.

இலங்கை முஸ்­லிம்கள்  பிறி­தொரு இனத்­துவ மதச் சமூ­க­மாக, தங்­க­ளு­டைய அடை­யா­ளத்தை சமூக, பொரு­ளா­தார மற்றும் அர­சியல் சூழ்­நி­லை­க­ளுக்­க­மைய மாற்­றி­ய­மைத்­துள்­ளார்கள். டெனிஸ் மகில்­விரே என்ற ஆய்­வா­ளரின் கருத்­துப்­படி, தென்­னிந்­திய முஸ்­லிம்­களைப் போன்று இலங்கை முஸ்­லிம்­களும் அரா­பிய மற்றும் பார­சீக கடல்சார் வியா­பா­ரி­களின் வழித்­தோன்­றல்­க­ளினால் தோற்றம் பெற்­ற­தொரு கலப்பு இன­மாகும். இவ்­வி­த­மாக நீண்ட கடல் பய­ணங்­களை மேற்­கொண்ட அரே­பிய வியா­பா­ரிகள் இலங்­கையில் தங்­கி­யி­ருந்து, இலங்கைப் பெண்­களை திரு­மணம் செய்­த­தி­னூ­டா­கவே இலங்­கையில் முஸ்­லிம்­களின் குடி­யேற்­றங்கள் ஆரம்­பித்­தன. இதன் மூலம் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு இந்­நாட்டு சுதேச மக்­க­ளு­ட­னான இரத்தத் தொடர்பு உள்­ளதை உறு­திப்­ப­டுத்­தலாம். கலா­நிதி சுக்­ரியின்  கருத்­துப்­படி, 9 ஆம் 10 ஆம் நூற்­றாண்­டு­களில், முஸ்­லிம்­க­ளு­டைய அடை­யா­ள­மாக அரபு மொழியும் இஸ்­லா­மிய மதமும் காணப்­பட்­டன.

அரா­பிய வர்த்­த­க­மா­னது 13ஆம், 15ஆம் நூற்­றாண்­டு­களில் தென்­னிந்­தி­யாவில் வியா­பித்­த­துடன், இலங்­கை­க்கு அதி­க­ள­வான தென்­னிந்­திய வர்த்­த­கர்­களின் பிர­சன்­னமும் அதி­க­ரித்­தது.  இதனால் இலங்­கையில் அதி­க­ள­வான தென்­னிந்­திய முஸ்லிம் வர்த்­த­கர்­களின் குடி­யேற்­றங்­களும் ஏற்­பட்­ட­துடன் அது இலங்கை முஸ்­லிம்­க­ளு­டைய கலா­சா­ரத்­திலும் அடை­யா­ளத்­திலும் மாற்­றங்­களைக் கொண்­டு­வந்­தது. குறிப்­பாக இது­வரை காணப்­பட்ட அரா­பிய அடை­யாளம் இந்­திய அரா­பிய அடை­யா­ள­மாகப் பரி­ண­மித்­ததுடன், மொழி ரீதி­யாக அரா­பியத் தமிழும் இலங்கை முஸ்­லிம்­க­ளி­டத்தில் தோற்றம் பெற்­றது.

போர்த்­துக்­கேய மற்றும் ஒல்­லாந்­தர்­களின் ஆக்­கி­ர­மிப்­புக்குப் பின்னர் இலங்கை முஸ்­லிம்கள் பல துய­ரங்­க­ளுக்கு ஆளாக்­கப்­பட்­ட­துடன், கரை­யோர துறை­முக வர்த்­த­கங்­களை முஸ்­லிம்கள் இழந்­த­துடன், கரை­யேராப் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர். அதன் பின்­னரே கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்கள் அதி­க­ளவில் குடி­யே­றினர். இக்­கா­லப்­ப­கு­தியில் இலங்கை முஸ்­லிம்­க­ளு­டைய அரா­பிய உல­கி­னு­ட­னான தொடர்­புகள் துண்­டிக்­கப்­பட்­ட­துடன், மதம் மற்றும் கலா­சார விட­யங்­களில் தென்­னிந்­தி­யாவில் தங்­கி­யி­ருக்க வேண்டி ஏற்­பட்­டது. இதன்­மூலம் தென்­னிந்­திய சூபிக் கலா­சாரம் இலங்­கையில் பரவ ஆரம்­பித்­தது.

