போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு இரு மாதங்களுள் மரணதண்டை

யார் எதிர்த்தாலும் நிறைவேற்றியே தீருவேன்; பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரி சூளுரைப்பு

0 544

பாரிய அள­வி­லான போதைப்­பொருள் கடத்தல் குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை வழங்க நான் நட­வ­டிக்கை எடுக்கும் போது எமது மனித உரிமை அமைப்­பு­களே எனக்கு தடை­யாக உள்­ளன. எனினும் இந்த விட­யத்தில் யார் தடுத்­தாலும் எந்த நெருக்­கடி வந்­தாலும் அடுத்த இரண்டு மாதத்தில் மர­ண­தண்­டனைச் சட்­டத்தை நிறை­வேற்றி குற்­ற­வா­ளி­களை தண்­டித்தே தீருவேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். சுமார் மூன்று மாதங்­க­ளுக்கு பின்னர் பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தந்த ஜனா­தி­பதி நேற்று பிற்­பகல் சபையில் உரை நிகழ்த்­தினார். இந்த உரையின் போதே அவர் இவற்றைச் சுட்­டிக்­காட்­டினார். அவர் மேலும் கூறு­கையில்,

இன்று தவ­றி­ழைத்­தோரை ஒப்­ப­டைத்தல் திருத்த சட்ட விவாதம் இடம்­பெற்று வரு­கின்­றது. இதன்­போது மர­ண­தண்­டனை கைதிகள் குறித்தும் பேச­வேண்டும். போதைப்­பொருள் கடத்தல், பாரிய குற்­றங்கள் தொடர்பில் சிறையில் உள்ள மர­ண­தண்­டனை கைதிகள் அனை­வ­ருக்கும் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்ற கருத்­தினை நான் நெடு நாட்­க­ளாக முன்­வைத்து வரு­கின்றேன். அந்த நிலைப்­பாட்டில் மாற்­ற­மில்லை. பாரிய குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை வழங்­கப்­படும் முறைமை பல நாடு­களில் நடை­மு­றையில் உள்­ளது. மின்­சாரக் கதிரை மூல­மாக, தூக்கு தண்­டனை மூல­மாக மரண தண்­டனை நிறை­வேற்­றப்­படும் முறைமை பல நாடு­களில் உள்­ளன. நாட்டின் குற்­றங்­களை தடுக்­கவும் நாட்­டினை ஒழுக்­க­மாக கொண்டு நடத்­தவும் சமூ­கத்தை சரி­யான பாதையில் வழி­ந­டத்­தவும் கடு­மை­யான சட்­டங்­களை கையாள வேண்டும். சமூ­கத்தை சரி­யான பாதையில் வழி­ந­டத்த சகல மத கோட்­பா­டு­களும் வழி­காட்­டி­யாக உள்­ளது. அற­வ­ழியை போதிக்­கின்­றது. ஆனால் அவை மட்­டுமே போது­மா­ன­தல்ல. சட்­டங்­களும் கடு­மை­யா­ன­தாக மாற்­றப்­பட வேண்டும்.

மரண தண்­டனை கைதி­களின் விப­ரங்­களை நான் நீதி அமைச்­சிடம் கேட்ட போது உரிய நேரத்தில் அவை எனக்குக் கிடைக்­க­வில்லை. அவை பிற்­போ­டப்­பட்­டது. போதைப்­பொருள் கடத்தல் குற்­ற­வா­ளி­களை காப்­பாற்­று­வதில் கடத்­தல்­கார கும்­பல்­களின் தலை­யீ­டுகள் இருந்­தி­ருக்க வேண்டும். அறிக்கை எனக்கு ஜன­வரி மாதம் கிடைத்­தது. ஆனால் அந்த அறிக்­கையில் பல முரண்­பா­டுகள் உள்­ளன. நீதி­மன்ற தீர்ப்பு வழங்­கப்­பட்ட குற்­ற­வா­ளி­களை போல நீதி­மன்­றத்­திற்கு அனுப்­பாத கைதி­களின் பெயர்­களும் உள்­ளன. அதுவே கால தாம­தத்­திற்கு கார­ண­மாக இருக்கும். இன்று இலங்­கையில் போதைப்­பொருள் கடத்தல் குறித்த சகல வியூ­கங்­களும் வகுக்­கப்­படும் கேந்­தி­ர­மாக வெலிக்­கடை சிறைச்­சா­லையே காணப்­ப­டு­கின்­றது. ஆகவே வெலிக்­கடை சிறையில் உள்ள பாரிய போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­களை பூசா சிறைக்கு கொண்­டு­செல்ல இப்­போது நீதி அமைச்சும் நானும் இணைந்து நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம்.

எனினும் மரண தண்­டனை நிறை­வேற்றம் பற்றி பேசும் போது மனித உரிமை அமைப்­புகள் அதற்கு தடை­யாக அமை­கின்­றன. அவர்கள் தலை­யிட்டு குற்­ற­வா­ளி­களை தடுக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். நாட்­டினை சரி­யாக வழி­ந­டத்த சமூ­கத்தை ஒழுக்­க­மாக மாற்ற நாம் எடுக்கும் முயற்­சி­களின் போது அவற்றை குழப்­பு­வதே மனித உரி­மைகள் அமைப்­பு­களின் வேலை­யாக மாறி­யுள்­ளது.

வெலிக்­கடை சிறையில் உள்ள பாரிய போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­களை அங்­கு­ண­கொ­ல­பெ­லஸ்ஸ சிறைக்கு மாற்றி அங்கு விசேட அதி­ர­டிப்­படை பாது­காப்பை வழங்­கி­ய­போது எமது நாட்டின் நான் நிய­மித்த மனித உரி­மைகள் அமைப்பே அதனை எதிர்த்து கேள்வி கேட்கும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. எம்மை பாது­காக்க வேண்­டிய, எமக்­காக குரல் கொடுக்க வேண்­டிய மனித உரிமை அமைப்பே எம்மை எதிர்க்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.
எமது சமூகம் நாச­மா­வது, நாடு நாச­மா­வது இவர்­க­ளுக்கு விளங்­க­வில்லை. குற்­ற­வா­ளி­களை தண்­டிப்­பதே இவர்­க­ளுக்கு பிரச்­சி­னை­யாக உள்­ளது. மரண தண்­ட­னையை நிறை­வேற்ற எமது மனித உரிமை அமைப்­புகள் தடை­யாக உள்­ளன. எவ்­வாறு இருப்­பினும் நாட்­டினை நாச­மாக்கும் குற்றவாளிகளை காப்பாற்ற யார் முன்வந்தாலும், மரண தண்டனைக்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும் இந்த பாரிய போதைப்பொருள் குற்றவாளிகளை தண்டிப்பதில் நான் எடுத்துள்ள தீர்மானத்தை மாற்றிகொள்ளப் போவதில்லை. இரண்டு மாதங்களில் மரண தண்டனை கைதிகளை தண்டித்தே தீருவேன். இரண்டு மாதங்களில் மரண தண்டனை சட்டம் நடைமுறைக்கு வரும் என்றார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.