பரீட்சைகள் கல்விக்கு முற்றுப்புள்ளியல்ல

0 858
  • சிஹ்லா இஸ்ஸதீன்
    (பாணகமுவ)
    கிழக்குப் பல்கலைக்கழகம்.

இன்று கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தர பெறு­பே­று­களின் முடி­வுகள் வெளி­யான நிலையில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு ஊட­கங்கள் தொடக்கம் உற்றார் வரை வாழ்த்­துக்­க­ளையும் ஊக்­கங்­க­ளையும் குவித்த வண்ணம் உள்­ளனர். பல மாண­வர்கள் தத்தம் திற­மைக்­கேற்ப உயர்ந்த பெறு­பே­று­களைப் பெற்று பாட­சா­லைக்கும் பெற்­றோர்க்கும் பெருமை சேர்த்­துள்­ளனர். இவர்கள் மேலும் அதி­க­மாக முயற்­சித்து நாளைய சாதனை நட்­சத்­தி­ரங்­க­ளாக மிளிர வேண்டும் என்று வாழ்த்­தி­ய­வ­ளாக……..

இன்று இலங்­கையில் ஒரு மொழி, இரு மொழி, மும்­மொழிப் பாட­சா­லை­க­ளென மொழி அடிப்­ப­டையில் வகுக்­கப்­பட்­டுள்ள தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்­கள பாட­சா­லை­க­ளென மொத்­த­மாக ஏறக்­கு­றைய 10,000 பாட­சா­லைகள் இயங்­கு­கின்­றன. இவற்றில் ஏறக்­கு­றைய 4 மில்­லியன் மாண­வர்கள் கல்வி கற்­ப­துடன் கிட்­டத்­தட்ட 2,30,000 ஆசி­ரி­யர்கள் கற்­பித்தல் பணியில் ஈடு­ப­டு­கின்­றனர். இலங்­கை­யி­னு­டைய பாட­சாலைக் கல்­வி­ய­மைப்பில் ஆறாம் வயதில் முதலாம் தரத்­திற்குச் சேர்க்­கப்­படும் மாணவன் பதி­னொன்று அல்­லது பதின்­மூன்று வரு­டங்கள் பாட­சா­லையில் இல­வசக் கல்­வியைத் தொடர்­கின்றான். இக்­கால கட்­டத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை ,   க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்சை , க.பொ.த. உயர்­தரப் பரீட்சை ஆகிய மூன்று பரீட்­சை­க­ளுக்கும் தோற்றும் சந்­தர்ப்பம் கிடைக்­கி­றது. இருப்­பினும் இம்­மூன்று பரீட்­சை­க­ளுக்கும் தோற்றும் வாய்ப்பு தரம் 1 இல் இணையும் நூறு வீத­மா­ன­வர்­க­ளுக்கும் கிடைப்­ப­தில்லை.

அவ்­வாறு அம்­மூன்று பரீட்­சை­க­ளுக்குத் தோற்றும் அனைத்து மாண­வர்­களும் அப்­ப­ரீட்­சையில் சித்­தி­ய­டை­வ­து­மில்லை.

இவ்­வாறே ஒவ்­வொரு வரு­டமும் கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைக்கு பாட­சாலை மற்றும் தனிப்­பட்ட பரீட்­சார்த்­தி­க­ளாக ஏறக்­கு­றைய 5,00,000 மாண­வர்கள் தோற்­று­வ­துடன் அவர்­களில் அண்­ண­ள­வாக 50 – 60  வீதத்­திற்கு இடைப்­பட்­ட­வர்­களே உயர்­தரம் கற்­ப­தற்கு தகுதி பெறு­கின்­றனர். இவ்­வ­ரு­டமும் பாட­சாலை மட்டம் மற்றும் வெளி­வா­ரி­யாக மொத்தம் 518,184  பேர் தோற்­றி­யி­ருந்­தனர். இதில் 71.66  வீத­மா­ன­வர்கள் உயர் தரத்­திற்கு தகுதி பெற்­றுள்­ளனர். ஏனை­ய­வர்­களின் நிலை என்ன என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

பரீட்­சையில் சித்­தி­ய­டைந்து உயர்­தரம் செல்­ப­வர்கள் அதிலும் சித்­தி­ய­டைந்து உயர் கல்­வியைப் பெறு­வ­தி­னூ­டாக வாழ்வின் இலக்­கு­களை அடைந்து கொள்­கின்­றனர். ஏனை­ய­வர்கள் கல்வி என்ற நாமத்தை மறந்து விட்டு வேறு தொழில்­க­ளிலோ அல்­லது வேறு விட­யங்­க­ளிலோ ஈடு­பாடு காட்­டு­வ­த­னூ­டாக பொரு­ளா­தா­ரத்தில் முன்­னே­று­கின்­றனர்.

