நியூஸிலாந்து படுகொலை மனித குலத்திற்கு விரோதமானது

0 673

ஜும்ஆ தொழு­கைக்குத் தயார் நிலையில் இருந்த அப்­பாவி முஸ்­லிம்கள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை மூர்க்­கத்­த­ன­மாக நியூ­ஸி­லாந்தில் சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்­டிருக் கிறார்கள்.

நியூ­சி­லாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இரு பள்­ளி­வா­சல்­களில் இந்தக் கொடூரம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது. உலக நாடுகள் அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­யுள்­ளன. அதுவும் நியூ­ஸி­லாந்தில் இடம்­பெற்­றுள்­ளதா என்று வியப்பில் ஆழ்ந்­துள்­ளன.

துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வத்தில் 50 பேர் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்கள். 50 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். இவர்­களில் 34 பேர் வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெற்று வரு­வ­துடன் 12 பேரில் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக நியூ­ஸி­லாந்தின் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

துப்­பாக்கிச் சூட்­டினை நடத்­திய தீவி­ர­வாதி அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த பிரென்டன் ஹரிசன் டரன்ட் என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­துடன் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இஸ்­லாத்­துக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ரான தீவி­ர­வா­திகள் முஸ்­லிம்­களை பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­யின்­போது இல­கு­வாக இலக்கு வைக்க முடியும். தங்கள் தீவி­ர­வாத தாக்­கு­தல்­களை கச்­சி­த­மாக நிறை­வேற்­றிக்­கொள்ள முடியும் என்­பதை உறு­திப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இத­னா­லேயே பள்­ளி­வா­சல்­களை இலக்­காகக் கொண்டு செயற்­ப­டு­கி­றார்கள். எமது நாட்­டிலும் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் 1990 இல் காத்தான்குடி பள்­ளி­வா­சல்­களில் தொழுது கொண்­டி­ருந்த முஸ்­லிம்­களை இலக்கு வைத்து நூற்­றுக்­க­ணக்­கா­னோரின் உயிர்­களைப் பலி­யெ­டுத்­தார்கள்.

நியூ­ஸி­லாந்து தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட 3 ஆண்கள், ஒரு பெண் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக கிறிஸ்ட்சர்ச் பொலிஸ் ஆணை­யாளர் மைக் புஷ் தெரி­வித்­துள்ளார். துப்­பாக்கிச் சூடு நடத்­தி­யவர் முகப்­புத்­தகம், இன்ஸ்­டா­கிராம் சமூக வலைத்­த­ளங்­களில் நேரலை செய்­து­கொண்டே தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்ளார் என்றும் அவர் கூறி­யுள்ளார். இதே­வேளை, நியூஸி­லாந்து பிர­தமர் ஜெசிந்தா ஆர்டர்ன் செய்­தி­யா­ளர்­க­ளிடம் தெரி­வித்த கருத்­துக்கள் இச்­செயல் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­கி­றது.

“இரு வேறு பள்­ளி­வா­சல்­களில் துப்­பாக்கிச் சூடு நடத்­தி­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் நபர் அந்தத் தாக்­கு­தலைத் தொடுப்­ப­தற்கு சுமார் 9 நிமி­டங்­க­ளுக்கு முன்பு அது குறித்து அறிக்கை ஒன்றை எனக்கும் மேலும் 30 பேருக்கும் மின்­னஞ்சல் செய்தார். ஆனால் தாக்­கு­த­லுக்­கான கார­ணமோ தாக்­குதல் நடக்­க­வுள்ள இடம்­பற்­றிய விப­ரங்­களோ குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. மின்­னஞ்சல் கிடைத்து 2 நிமி­டங்­களில் அது குறித்து பாது­காப்பு தரப்­புக்கு தெரி­யப்­ப­டுத்­தினேன்.

இது ஒரு தீவி­ர­வாதத் தாக்­குதல். தீவி­ர­வாத எண்ணம் கொண்­டோ­ருக்கு நியூ­ஸிலாந்­திலும் இந்த உல­கத்­திலும் இடம் இல்லை என்று தெரி­வித்­துள்ளார்.

துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்ட இரு பள்­ளி­வாசல் இமாம்­களும் தாம் தொடர்ந்து நியூ­ஸி­லாந்தை நேசிப்­ப­தாக கூறி­யுள்­ளமை தேசத்தின் பற்­று­தலை வெளிப்­ப­டுத்துகிறது. துப்­பாக்கிச் சூட்டில் பலி­யா­ன­வர்கள்  நியூ­ஸி­லாந்தில் குடி­யே­றிய வெளி­நாட்டு முஸ்­லிம்கள் என இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். பலஸ்தீன், ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான், இந்­தியா, பங்­க­ளாதேஷ், இந்­தோ­னே­சியா, எகிப்து, ஜோர்தான், சவூதி அரே­பியா ஆகிய நாடு­களைச் சேர்ந்­தோரே பலி­யா­கி­யுள்­ளனர் என இனம் காணப்­பட்­டுள்­ளது.

பங்­க­ளா­தேஷின் கிரிக்கெட் அணி இந்த அனர்த்­தத்­தி­லி­ருந்தும் உயிர் தப்­பி­யுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தை கண்­டித்­துள்­ள­துடன் அனு­தா­பங்­க­ளையும் வெளி­யிட்­டுள்ளார். உலக நாடுகள் சம்­ப­வத்தை வன்­மை­யாகக் கண்டித்துள்ளன.

நியூஸிலாந்தில் முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல்களு க்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து அரசும் அவுஸ்திரேலிய அரசும் இச் சம்பவம் குறித்து துரித விசாரணைகளை நடத்தி காரணங்களை ஆராயவேண்டும். இதன் பின்னணியில் வேறு ஆயுதக் குழுக்கள் தொடர்புபட்டுள்ளனவா என்பதைக் கண்டறிந்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும். முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.