பிரித்­தா­னி­யரின் ஆக்­கி­ர­மிப்புக்குப் பின்னர், முஸ்­லிம்­க­ளுக்கு சாத­க­மான கொள்கை கொண்டு வரப்­பட்­ட­துடன், முஸ்­லிம்­க­ளு­டைய வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஊக்­கு­விப்­புக்­களும் ஒத்­தா­சை­களும் வழங்­கப்­பட்­டன. இக்­கா­லத்தில் முஸ்­லிம்கள் வர்த்­த­கத்தில் முன்­னேற்­ற­ம­டைந்­தமை 1915 சிங்­கள – முஸ்லிம் கல­வ­ரத்­துக்கு ஒரு முக்­கிய காரணம் எனக் குறிப்­பி­டலாம். பிரித்­தா­னியர் காலத்தில் முஸ்­லிம்­களின் சமூக சீர்­தி­ருத்­தத்­துக்கு ஒராபி பாஷா தலைமை தாங்­கினார். இவ­ருடன் சேர்ந்து சித்­தி­லெப்­பையும் முஸ்­லிம்­க­ளு­டைய கல்வி வளர்ச்­சிக்­கா­கவும் சமூக சீர்­தி­ருத்­தத்­துக்­கா­கவும் சேவை செய்தார். குறிப்­பாக அரபு மத்­ர­ஸாக்­களில் ஆங்­கிலக் கல்­வியை அறி­மு­கப்­ப­டுத்தல் மற்றும் முஸ்லிம் பெண்­க­ளுக்­கான பாட­சாலை ஆரம்­பிக்­கப்­பட்­டன. இக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளு­டைய அடை­யாள அர­சியல் தனி­யான கல்வி மற்றும் பத்­தி­ரிகை வெளி­யீ­டாகக் காணப்­பட்­டது.

மேற்­கூ­றிய கல்வி அபி­வி­ருத்தி மற்றும் பத்­தி­ரிகை ஆகி­யன முஸ்­லிம்­க­ளி­டையே அர­சியல் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­யது. முஸ்­லிம்­களின் தோற்றம் தென்­னிந்­தி­யா­வுடன் தொடர்­புபட்­ட­தா­கவும் அவர்கள் மதம் மாறிய தமி­ழர்கள் என்ற பொன்­னம்­பலம் இரா­ம­நா­தனின் கருத்தை ஐ.எல்.எம் அஸீஸ் முற்­றாக எதிர்த்­த­துடன், முஸ்­லிம்கள் தனி­யான சமூக மற்றும் அர­சியல் அடை­யா­ளத்தை உடை­ய­வர்கள் என்றும் முஸ்­லிம்­க­ளு­டைய அடை­யா­ள­மா­னது இஸ்லாம் மற்றும் அரபு உல­கத்­துடன் தொடர்­பு­டை­யது எனத் தெரி­வித்தார். மேலும், முஸ்­லிம்கள் தமிழ் மொழியைப் பேசி­னாலும் கலா­சாரம் மற்றும் மதத்தின் அடிப்­ப­டையில் வேறு­பட்­ட­வர்கள் என்­ப­தையும் எடுத்­து­ரைத்தார். இதன் பின்னர் முஸ்­லிம்கள் தங்­க­ளது இஸ்­லா­மிய தொடர்­பினை தென்­னி­யா­வி­லி­ருந்து, மத்­திய கிழக்கை நோக்கி நகர்த்த முற்­பட்­டனர். இந்த அடை­யாள அர­சியல் போராட்டம் பிற்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளி­டையே மத­ரீ­தி­யான உள்­ளக  (சூபி–வஹாபி) மோதல்கள் ஏற்­பட கார­ண­மா­யிற்று எனக் கரு­தலாம்.