ஆனால் இவர்­க­ளுக்குள் எத்­த­னையோ சாத­னை­யா­ளர்கள் தன் திற­மையை அறி­யா­மை­யி­னாலோ அல்­லது திற­மையை வெளிக்­காட்ட சந்­தர்ப்பம் கிட்­டா­மை­யி­னாலோ உலகில் மிளி­ராமல் அமிழ்ந்து போகின்­றார்கள் என்றால் அது மிகை­யா­காது. உண்­மையில் இலங்­கையில் பாட­சாலைக் கல்­வி­யி­னு­டைய முடிவு என்­பது ஏட்டுக் கல்­வியை வழங்கி பரீட்சை முறை­மை­க­ளி­னூ­டாக சோத­னைக்கு உட்­ப­டுத்தி ஞாபக சக்­திக்கு முன்­னு­ரிமை வழங்­கு­ப­வை­யா­கவே காலம் கால­மாக இருந்து வரு­கின்­றன. இல­வசக் கல்­வியின் ஆரம்பம் தொடக்­கமே இலங்­கையில் இவ்­வ­கை­யான பரீட்சை முறை­களே பின்­பற்­றப்­பட்டு வரு­கின்­ற­துடன் இப்­ப­ரீட்சை அமைப்பே பல மாண­வர்­களின் எதிர்­கா­லத்தை இல்­லாமல் ஆக்­கு­வ­தா­கவும் அமை­கின்­றது என்றால் அது மிகை­யா­காது.

இன்று ஒவ்­வொரு பாட­சா­லை­க­ளிலும் ஒவ்­வொரு வகுப்­ப­றை­க­ளிலும் தனியாள் வேறு­பா­டு­களைக் கொண்ட பல்­வேறு மாண­வர்­களை எம்மால் அவ­தா­னிக்க முடி­கி­றது. சிலர் சிறந்த பேச்­சா­ளர்­க­ளாக இருப்­பார்கள் , சிலர் கவிதை , கதை

என எழுத்­து­லகில் ஆர்வம் கொண்­ட­வ­ராக இருப்பர். இன்னும் சிலர் விளை­யாட்டுத் துறை­யிலும் இன்னும் சிலர் கைப்­ப­ணி­க­ளிலும் என ஒவ்­வொரு வகுப்­ப­றை­களும் ஒவ்­வொரு துறை­க­ளிலும் பல்­வே­று­பட்ட திற­மை­சா­லி­களை சுமந்த வண்­ணமே உள்­ளன. ஆனால் ஒரு பரீட்சை முடிவு இவர்­களை வெகு­தூரம் பின்­னுக்குத் தள்ளி விடு­கின்­றது.

சில மாண­வர்­களைப் பார்த்தால் சகல அறிவும் கொண்டு வகுப்­ப­றை­களில் மிகச்­சி­றந்த கெட்­டிக்­கா­ரர்­க­ளாக இருப்பர். ஆனால் பரீட்சை முடி­வுகள் அவர்­க­ளுக்கு நேர் விரோ­தமாய் இருக்கும். இரண்டு மூன்று மணித்­தி­யால பரீட்சை வினாத்­தளில் சரி­யான முறையில் விடை­ய­ளிக்­க­வில்லை என்­ப­தற்­காக நாம் அவனை கல்­வி­ய­றி­வற்ற மாணவன் என்று கூறி­விட முடி­யாது.

அவ­னது ஏதோ ஒரு சூழ்­நிலை அவ்­வி­னாக்­க­ளுக்கு சரி­யாக அவனால் விடை­ய­ளிக்க முடி­யாமல் போயி­ருக்­கலாம். இங்கு அவன் பரீட்­சையில் சித்­தி­ய­டை­ய­வில்லை என்­ப­தற்­காக அவ­னுக்கு தொடர்ந்து கற்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் தடுக்­கப்­ப­டலாம். இன்னும் சிலர் தமக்குள் வேறு பல திற­மை­க­ளில் இருந்தும் கூட அதனை பாட­சாலைக் கல்­வியின் பின் கைவிட்டு விடு­கின்­றனர். உண்­மையில் இது மிகவும் வருந்­தத்­தக்க ஒரு செய­லா­கவே காணப்­ப­டு­கின்­றது.

