குப்பைத் திட்டத்தினுள் நசுக்கப்படும் புத்தளம்

0 717

முஹம்மட் ரிபாக்

ஒடுக்­கப்­பட்ட சமூகம் என்றோ ஒருநாள் கிளர்ந்­தெழும். இது­போ­லத்தான், அன்று புத்­த­ளத்தில் சீமெந்து தொழிற்­சா­லையை நிறு­வினர். பின்னர் அனல் மின்­ நிலையத்தை ஸ்தாபித்­தனர். இப்­படி தாம் வாழும் சூழ­லுக்கு அச்­சு­றுத்தும் வகை­யி­லான திட்­டங்கள் புத்­த­ளத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தனால் அம்­மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டனர். புவி வெப்­ப­மாதல், காற்று மாச­டைதல், நச்சு வாயுக்கள், நிலத்­தடி நீர் மாச­டைவு, மழை­யின்மை இப்­படி இயற்கை சூழ­லுக்கு பெரும் பாதிப்பு ஏற்­பட்­டது. புத்­தெ­ழில்­மிக்க புத்­தளம் மாசுற ஆரம்­பிக்க மக்­களும் தமக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திகள் குறித்து விழிப்­ப­டைய ஆரம்­பித்­தனர். நிலைமை இப்­ப­டி­யி­ருக்க திண்­மக்­க­ழி­வ­கற்றல் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த அர­சாங்கம் புத்­தளம் மாவட்­டத்தை தெரிவு செய்­தது. அத்­துடன், அதற்­காக அறு­வாக்­காடு எனும் இயற்கை வளம் நிறைந்த பகு­தியில் காட­ழிப்பை செய்து திட்­டத்தை முன்­னெ­டுத்து இறுதிக் கட்­டத்தை அடைந்­தி­ருக்­கி­றது. இப்­படி புத்­தளம் மக்கள் மீது அத்­து­மீ­றிய சுற்­றா­ட­லுக்கும் வாழ்­வி­ய­லுக்கும் கேடு­வி­ளை­விக்கும் திட்­டங்­களை திணிப்­பதால் அந்த மக்கள் கிளர்ந்­தெழ ஆரம்­பித்­தனர். நூற்­றுக்­க­ணக்­கான நாட்கள் சத்­தி­யாக்­கி­ர­க­மி­ருந்த மக்கள் கடந்த 19 ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்றை நடத்­தி­யி­ருந்­தனர். அதற்­கப்பால் புத்­த­ளத்­திற்கு சென்ற ஜனா­தி­ப­திக்கும் தமது எதிர்ப்பை அமை­தி­யான முறையில் தெரி­விக்க முயன்­றனர்.

ஜனா­தி­ப­தியின் புத்­தளம் விஜயம்

“நாட்­டுக்­காக ஒன்­றி­ணைவோம்” புத்­தளம் மாவட்­டத்­துக்­கான செயற்­றிட்­டத்தின் நிறை­வு­விழா கடந்த வெள்­ளிக்­கி­ழமை (22) புத்­தளம் சேர்விஸ் வீதியில் உள்ள சக்தி விளை­யாட்டு மைதா­னத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இடம்­பெற்­றது.

இதன்­போது, குறித்த கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்ட பொது­மக்கள், ஜனா­தி­பதி கலந்­து­கொண்ட சக்தி விளை­யாட்டு மைதா­னத்­திற்கு முன்­பாக செல்ல முற்­பட்­ட­போது ஆண்கள், பெண்கள் மீது பொலிஸார் தடி­யடிப் பிர­யோகம் மேற்­கொண்­டனர்.

கொழும்பு குப்­பை­களை புத்­த­ளத்தில் கொட்டும் அர­சாங்­கத்தின் திட்­டத்தை உட­ன­டி­யாகக் கைவிட வேண்­டு­மெனக் கோரி புத்­த­ளத்தில் மக்கள் நீண்ட கால­மாக ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இந்த விட­யத்தில் ஜனா­தி­ப­தியை நேரில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு சர்­வ­மத குழு மற்றும் க்ளீன் புத்­தளம் அமைப்­பி­ன­ருக்கு சந்­தர்ப்பம் தருமாறு தொடர்ச்­சி­யாக வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

எனினும், அந்தக் கோரிக்கை இது­வரை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்­பதை கண்­டித்தும், புத்­த­ளத்­திற்கு விஜயம் செய்யும் ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்கு சர்­வ­மத குழு உள்­ளிட்­டோ­ருக்கு சந்­தர்ப்­பத்தை பெற்றுக் கொடுக்­கு­மாறும் கோரியே இந்த கறுப்புக் கொடி கவ­ன­யீர்ப்பு போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இந்தக் கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் மக்கள் பிர­தி­நி­திகள் மற்றும் ஆண்கள், பெண்கள், இளை­ஞர்கள் என பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் கலந்­து­கொண்­டனர்.

