காபூல் சிறார்களை கவரும் நடமாடும் நூலகம்

0 697

ஆப்­கா­னிஸ்­தானின் தலை­ந­க­ர­மான காபூலின் புற­ந­கர்ப்­ப­கு­தி­களில் உள்ள நீல நிறத்­தி­லான பேருந்து நிலை­யங்கள் அனை­வ­ரு­டைய கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளன.

இது நட­மாடும் நூலக சேவை ஒன்­றுடன் இணைந்த பேருந்து நிலை­யங்கள் ஆகும். வெகு­ சீக்கிரத்திலேயே சிறு­வர்­களை இந்த நட­மாடும் பேருந்து நூலகம் கவர்ந்­துள்­ளது. குறித்த நட­மாடும் பேருந்து நூலகம் சிறு­வர்­களை உரிய நேரத்தில் ஏற்­றிச்­சென்று பின்னர் கொண்டுவந்து விடு­கி­றது. இந்த நூல­கத்தின் மூலம் காபூல் சிறு­வர்கள் புதிய அனு­ப­வத்தைப் பெற்­றி­ருப்­ப­தோடு தமது அறிவு, விவேகம் மற்றும் சிந்­தனை ஆற்றல் என்­ப­வற்­றையும் வளர்த்­துக்­கொண்­டுள்­ளனர்.

இந்த நட­மாடும் நூலகம் கடந்த வருடம் பெப்­ர­வரி மாதத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­ட­துடன் மிகக்­கு­று­கிய காலத்தில் காபூல் நகரம் முழு­வதும் பேசப்­படும் ஒரு விட­ய­மாக மாறி­விட்­டது.

காபூல் நக­ரத்­தி­லுள்ள நான்கு சமூ­கங்­க­ளுக்கும் இந்த நூல­கத்தின் சேவை கிடைக்­கி­றது. ஒவ்­வொரு நாளும் எல்லா பேருந்து நிலை­யங்­க­ளிலும் இரண்டு மணித்­தி­யா­லங்கள் இந்த பேருந்து நூலகம் தரித்து நிற்கும்.

“அனை­வ­ரி­னதும் சிந்­தனை ஆற்­றலை வளர்ப்­பதே இந்த நட­மாடும் நூல­கத்தின் பிர­தான இலக்­காகும். இது எமது கல்வி முறையில் அல்­லது சமூ­கத்தில் ஒரு உயர்வை ஏற்­ப­டுத்தும் என நம்­பு­கிறோம்” என இந்த செயற்­றிட்­டத்தை ஆரம்­பித்து வைத்த 26 வய­தான சகோ­தரி பிரெஸ்டா கரீம் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், சிறு­வர்கள் உல­க­ளா­விய கதை­களை வாசிக்­கும்­போது பல்­வேறு விட­யங்­களை தெரிந்து கொள்­கி­றார்கள். அத்­துடன் சிந்­திக்கும் திறனை விருத்தி செய்­து­கொள்­வ­தோடு உள்­ளார்ந்த ஆற்­ற­லையும் பெற்­றுக்­கொள்­கி­றார்கள்.

நாங்கள் ஒரு வரு­ட­மாக சிறு­வர்­க­ளுடன் பணி­பு­ரி­கிறோம். இதி­லி­ருந்து சிறு­வர்கள் மிகவும் அழுத்­த­மான உணர்ச்­சி­களைக் கொண்­ட­வர்கள் என்­பதைப் புரிந்­து­கொள்ள முடிந்­தது. அவர்­க­ளிடம் அதி­க­மாக உற்­சா­கமும் அறி­வுத்­தா­கமும் காணப்­ப­டு­கி­றது. சிறு­வர்கள் அதி­க­மாக முத­லிட தகு­தி­யு­டை­ய­வர்கள். அந்த வகையில் கல்வி என்­பது நாம் முத­லீடு செய்­ய­வேண்­டிய விட­யங்­களுள் ஒன்று ஏனென்றால், அது தான் எமது நாட்டை மாற்றும்.

சிந்­தனை ஆற்­றலை மேம்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே தொடங்­கப்­பட்ட இந்த நட­மாடும் நூல­கத்தில் இது­வரை 40,000 இற்கும் மேற்­பட்டோர் பதிவு செய்­துள்­ளனர். தினமும் நூற்­றுக்கும் மேற்­பட்ட சிறு­வர்கள் இந்த நூல­கத்தின் மூலம் பய­ன­டை­கி­றார்கள்.

இந்த நூல­கத்­துக்­கான அதி­க­மான புத்­த­கங்கள் நிதி­யு­த­விகள் மூலமே கிடைக்கப் பெறு­கின்­றன. கிடைக்­கப்­பெறும் புத்­த­கங்கள் மூன்று நூலகப் பொறுப்­பா­ளர்­களால் தரம்­பி­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

ஆரம்­பத்தில் காபுல் நக­ரத்தைச் சேர்ந்­த­வர்கள் நட­மாடும் பேருந்து வண்­டியில் புத்­த­கங்­களை வாசிப்­ப­தற்கு தமது பிள்­ளை­களை அனுப்ப அச்சம் கொண்­டார்கள். தற்­போது இந்த நூல­கத்தின் பெறு­ம­தியை பெற்றோர்கள் உணர்ந்துள்ளதோடு இங்கு தமது பிள்ளைகளை அனுப்புவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த நூலகத்தின் கட்டமைப்பை அவதானித்த அந்நாட்டின் கல்வி அமைச்சு, இது போன்ற வசதிகளை பாடசாலைகளிலும் ஏற்படுத்தவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.
நன்றி: அல்ஜெஸீரா
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.