இஸ்­லா­மிய மதத்தின் அடிப்­ப­டையில் முஸ்­லிம்கள் தங்­க­ளது அடை­யா­ளத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக, முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்­கான தனி­யான கல்­வி­யாண்டு, முஸ்லிம் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான தனியார் ஆசி­ரிய பயிற்சி நிலை­யங்கள், வக்பு சபை, முஸ்லிம் மற்றும் தனியார் சட்டம் என்­பன முஸ்­லிம்­களை மத­ரீ­தியான தனி­யான அடை­யா­ளத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் மற்றும் வெற்­றிகள் எனக் குறிப்­பி­டலாம்.

இது மாத்­தி­ர­மல்­லாமல் முஸ்­லிம்கள் தங்­களை பிறி­தொரு இனக்­கு­ழு­வாக அர­சியல் ரீதி­யாக அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக, தமிழ் அர­சியல் போராட்­டத்­தி­லி­ருந்து வேறு­பட்டு, தென்­னி­லங்கை சிங்­கள அர­சி­யலை ஆத­ரிக்கும் போக்­கினை தென்­னி­லங்கை முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் பின்­பற்­றினர். இவ்­வி­த­மான அர­சியல் போக்­கினை மைய­மாக வைத்து முஸ்­லிம்­க­ளு­டைய நலன்­களை சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளிடம் பெற்றுக் கொண்­டனர். தமிழ் அர­சியல் போராட்­டத்தை வன்­மு­றையைக் கொண்டு இலங்கை அரசு கட்­டுப்­ப­டுத்த எடுத்த முயற்­சி­யா­னது, முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சிங்­கள அர­சியல் கட்­சி­க­ளுடன் இணை­வ­தற்கு கார­ண­மா­கி­யி­ருக்­கலாம்.

1980 களின் பின்­ன­ரான விடு­தலைப் புலி­களின் போராட்­ட­மா­னது, 1990 களின் பின்னர், சிங்­கள எதிர்ப்பு மாத்­தி­ர­மல்­லாமல் முஸ்லிம் எதிர்ப்­பா­கவும் பரி­ண­மித்­தது. வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்றம் மற்றும் கிழக்கு மாகா­ணத்தில் இடம்­பெற்ற முஸ்லிம் படு­கொ­லைகள், தமிழ் பேசும் மக்­களின் போராட்டம் தமிழ் போராட்­ட­மாக நோக்­கு­வ­தற்கு முஸ்­லிம்கள் தள்­ளப்­பட்­டனர். சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளு­ட­னான முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் நெருக்கம் ஒரு கார­ண­மெனத் தெரி­விக்­கப்­பட்­டாலும், முஸ்­லிம்கள் தனி­யான­தொரு இனக்­கு­ழுமம் என்­பதே இவ்­வி­த­மான தாக்­கு­தல்­க­ளுக்கு முக்­கிய கார­ணி­யாக இருக்­கலாம்.