புத்­தளம் தபால் நிலை­யத்­தி­லி­ருந்து பேர­ணி­யாக சென்று, புத்­தளம் பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில், காலை 8.30 மணிக்கு ஒன்­று­௯­டிய மக்கள், குப்­பைக்கு எதி­ரான பல வாச­கங்கள் எழு­தப்­பட்ட சுலோ­கங்­களை ஏந்­தி­ய­வாறும், குப்­பைக்கு எதி­ரான கோஷங்­களை எழுப்­பி­ய­வாறும் கவ­ன­யீர்ப்பில் ஈடு­பட்­டனர்.

இதன்­போது, ஸ்மார்ட் ஸ்ரீலங்கா வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்து வைப்­ப­தற்­காக ஜனா­தி­பதி வருகை தர­வி­ருந்த பிர­தேச செய­ல­கத்தை நோக்கி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் செல்ல முற்­பட்­ட­போது, அதனை பொலிஸார் தடுத்து நிறுத்­தினர்.

இதனால் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கும், பொலி­ஸா­ருக்கும் இடையில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­ட­துடன், அங்கு பதற்­ற­நிலை காணப்­பட்­டது. விஷேட அதி­ர­டிப்­படை, கலகம் தடுக்கும் பொலிஸார், நீர்த் தாரை பீச்சும் கவச வாகனம்  என்­பன தயார் நிலையில் இருந்­தன. அத்­துடன், ஜனா­தி­பதி கலந்­து­கொள்ள இருந்த அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும்  பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

புத்­தளம் பொலிஸார், இந்தப் போராட்­டக்­கா­ரர்­களைத் தடுத்து நிறுத்­து­வ­தற்­காக, புத்­தளம் நீதி­மன்­றத்­தினால் பெற்­றுக்­கொண்ட தடை­யுத்­த­ரவை பொலிஸார் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளிடம் வாசித்துக் காட்­டினர். எனினும், குறித்த போராட்டம் அமை­தி­யான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இதே­வேளை, ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் புத்­தளம் பிர­தேச செய­ல­கத்­திற்கு செல்­வதை பொலிஸார் தடுத்து நிறுத்­தி­ய­போது, ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் அங்­கி­ருந்து கலைந்து சென்று ஜனா­தி­பதி கலந்­து­கொண்ட பிர­தான வைபவம் இடம்­பெற்ற புத்­தளம் சக்தி விளை­யாட்டு மைதா­னத்­திற்கு செல்ல முற்­பட்­ட­போதே அங்கு பொலி­ஸா­ருக்கும், பொது­மக்­க­ளுக்கும் இடையே அமை­தி­யின்மை ஏற்­பட்­டது.

இதே­வேளை, குப்பை பிரச்­சினை தொடர்பில் சமயத் தலை­வர்கள் உள்­ளிட்ட ஐந்து பேர­டங்­கிய குழு­வொன்­றுக்கு சக்தி விளை­யாட்டு மைதா­னத்தில் வைத்து ஐந்து நிமி­டங்கள் ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்­காக அனு­மதி பெற்றுத் தரு­வ­தாக ஜனா­தி­பதி செய­லக அதி­கா­ரி­யொ­ருவர் வாக்­கு­று­தி­ய­ளித்து, அந்த ஐவ­ரையும் சக்தி விளை­யாட்டு மைதா­னத்­திற்கு அழைத்துச் சென்ற போதிலும், இறுதி நேரத்தில் அந்த சந்­திப்பு இடம்­பெ­ற­வில்லை.

தடி­யடிப் பிர­யோகம்

ஜனா­தி­பதி கலந்து கொண்ட பிர­தான வைபவம் இடம்­பெற்ற சக்தி விளை­யாட்டு மைதா­னத்­திற்கு செல்ல முற்­பட்ட போராட்­டத்தில் ஈடு­பட்ட ஆண்கள், பெண்கள் மீது பொலிஸார் தடி­யடிப் பிர­யோகம் மேற்­கொண்­டனர்.

