நாட்டை மீட்டெடுக்கவே தேசிய அரசு அவசியம்

தேசிய நோக்­கத்­திற்­காக அனைத்துக் கட்­சி­களும் எம்­முடன் இணை­யலாம் என ஐ.தே.க. அழைப்பு

0 535

நாட்­டினை மீட்­டெ­டுக்­கவும், இன ஐக்­கி­யத்தை காப்­பாற்றவும்  கூட்ட­ணி­யாக இணைந்து செயற்ப­டக்­கூ­டிய அனை­வ­ரையும் ஒன்றிணைக்கும் நோக்­கத்­தி­லேயே தேசிய அர­சாங்­கத்தை அமைத்து அதன் மூல­மாக அமைச்­ச­ர­வையை அதிக­ரிக்கும் யோச­னையை முன்வைத்தோம் என ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­வித்­துள்­ளது.

அர­சி­ய­ல­மைப்­பிற்கு முரணாக நாம் செயற்படவில்லை எனவும் தெரிவிக் கப்பட்டுள்­ளது.  ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­மான

லக்ஷ்மன் கிரி­யெல்ல நேற்­றைய தினம் வெளிட்ட விசேட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த அறிக்­கையில் தேசிய அர­சாங்­கத்தில் இணைய சகல கட்­சி­க­ளுக்கும் அழைப்பும் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை விரை­வு­ப­டுத்­தவும், ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­தவும், மக்கள் ஆணையை காக்­கவும், இன­வாத அர­சியல் செயற்­பா­டு­களை இல்­லா­தொ­ழித்து சகல சமூ­கங்­க­ளையும் ஒன்­றி­ணைக்கும் வகையில் ஆரோக்­கி­ய­மா­னதும் புத்­தி­சா­லித்­த­ன­மான ஆட்­சி­யொன்­றினை உரு­வாக்­க­வேண்டும் என்ற நோக்­கத்­தில்தான் தேசிய அர­சாங்­கத்தை அமைத்து அதன் மூல­மாக அமைச்­ச­ர­வையை அதி­க­ரிக்கும் கோரிக்­கையை நான் முன்­வைத்தேன். எமது இந்த உண்­மை­யான நோக்­கத்­தினை விளங்­கிக்­கொண்ட,  ஏற்­றுக்­கொள்ளும் சகல கட்­சி­களும் எம்­முடன் இணைய முடியும்.

தேசிய அர­சாங்­கத்தை அமைத்து அத­னூ­டாக அமைச்­சுப்­ப­த­வி­களை அதி­க­ரிக்க வேண்­டு­மென்ற யோச­னையை பாரா­ளு­மன்­றதில் முன்­வைத்­தமை எந்­த­வித சட்­ட­வி­ரோத செயற்­ப­ாடு­மல்ல. இவை அர­சி­ய­ல­மைப்பின் பிர­கா­ரமே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. எனினும், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தான் நினைத்த நேரத்தில் தனது அமைச்­ச­ர­வையை 60 ஆக அதி­க­ரித்­துக்­கொண்­டமை அர­சி­ய­ல­மைப்பின் பிர­கா­ர­மல்ல. அது அவ­ரது தனிப்­பட்ட அதி­கா­ரத்தை  கொண்டே முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அது ஒரு அர­சி­ய­ல­மைப்பு விரோத செயற்­பா­டாகும். அவ்­வா­றான சர்­வா­தி­கார செயற்­பாட்­டினை அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆம் திருத்­தத்தின் மூல­மாக நாம் இல்­லா­தொ­ழிக்க செய்தோம். அதற்­க­மைய அமைச்­ச­ரவை எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க வேண்டும் என்றால் அதற்கு பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்தை பெற வேண்டும்.

அவ்வாறு அரசியலமைப்புக்கு அமைவாக நாம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை கண்டு குழப்பமடையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அன்று மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் எவ்வாறு அமைச்சரவை அதிகரிக்கப்பட்டது என்பது குறித்து சிந்தித்துப்பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.