தென்­ப­குதி முஸ்லிம் அர­சியல் உயர்­குழாம், வடக்கு கிழக்கு முஸ்­லிம்­களை பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்து பாது­காக்க முடி­ய­வில்லை மற்றும் முஸ்­லிம்­க­ளு­டைய உரி­மை­களை பெற்றுக் கொடுக்­கவும் முடி­ய­வில்லை என்ற அடிப்­ப­டையில், கிழக்கில் அஷ்ரப்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸைத் தோற்­று­வித்து இலங்கை முஸ்லிம் வர­லாற்றில் அர­சியல் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தினார். இந்த அர­சியல் போராட்டம் தக்பீர் முழக்­கத்­து­ட­னான முஸ்லிம் தனித்­து­வ­மான அடை­யாள அர­சியல் போராட்­ட­மாக எழுச்சி பெற்­றது. பாரா­ளு­மன்ற ஆச­னங்­களை வைத்­துக்­கொண்டு பேரம்­பேசும் அர­சி­ய­லி­னூ­டாக, (குறிப்­பாக கிழக்கு) முஸ்­லிம்­க­ளு­டைய உரி­மை­க­ளையும் நலன்­களை விருத்தி செய்­வ­தாகக் காணப்­பட்­டது. கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள முஸ்லிம் கிரா­மங்கள் தங்­களைத் தனி­யாக அடை­யாளம் காட்­டு­வ­தற்­காக அரே­பிய கட்­ட­டக்­கலை, அரே­பிய எழுத்­துக்கள் மற்றும் பேரீச்சம் மரங்­களை நடுதல் என்­பன தமி­ழர்­க­ளி­ட­மி­ருந்து முஸ்­லிம்­களை பிரித்துக் காட்­டு­வ­தற்­கான முயற்­சி­யா­கவும் கரு­த­மு­டியும். மேலும் இது மத்­தி­ய­கி­ழக்கு நாடு­களின் நிதி­யு­த­வி­களின் வெளிப்­பாடு எனவும் கரு­தலாம்.

அஷ்­ர­பு­டைய மறை­வுக்­குப் பின்னர், மு.கா. பிள­வு­பட்­ட­துடன் அதன் பேரம்­பேசும் பலன் 2001 இலி­ருந்து 2005 வரை குறை­வ­டைந்தே வந்தது. 2005 இற்குப் பின்னர் முஸ்லிம் அர­சி­யலில் பல தலை­மைகள் தோற்­று­விக்­கப்­பட்­டனர்.  அதேபோல் முஸ்லிம் இயக்­கங்­களும் பல பிரி­வு­க­ளாகப் பிரிந்து வன்­மு­றை­களில் ஈடு­பட ஆரம்­பித்­தன. முஸ்லிம் இயக்­கங்­க­ளு­டைய அர­சி­யலை சற்று நோக்­குவோம்.

ஆரம்­பத்தில் குறிப்­பிட்­ட­துபோல், முஸ்­லிம்கள் தங்கள் அடை­யா­ளத்தை அரா­பிய உல­கத்­தின் பக்கம் திருப்­பி­யமை பல்­வேறு இஸ்­லா­மிய இயக்­கங்கள் தோன்­றவும் முஸ்லிம் சமூ­கத்தில் மாற்­றங்கள் ஏற்­ப­டவும் வழி­வ­குத்­தது. தப்லீக் ஜமாஅத் மற்றும் ஜமாஅதே இஸ்லாமி ஆகிய இயக்­கங்கள் 1950 களில் முறையே இந்­தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டன. இவ்­வி­ரண்டு இயக்­கங்­களும் இஸ்­லா­மிய அரசு என்ற கோட்­பா­டு­களை இலங்­கையில் திணிக்­காது கால­தே­வைக்கு ஏற்­றாற்போல் செயற்­பட்­டன. தப்லீக் ஜமா­அத்தின் வருகை இலங்கை முஸ்லிம் ஆண்­களின் உடையில் மாற்­றங்­களைக் கொண்டு வந்­தன. ஜுப்பா மற்றும் தொப்பி ஆகி­யன முஸ்லிம் (தப்லீக்) ஆண்­க­ளி­டத்தே கவ­ரப்­பட்­டன. பிற்­கா­லத்தில் பெண்கள் முகத்தை மறைப்­பது கட்­டாயம் என்­ப­தையும் வலி­யு­றுத்­தி­யது இந்தத் தப்லீக் இயக்­க­மாகும். ஜமா­அதே இஸ்லாமி இயக்கம், படித்த நடுத்­தர வர்க்­கத்­தினை கவர்ந்­த­தொரு இயக்­க­மாகும்.

