பெண் பரீட்சார்த்திகளின் ஆடை வரையறுக்கப்பட வேண்டும்

0 851

அர­சாங்க பரீட்­சை­க­ளுக்கு முஸ்லிம் பெண்கள் தோற்­றும்­போது, அவர்கள் அணியும் ஆடைகள் தொடர்­பான சர்ச்சை தொடர்ந்து வரு­வதை நாம் அறிவோம். குறிப்­பாக பரீட்சை எழுதும்  மாண­விகள் தமது முகம் மற்றும் காது என்­ப­வற்றை காண்­பிக்க வேண்­டி­யது பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் சுற்­று­நி­ரு­பத்தின் படி கட்­டா­ய­மா­ன­தாகும். எனினும் சில பிர­தே­சங்­களில் முஸ்லிம் மாண­விகள் முகத்தை முழு­மை­யாக மூடிய வண்ணம் பரீட்­சை­க­ளுக்குத் தோற்­று­கின்­றனர். மேலும் சிலர் முகத்தை திறந்­தி­ருப்­பினும் காது பகு­தியை காண்­பிக்க மறுக்­கின்­றனர். அந்த வகையில் இந்த செயற்­பா­டுகள் பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்­களால் கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இது பரீட்சை எழுதிக் கொண்­டி­ருக்கும் மாண­வி­களைப் பாதிக்கச் செய்­வது மாத்­தி­ர­மன்றி சில சம­யங்­களில் அவர்­க­ளது பெறு­பே­றுகள் கூட வெளி­யி­டப்­ப­டாது இடை­நி­றுத்­தப்­ப­டு­கின்­றன. சமீ­பத்தில் முகத்தை மூடிக் கொண்டு தேசிய பரீட்­சை­க­ளுக்குத் தோற்­றிய பல மாண­வி­களின் பெறு­பே­றுகள் இது­வரை வெளி­யி­டப்­ப­டாது இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­மையும் இங்கு கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

இந் நிலை­யில்தான் இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும் நோக்கில் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலை­மையில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், சிவில் சமூக அமைப்­புகள் என்­பன இணைந்து கலந்­து­ரை­யா­டலை நடத்தி அர­சாங்க பரீட்­சை­க­ளுக்குத் தோற்றும் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­க­ளுக்­கான உடை எவ்­வாறு அமைய வேண்டும் என்­பது தொடர்பில் பொதுத் தீர்­மானம் ஒன்றை எட்­ட­வுள்­ளன. இந்த முயற்சி வர­வேற்­கத்­தக்­கதும் காலத்தின் தேவை கரு­தி­ய­து­மாகும்.

இது தொடர்­பான கூட்­ட­மொன்று நாளை கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது. இதில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­தி­களும் கல்­வி­மான்­களும் கலந்து கொண்டு தமது அபிப்­பி­ரா­யங்­களை முன்­வைக்­க­வுள்­ளனர்.  இதன்­போது பரீட்சை எழுதும் முஸ்லிம் மாண­விகள் இஸ்­லா­மிய கலா­சா­ரத்­துக்கு உட்­பட்டு, அதே­நேரம் பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் சுற்று நிரு­பத்தை மீறா­த­வாறு எவ்­வாறு ஆடை அணி­ய­வேண்டும் என்­பது தொடர்பில் தீர்­மானம் ஒன்று எட்­டப்­ப­ட­வுள்­ளது.

பரீட்­சைகள் நடை­பெ­று­கின்ற காலங்­களில் முஸ்லிம் மாண­விகள் தொடர்பில் இவ்­வா­றான சர்ச்­சைகள் எழு­வது இன்று தொடர்­க­தை­யா­கி­விட்­டது. பல இடங்­களில் முழுக்க முழுக்க முகத்தை மூடி­ய­வாறே மாண­விகள் பரீட்­சைக்குத் தோற்­று­கின்­றனர். இது அவர்கள் பரீட்­சை­களில் மோச­டி­களில் ஈடு­ப­டவும் வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுக்­கி­றது. அவ்­வா­றான சம்­ப­வங்கள் ஏலவே நடை­பெற்­று­முள்­ளன.

இஸ்­லா­மிய வரை­ய­றை­களைப் பேணு­கின்றோம் என்ற பெயரில் சிலர் இவ்­வா­றான துஷ்­பி­ர­யோ­கங்­களில் ஈடு­ப­டு­வ­தா­னது ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­திற்கும் இஸ்­லாத்­திற்­குமே அவப் பெயரைத் தேடிக் கொடுக்­கி­றது. பலர் காது­களில் தொடர்­பாடல் கரு­வி­களைப் பொருத்தி அதனை ஹிஜா­பினுள் மறைத்து பரீட்­சை­க­ளுக்குத் தோற்­றிய சம்­ப­வங்­களும் கடந்த காலங்­களில் பதி­வா­கி­யுள்­ளன. சிலர் மோச­டி­களில் ஈடு­ப­டாது முகத்தை மூடிய வண்ணம் நேர்­மை­யான முறையில் பரீட்­சைக்குத் தோற்­றி­னாலும் கூட, அவர்­க­ளது பெறு­பே­றுகள் இடை­நி­றுத்­தப்­ப­டு­கின்­றன. பல வரு­டங்கள் முயற்சி செய்து படித்து பரீட்சை எழு­தி­விட்ட, ஈற்றில் தமது பிடி­வாதம் கார­ண­மாக பெறு­பே­று­க­ளின்றி வாழ்வைத் தொலைக்க வேண்­டிய துர­திஷ்­ட­நிலை ஏற்­ப­டு­கி­றது.

என­வேதான் மார்க்­கத்தின் பெயரால் இவ்­வா­றான சலு­கை­களைப் பெறவோ அல்­லது மோச­டி­களில் ஈடு­ப­டவோ நாம் அனு­ம­திக்க முடி­யாது. அந்த வகையில் இது­வி­ட­யத்தில் இஸ்­லா­மிய வரை­ய­றை­களைப் பேணு­கின்ற அதே­நேரம், பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் சுற்­று­நி­ரு­பத்தைப் பாதிக்­காத வகை­யி­லான தீர்­மானம் எட்­டப்­பட்டு அதனை சகல முஸ்லிம் வகையிலான தீர்மானம் எட்டப்பட்டு அதனை சகல முஸ்லிம் பாடசாலைகள் மூலமாகவும் மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முஸ்லிம் தனியார் சட்டம் போன்று இதில் கருத்து வேறுபாடுபட்டு காலத்தை இழுத்தடிக்கக் கூடாது. உடனடியாகவே பொது நிலைப்பாடு எட்டப்பட வேண்டும். அதனை உடன் நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.