ஜனா­தி­பதி கலந்­து­கொண்ட பிர­தான நிகழ்­வுக்கு மக்கள் கட்­டுப்­பாட்டை இழந்து, உள்­செல்ல முற்­பட்­ட­தா­லேயே இவ்­வாறு தடி­யடிப் பிர­யோகம் மேற்­கொண்டு அவர்­களை அங்­கி­ருந்து விரட்­டி­ய­டித்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்த தடி­யடிப் பிர­யோ­கத்­தினால் ஆண்கள், பெண்கள் காய­ம­டைந்­துள்­ளனர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஐவர் கைது

நீதி­மன்­றத்தின் உத்­த­ரவை மீறிப் போராட்­டத்தில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டின் பேரில்  இரண்டு இளை­ஞர்கள் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டனர்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட இரு­வரும், சனிக்­கி­ழமை (23) புத்­தளம் மாவட்ட நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

அத்­துடன், கடந்த சனிக்­கி­ழமை காலை குறித்த சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்ட க்ளீன் புத்­தளம் அமைப்பின் உறுப்­பினர் ஒருவர் விசா­ர­ணையின் பின்னர் கைது செய்­யப்­பட்­ட­துடன், ஞாயிற்­றுக்­கி­ழமை  இரண்டு இளை­ஞர்­களும் கைது செய்­யப்­பட்­டனர்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் மூவரும் ஞாயிற்­றுக்­கி­ழமை (24) நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட பின்பு, பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

மேலும் 28 பேருக்கு எதி­ரா­க விசா­ரணை

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன புத்­த­ளத்­திற்கு வருகை தந்­த­போது, கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில்  கலந்­து­கொண்ட மேலும் 28 பேருக்கு எதி­ராக விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

வீடியோ மற்றும் புகைப்­ப­டங்கள் மூலம் குறித்த 28 பேரும் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

இதே­வேளை, பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்ட ஐவ­ருக்கு எதி­ரான வழக்கு நேற்று வியா­ழக்­கி­ழமை  புத்­தளம் மாவட்ட நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

இந்த விசா­ர­ணையின் போது பெயர் குறிப்­பிட்ட 28 பேரு­டைய பெயர்கள் பொலி­ஸாரால் நீதிவான் முன்­னி­லையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டன. அத்­துடன், 28 பேரில் நேற்­றைய தினம் 4 பேர் நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

இவ்­வாறு ஆஜ­ரான நான்கு பேருக்கும் நீதிவான் பிணையில் செல்ல அனு­மதி வழங்­கினார்.

இதே­வேளை, புத்­தளம் பொலி­ஸாரால் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட 28 பேரில் 24 பேரை அடுத்த மாதம் 25 ஆம் திகதி நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­மாறு அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

கடும் கண்­டனம்

புத்­த­ளத்­திற்கு விஜயம் செய்த ஜனா­தி­பதி, இந்தக் குப்பை விவ­காரம் தொடர்பில் பேசா­தது, சர்­வ­மத குழு மற்றும் க்ளீன் புத்­தளம் அமைப்­பி­னரை சந்­திப்­ப­தற்கு அனு­மதி வழங்­கா­தமை, ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்­காக போராட்டம் நடத்­தி­ய­வர்கள் மீது பொலிஸார் தடி­யடிப் பிர­யோகம் மேற்­கொண்­ட­மையை சமயத் தலை­வர்­களும், சமூக ஆர்­வ­லர்­களும் கண்­டித்­துள்­ளனர்.

எதிர்­கால சந்­த­தி­யி­னரை பாது­காக்கும் இந்த சரித்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த போராட்­டத்தில் ஈடு­ப­டு­வோரை தடி­யடிப் பிர­யோகம் மேற்­கொண்­டாலும், கைது செய்து சிறையில் அடைத்­தாலும் இந்தப் போராட்­டத்­தி­லி­ருந்து மக்கள் பின்­வாங்கப் போவ­தில்லை எனவும் புத்­தளம் மக்­களின் இந்தப் போராட்­டத்­திற்கு புத்­தளம் மாவட்ட சர்­வ­மத குழுவின் ஆத­ரவு எப்­போதும் உண்டு என புத்­தளம் மாவட்ட சர்­வ­மத குழுவின் பொரு­ளாளர் ஸ்ரீவஸ்ரீ வெங்­கட சுந்­தர ராம குருக்கள் தெரி­வித்தார்.