1970 களின் பிற்­ப­குதி மற்றும் 1980 களில் இலங்கை முஸ்லிம் மாண­வர்­க­ளுக்கு மார்க்க அறிவைப் பெற்­றுக்­கொள்ள மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லுள்ள இஸ்­லா­மிய கல்­லூ­ரி­களில் புலமைப் பரி­சில்கள் கிடைக்­கப்­பெற்­றன. அதே­வேளை பலர் மத்­தி­ய­கி­ழக்கு நாடு­க­ளுக்கு வேலை­வா­ய்ப்­புக்­கா­கவும் செல்ல ஆரம்­பித்­தனர். இவ்­வி­த­மாகச் சென்­ற­வர்கள் அவர்கள் அங்கு கற்ற மற்றும் பார்த்த இஸ்­லா­மிய பழக்­க­வ­ழக்­கங்கள், இலங்­கையில் காணப்­படும் இஸ்­லா­மிய பழக்­க­வ­ழக்­கங்­க­ளுக்கு மாற்­ற­மாக இருப்­பதை உணர்­கி­றார்கள் மற்றும் இலங்­கைக்கு திரும்ப வந்­ததும் அரா­பிய இஸ்­லாத்தை இலங்­கையில் பரப்­பு­வ­தற்கு அல்­லது இலங்­கையில் இஸ்­லாத்தைத் தூய்­மைப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தனர். இதற்­காக அரே­பிய நிறு­வ­னங்­களின் நிதி­யு­த­வி­களும் கிடைக்­கப்­பெற்­றன. இவ்­வாறே தௌஹீத் இயக்­கங்­களின் செயற்­பாடுகள் இலங்­கையில் தடம்­ப­திக்­கின்­றன.

இவ்­விதம் தோற்­றம்­பெற்ற இயக்­கங்­க­ளுக்கு, உள்ளூர் சூபித்­துவ இயக்­கங்கள் (தக்­கியா மற்றும் தரீக்­கா­வா­திகள்), தப்லீக் ஜமாஅத் மற்றும் ஜமாஅதே இஸ்­லாமி ஆகிய இயக்­கங்­க­ளினால் எதிர்ப்­புக்கள் ஏற்­பட்­டன. அதிலும் குறிப்­பாக சூபித்­துவ இயக்­கங்­களே பெரிதும் எதிர்த்­தன. ஆரம்­பத்தில் உரு­வான தௌஹீத் இயக்­கங்கள் காலம் செல்லச் செல்ல, தலை­மைத்­துவப் போட்டி, கொள்கை வேறு­பாடு, நிதிப் பங்­கீடு மற்றும் புவி­யியல் (ஊர்) வேறு­பாடு ஆகி­ய­வை­களை அடிப்­ப­டையாகக் கொண்டு பல இயக்­கங்­க­ளாகப் பிரிந்­தன. 2000 ஆம் ஆண்­டு­களில் இயக்க வேறு­பா­டுகள் பொது இடங்­களில் வன்­முறைத் தாக்­கு­தல்­க­ளுக்கு இட்டுச் செல்­கின்­றன. மேலும் இலங்­கையில் புதி­தாக பள்­ளிகள் மற்றும் மத்­ர­ஸாக்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரிக்­கின்­றன. முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் தங்கள் வாக்­கு­களை இழந்­து­விடக் கூடாது என்­ப­தற்­காக எந்த­வொரு இயக்­கத்­தையும் விமர்­சிக்­கவில்லை. அதேபோல் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வுக்குள் காணப்­படும் இயக்க அர­சியல், இப்­பு­திய இயக்­கங்­களை அங்­கீ­க­ரிக்க மறுப்­ப­துடன் ஒதுக்­கவும் செய்­கின்­றது. அத்­துடன் இலங்­கையின் அர­சி­ய­லை­மப்பில் காணப்­படும் மதச் சுதந்­தி­ரமும் புதிய இயக்­கங்கள் உரு­வா­வதை ஊக்­கு­விப்­ப­தாக காணப்­ப­டு­கின்­றது.