ஏன் உங்கள் கல்வி வெறு­மனே ஒரு பரீட்சை பெறு­பேற்றில் முடி­வ­டைந்து விடுமா? ஏன் உங்­களால் தொடர்ந்து கற்று வாழ்க்­கையில் முன்­னேற முடி­யாதா? நிச்­ச­ய­மாக இல்லை! தன் வாழ்க்­கையில் எதை­யா­வது சாதித்தே தீர வேண்டும் என்று நினைப்­பவன் தன்­னம்­பிக்­கையை ஒரு­போதும் கைவிட மாட்டான்.

எழு­திய பரீட்­சையில் சிறந்த முடிவு வர­வில்­லையா? பரீட்­சையை மீண்டும் எழு­துங்கள். சரி படிப்­புதான் சரி­யாக வர­வில்­லையா? வேறு துறைக்குள் கால் வையுங்கள். இன்று எமது சமூ­கத்தில் பரீட்­சையில் சித்­தி­ய­டைய தவறும் பட்­சத்தில் பெண்­பிள்­ளைகள் என்றால் உடனே திரு­மணம் செய்து வைக்­கின்­றார்கள். ஆண்கள் என்றால் குடும்ப சுமையை தலையில் கட்­டு­கி­றார்கள். இது கூடாது குற்றம் என்று சொல்ல முனை­ய­வில்லை. ஆனால் அவர்­க­ளையும் எம்மால் பெரிய சாத­னை­யா­ளர்­க­ளாக ஆக்­கலாம் என்றே கூற விளை­கின்றேன்.

இன்று எத்­த­னையோ தொழிற் பயிற்சி வழங்கும் நிறு­வ­னங்கள் செயற்­ப­டு­கின்­றன. கணனி , ஆங்­கிலம் உட்­பட பல தொழில் வாய்ப்­புக்­களைப் பெற்றுத் தரக்­கூ­டிய பல துறைசார் கற்­கை­நெ­றிகள் போதிக்­கப்­பட்டும் வரு­கின்­றன. இவை­க­ளி­னூ­டாக நாம் அவர்­க­ளுக்கு சிறந்த ஒரு எதிர்­கா­லத்தை கட்­ட­மைத்துக் கொடுக்­கலாம். இவை ஆண் பிள்­ளை­க­ளுக்­குத்­தானே சரிப்­பட்டு வரும் என்று நீங்கள் நினைக்­கலாம். ஏன் வெளி­நா­டு­களில் மட்­டும்­தானா பெண்கள் சாதிக்க வேண்­டுமா? அத்­து­றை­களில் பெண்­களை ஈடு­ப­டுத்த விரும்­ப­வில்லை எனின் தையல் , கைப்­பணி சார்ந்த துறை­களில் அவர்­களை ஈடு­ப­டுத்­த­லாமே.

ஆகவே மாண­வர்­களை அவர்­க­ளது திற­மை­க­ளுக்கு ஏற்ப துறை­களை தேர்ந்­தெ­டுத்துக் கற்­ப­தற்­கான வாய்ப்பை நாம் வழங்­குதல் வேண்டும். அதிலும் அவர்கள் ஆர்வம் காட்டும் துறை­களை கற்கும் வாய்ப்பை நாம் வழங்கும் போது அவர்கள் அதில் இல­கு­வாக வெற்­றி­ய­டைய சந்­தர்ப்பம் கிட்­டு­வ­துடன் அவர்கள் மகிழ்ச்­சி­யாக செயற்­ப­டவும் ஆரம்­பிப்­பார்கள்.

மேலும் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த மாணவர்களுக்கும் அவர்களின் விருப்பிற்கேற்ப துறைகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குதல் வேண்டும். பெற்றோர்களின் விருப்பிற்கேற்ப துறைகள் தேர்தெடுக்கும் பட்சத்தில் கல்வியில் நாட்டம் குறைந்து மன அழுத்தங்களுக்கு உள்ளாகி அவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும் என்பதில் ஐயமில்லை.

கல்வி என்பது வெறுமனே ஏட்டுக் கல்வியைக் குறிக்கவில்லை மாறாக தெரியாதவற்றைக் கற்றுக் கொள்வது அனைத்துமே கல்விதான். எமது சமூகத்தையும் நாம் சாதனை மிகுந்த சமூகமாகக் கட்டியெழுப்புவதில் முன் நிற்க வேண்டும். இன்றைய பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தினை கை காட்டுபவர்கள் அவர்களுடைய பெற்றோர்களை விட வேறு யாராகவும் இருக்க முடியாது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.