கடந்த 200 நாட்­க­ளுக்கு மேல் இந்த மக்கள் புத்­த­ளத்தில் குப்­பைக்கு எதி­ரான போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். கடந்த 19 ஆம் திகதி கொழும்பு காலி­முகத் திட­லிலும் கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அப்­போது, ஜனா­தி­பதி செயலகம் மற்றும் பிர­தமர் அலு­வ­லகம் என்­ப­வற்­றுக்கு சென்று அதி­கா­ரி­களை சந்­தித்து இந்த குப்பைத் திட்டம் தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரை சர்­வ­ம­தக்­குழு நேரில் சந்­திக்க வேண்டும் எனவும் அதற்கு ஏற்­பாடு செய்து தரு­மாறும் கேட்­டுக்­கொண்டோம்.

விரைவில் அதற்­கான சந்­தர்ப்­பங்­களை பெற்றுத் தரு­வ­தாக ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் அலு­வ­லக அதி­கா­ரிகள் வாக்­கு­று­திய­ளித்­தனர்.

இந்த நிலையில், கடந்த வெள்­ளிக்­கி­ழமை சில நிகழ்­வு­களில் கலந்­து­கொள்­வ­தற்­காக வரு­கை­தந்த ஜனா­தி­ப­தியை பத்து நிமி­டங்களேனும் சந்­திப்­ப­தற்கு சர்­வ­மத குழு மற்றும் க்ளீன் புத்­தளம் அமைப்­பி­ன­ருக்கு சந்­தர்ப்­பத்தை பெற்றுத் தரு­மாறும் சு.க. அமைப்­பா­ளர்­க­ளான விக்டர் அன்­டனி மற்றும் என்.டி.எம்.தாஹிர் ஆகி­யோரைக் கேட்­டுக்­கொண்டோம்.

ஜனா­தி­ப­தி­யுடன் சந்­திப்­ப­தற்கு சந்­தர்ப்பம் பெற்றுத் தரு­வ­தாக வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டதே தவிர, உறு­தி­யாக நேரம் பெற்றுத் தர­வில்லை. இத­னை­ய­டுத்து, புத்­தளம் மக்கள் ஜனா­தி­ப­தியின் கவ­னத்தை ஈர்க்கும் நோக்கில் அமை­தி­யான முறையில் கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்­து­வ­தென தீர்­மா­னித்து,  மிகவும் அமை­தி­யான முறை­யில்தான் போராட்டம் நடத்­தி­னார்கள்.

மக்கள் தெரிவு செய்த ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்கும், பிரச்­சி­னை­களை சொல்­வ­தற்கும் அந்த மக்­க­ளுக்கு உரி­மைகள் இருக்­கின்­றது. அதை யாராலும் தடுக்க முடி­யாது.

எனவே, இவ்­வாறு போராட்டம் நடத்­தி­ய­வர்கள் மீது பொலிஸார் நடந்­து­கொண்ட விதமும், இது­பற்றி ஜனா­தி­பதி கவனம் செலுத்­தாமல் இருப்­பதும் வேத­னையை ஏற்­ப­டுத்­து­கி­றது.

எனவே, அர­சாங்கம் இன்­னமும் கடும் போக்­குடன் நடந்­து­கொள்­ளாமல், வெளி­நாட்டு ஆலோ­ச­னை­களைப் பெற்று, கொழும்பு குப்­பை­களை வேறு பகு­திக்கு எடுத்துச் சென்று மீள்­சு­ழற்­சிக்கு உட்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்டும்.

எனவே, அர­சாங்கம் இன்­னமும் கடும் போக்­குடன் நடந்­து­கொள்­ளாமல், வெளி­நாட்டு ஆலோ­ச­னை­களைப் பெற்று, கொழும்பு குப்­பை­களை வேறு பகு­திக்கு எடுத்துச் சென்று மீள்­சு­ழற்­சிக்கு உட்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்டும்.

எந்தப் பாதிப்­புக்­களும் வராது என்று வாக்­குறுதி வழங்கி அமைக்­கப்­பட்ட அனல் மின்­சாரம், சீமெந்து தொழிற்­சாலை என்­ப­வற்றால் மக்கள். இன்றும் அவ­திப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை மீண்டும் இந்த அர­சாங்­கத்­திற்கு ஞாப­கப்­ப­டுத்­து­கிறோம்.