முஸ்­லிம்கள் தனித்­தனிக் குழுக்­க­ளாகப் பிரிந்து தங்­க­ளுக்­குள்ளே போட்டி போட்டுக் கொண்டு மார்க்க அடை­யா­ளங்­களில் குறிப்­பாக ஆடை­களில் மாற்­றங்­களைக் கொண்டு வந்­தமை முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளி­டத்தே பல தப்­பெண்­ணங்­களை வளர்க்க கார­ண­மா­யிற்று. இதற்கு 2009 ஆம் ஆண்டின் பின்­ன­ரான அர­சியல் நிலை­மையும் சாத­க­மாக அமைந்­தது. எது­வாக இருந்­தாலும், முஸ்­லிம்கள் தாம் இலங்­கையில் பெரும்­பான்மை சமூ­கத்­தினுள் சிறு­பான்­மை­யாக வாழ்­கின்றோம் என்­பதை மறந்து செயற்­பட்­டமை முஸ்லிம் எதிர்ப்­புக்கு கார­ண­மா­யிற்று என்­பதை மறுக்க முடி­யாது.

ஆரம்­ப­கால தௌஹீத் இயக்­கங்கள் இளை­ஞர்­களைக் கவர்ந்­தாலும் அவை வய­தான அனு­ப­வ­முள்­ள­வர்­களால் வழி­ந­டாத்­தப்­பட்­டன. இலங்­கையில் முஸ்லிம் இளை­ஞர்­களை தீவிரப் போக்­கு­டை­ய­தாக்கும் (ரெடிகல்) செயன்­மு­றையை ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் (தற்­போது சிலோன் தௌஹீத் ஜமாஅத் ஆகவும் பிளவுபட்டுள்ளது) ஆரம்­பித்­தது எனக் குறிப்­பி­டலாம். முஸ்லிம் இளைஞர், யுவ­தி­களை பாதைக்கு அழைத்து போராட்டம் நடத்­தி­யது இவ்­வி­யக்­கமே ஆகும். இவ்­வி­யக்கத்தின் வழித்­தோன்­றலே தேசிய தௌஹீத் ஜமா­அத்­தாகும்.

இவ்­வ­ளவு கால­மாக முஸ்­லிம்கள் இஸ்­லா­மிய அடை­யா­ளத்­துக்கு கொடுத்­து­வந்த முக்கியத்துவங்கள் அல்லது அடையாள அரசியலானது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் சாவாலுக்குட்பட்டு வருகின்றதை அவதானிக்கலாம். முஸ்லிம் அரசியல் கட்சிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள், இஸ்லாமியப் பெண்களின் ஆடை, பள்ளிகள், மத்ரஸாக்கள், முஸ்லிம் தனியார் சட்டம், முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் பாரிய அரசியல் ரீதியான நெருக்குதல்களை சந்தித்து வருகின்றன. பெரும்பான்மை சமூகத்தினால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் விடயங்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு தனியாக நின்று முகம்கொடுக்க இயலுமையற்ற நிலையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதனால் ஏனைய முஸ்லிம் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல் கட்சிகளும் முன்வந்துள்ளதை அவதானிக்கலாம். அத்துடன் பயங்கரவாதிகளைக் காட்டிக் கொடுப்பதிலும் முஸ்லிம்கள் முன்னிற்கின்றனர்.

முஸ்லிம் விரோதம் மற்றும் காழ்ப்புணர்வு முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகளாகக் காட்ட முயற்சிக்கின்றது. இதனால் முஸ்லிம்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுதல், அநீதியான கைதுகள் மற்றும் பாரபட்சத்துக்குள்ளாதல் ஆகியவற்றுக்கு எதிராக முஸ்லிம்கள், நடுநிலைப் போக்குள்ள பேரின அரசியல்வாதிகளுடனும்  சிவில் சமூக அங்கத்தவர்களுடனும் சேர்ந்து அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அத்துடன் முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் இயக்கங்கள் வன்முறைப் போக்கிற்கு இட்டுச் செல்வதைத் தடுப்பதற்கான அறிவூட்டல்களை மேற்கொள்வதுடன் நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்கக் கற்றுக்கொடுக்கவும் வேண்டும். இதனூடாகவே முஸ்லிம்களுடைய அடையாள அரசியலைப் பாதுகாக்கலாம். அடையாளமில்லாமலாக்கப்பட்டால், அந்த சமூகத்தின் அரசியலும் வீழ்ச்சியடையும் என்பதையும் மனதில் வைத்துச் செயற்பட வேண்டும்.
-Vidivelli

3 Comments
  1. மிக முக்கியமான கட்டுரை. சில விவாதங்கள் இருந்தாலும் முஸ்லிம் மக்கள் வரலாற்றை அறிவியல்பூர்வமாக ஆராயும் ஒருசில கட்டுரைகளில் மொகமட் பஸ்லானின் கட்டுரையும் ஒன்றாகும்.
    விவாதங்களில் இரண்டு முக்கிய விடயங்கள் முஸ்லிம் அடையாள அரசியலின் ஆரம்பநிலையில் அரேபிய செல்வாக்க துருக்கிய செல்வாக்கா தென் இந்திய முஸ்லிம்களின் செல்வ்வாக்கா ஆரம்பகாலங்களில் நேரடி அரபு செல்வாக்கா முதன்மையானது என்கிற கேழ்வி எனக்கும் உள்ளது. ஆய்வாளர்கள் பலருக்கு தெளிவில்லாத பகுதி இது. 2. கிழக்கில் 1980 களின் பின்னர் நிகழ்ந்த வன்முறை வகாபி மற்றும் தமிழ் போராட்டக்குழுக்களுக்குமிடையிலான இருதரப்பு வன்முறையா அல்லது ஆசிரியர் சொல்வதுபோல தனித்து தமிழர் தரப்பு வன்முறையா என்பது. 1985ம் ஆண்டு அம்பாறைமாவட்ட தமிழ் பகுதிகள் எரியூட்டபட்டபின் தோழர் அஸ்ரப் வெளியிட்ட “முஸ்லிம் என்று சொல்ல வெட்க்கி தலை குனிகிறேன்” அறிக்கைய ஆசிரியர் வாசிக்க வேண்டும். உயிரைப் பணயம் வைத்து புலிகளுடன் முஸ்லிம்கள் தொடர்பாக நான் தர்கம் செய்த எல்லா தருணங்களிலும் அவர்கள் தந்த வாக்குறுதிகளின் சுருக்கம் “அம்பாறையில் முஸ்லிம்கள் தமிழர்களைத் தாக்கினால் மட்டும் நாம் வடகிழக்கில் முஸ்லிம்களை தாக்க்குவோம். ” என்பதாகவே அமைந்தது. இதுபற்றி நான் தோழர் அஸ்ரப்புக்கும் ஏனைய சில முஸ்லிம் தலைவர்களுக்கும் அறிவித்திருக்கிறேன். இதை குறிப்பிடுவதன் காரணம் மிக சிறந்த ஒரு கட்டுரை இறுதியில் நம்பக தன்மையை இழந்து விடக்கூடாது என்பதனால் மட்டும்தான். ஏனெனில் தமிழ் முஸ்லிம் உறவை உண்மைகளில் இருந்துமட்டுமே கட்டி எழுப்பமுடியும். ஆசிரியருக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  2. சமீனா சஹீட் says

    நடுநிலைமையாக இருந்து எழுதப்பட்டுள்ள ஆய்வுக்குட்படுத்த வேண்டிய கட்டுரை. அனைவரையும் சிந்திக்க வைக்கக் கூடிய எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது மிகவும் பராரட்டத்தக்கது.

  3. சமீனா சஹீட் says

    ஆய்வுக்குட்படுத்த வேண்டிய சிறந்த கட்டுரை. அனைவரையும் சிந்திக்கத் தூண்டவல்லது. எளிய நடையில் கனதியான விடயங்களை வரலாறு புரலாது படிப்படியாக நகா்த்தும் விதம் அபாரம். எனது மகனக்கு நல் வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.