இதே­வேளை, குப்பை விவ­காரம் தொடர்பில் புத்­தளம் மக்கள் பொறு­மை­யாக செயற்­ப­டு­வ­துடன், அதி­க­மாக துஆ பிரார்த்­த­னை­களில் ஈடு­ப­டு­மாறும் புத்­தளம் பெரி­ய­பள்­ளி­வாசல் பொது­மக்­களை கேட்­டுள்­ளது.

புத்­தளம் பெரி­ய­பள்­ளி­வாசல் கண்டனம்

புத்­தளம் நக­ருக்கு வரு­கை­தந்த ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்கு அனு­மதி வழங்க கோரி அமை­தி­யான போராட்­டத்தை நடத்­திய மக்கள் மீது பொலிஸார் மேற்­கொண்ட தாக்­குதல் நட­வ­டிக்­கைகள் வேத­னையை அளிக்­கி­றது.

இன, மத வேறு­பா­டு­க­ளின்றி, தியா­கங்­க­ளுக்கு மத்­தியில் எதிர்­கால சந்­த­தி­யி­னரை பாது­காக்கும் இந்த சரித்­திர முக்­கி­யத்­து­வ­மிக்க போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான புத்­தளம் மக்­களின் உணர்­வு­களை அர­சாங்­கமும், அர­சி­யல்­வா­தி­களும் கவ­னத்தில் எடுக்க வேண்டும் என்­பதே சிவில் தலை­மை­களின் எதிர்­பார்ப்­பாகும்.

அத்­துடன்,  இத்­த­கைய அசம்­பா­வி­தங்கள் மற்றும் சமூ­கத்தை அழிக்கக் கூடிய திட்­டங்­க­ளி­லி­ருந்து எமது ஊரையும், எமது சமூ­கத்­தையும் பாது­காக்க இறை­யச்­சத்­துடனும், உளத்­தூய்­மை­யு­டனும் இறை­வ­னிடம் துஆப் பிரார்த்­த­னை­களில் ஈடு­ப­டுவோம்.

அத்­தோடு, வெள்­ளிக்­கி­ழமை அசம்­பா­வி­தங்­களில் காயப்­பட்ட, வேத­னைப்­பட்ட, சட்ட சிக்­கல்­க­ளுக்கு உட்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு இறைவன் உடல், உள சுகத்தை தர நாம் அனை­வரும் பிரார்த்­திக்­கிறோம்.

இதே­வேளை, சமூ­கங்கள் மத்­தியில் பிரச்­சி­னை­களை உரு­வாக்க நினைக்கும் சில தீய சக்­தி­களின் முயற்­சியில் மாட்­டிக்­கொள்­ளாத வகையில் பொது­மக்கள் சம­யோ­சி­த­மாக செயற்­ப­டு­மாறும் கேட்­டுக்­கொள்­கிறோம் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பெண்கள் மீது தாக்­குதல் பொலி­ஸா­ருக்கு எதி­ராக முறைப்பாடு

குறித்த சம்­ப­வத்தின் போது பெண்கள் மீது தடி­யடிப் பிர­யோகம் மேற்­கொண்ட பொலி­ஸா­ருக்கு எதி­ராக முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்பின் உறுப்­பினர் மிப்ளால் பொலிஸ் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

புத்­தளம் மக்கள், அபி­வி­ருத்­திக்கு எதி­ராகப் போராட்டம் நடத்­த­வில்லை. தமது எதிர்­கால சந்­த­தி­யி­னரை பாது­காக்கும் நோக்­கி­லேயே போராட்­டத்தை நடத்­தி­னார்கள். இவ்­வாறு போராட்டம் நடத்­திய மக்கள் மீது குறிப்­பாக பெண்கள் என்று பார்க்­காமல் தடி­யடிப் பிர­யோகம் மேற்­கொண்­ட­மையை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கிறோம்.

என­வேதான் பெண்கள் மீது தாக்­குதல் நடத்­திய பொலி­ஸா­ருக்கு எதி­ராக விசா­ர­ணை­யொன்றை ஆரம்­பிக்­கு­மாறு தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­துள்ளோம் என்றார்.

பிரே­ரணை நிறை­வேற்றம்

கொழும்பு குப்­பை­களை கொட்­டு­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ள­மைக்கு எதி­ராக வணாத்­த­வில்லு பிர­தேச சபையில் பிரே­ரணை ஒன்று நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

வணாத்­த­வில்லு பிர­தேச சபையின் தலைவர் சமந்த முன­சிங்க தலை­மையில், சபா மண்­ட­பத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை காலை மாதாந்த அமர்வு இடம்­பெற்­றது.

இதன்­போது, ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பினர் ஏ.எம்.எம்.அனஸ்தீன் குப்பை திட்டம் தொடர்பில் விஷேட பிரே­ரணை ஒன்றை சமர்ப்­பித்தார். பின்பு குறித்த பிரே­ரணை தொடர்பில் விவாதம் நடத்­தப்­பட்­ட­துடன், இறு­தியில் வாக்­கெ­டுப்பும் இடம்­பெற்­றது.

இந்த வாக்­கெ­டுப்பில் குப்பைத் திட்ட பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வணாத்­த­வில்லு பிர­தேச சபை தலைவர் சமந்த முனசிங் உள்­ளிட்ட 14 பேர் வாக்­க­ளித்­தனர். இதில் ஸ்ரீல.பொ.ஜ.பெர­முன உறுப்­பி­னர்கள் 6 பேரும் , ஸ்ரீல.மு.கா உறுப்­பி­னர்கள் இரு­வரும், சுயேட்­சைக்­குழு – 2 ஒரு­வரும், ஐ.தே.க உறுப்­பி­னர்கள் நால்­வரும், ஸ்ரீல.சு.க உறுப்­பினர் ஒரு­வரும் இதற்கு எதி­ராக வாக்­க­ளித்­தனர்.

அத்­துடன், ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பினர் ஒரு­வரும், ஸ்ரீல.சு.கட்சி உறுப்­பினர் ஒரு­வரும், சுயேட்சைக் குழு -1 உறுப்­பி­னர்கள் இரு­வரும் இந்த வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­ளாமல் நடு­நி­லைமை வகித்­தனர்.

அர­சி­யல்­வா­திகள் என்ன செய்யப் போகி­றார்கள்

இந்த குப்பை விவ­காரம் தொடர்பில் திட்­டத்தை செயற்­ப­டுத்­தியே தீருவோம் என திட்­டத்­திற்கு பொறுப்­பான அமைச்சர் சம்­பிக்க ரணவக்கவும், எமது மையத்தின் மீது ஏறியே குப்பை வாகனங்களை அறுவாக்காட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் போராட்டக்காரர்களும் ௯றி வருகிறார்கள்.

மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசாங்கம் இவ்வாறு திட்டத்தை நடைமுறைப்படுத்த எத்தனிக்க ௯டாது. இதற்கு முன்னரும் எவ்வித பாதிப்புக்களும் வராது என்று அமைக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின்சாரம், சீமெந்து தொழிற்சாலை என்பவற்றால் இந்த மக்கள் இன்றுவரை அதனது பாதிப்புக்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியிருக்கையில், இந்த குப்பை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் என்ன வாக்குறுதிகளை வழங்கினாலும் அவற்றை நம்புவதற்கு இந்த மக்கள் தயாராக இல்லை என்பதையே ௯றி வருகிறார்கள். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திப்பதற்கு சர்வமத குழு, க்ளீன் புத்தளம் ஆகியோருக்கு ஒருமுறை சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதே மக்களுடைய கோரிக்கையாகும்.

இதற்காகவே, கடந்த வெள்ளிக்கிழமையும் போராட்டம் நடத்தினார்கள். இந்த மக்களின் போராட்ட உணர்வு ஜனாதிபதிக்கு விளங்கவில்லையா? இந்த மக்களை சந்திப்பதற்கு விருப்பமில்லையா அல்லது ஜனாதிபதியை சந்திப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு விருப்பமில்லையா என்பது எல்லோரினதும் கேள்வியாகவே உள்ளது.

எனவே, இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தேர்தல் காலங்களில் மாத்திரம் வாக்கு வேட்டைக்காக வலம் வரும் முஸ்லிம் அரசியல்வாதிகள் , இந்த குப்பை விடயத்தில் ஒரே அணியில் நின்று புத்தளம் மக்களின் நியாயமான கோரிக்கையை ஆட்சியாளர்களுக்கு தெளிவுபடுத்தி நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.