காலி முகத்திடலில் 71 ஆவது தேசிய சுதந்திர தின வைபவம்

0 481

இலங்­கையின் 71 ஆவது தேசிய சுதந்­தி­ர­தின நிகழ்வு இன்று  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் நடை­பெ­று­கின்­றது. 6 ஆயி­ரத்து 454 பாது­காப்பு படை­யி­னரின் அணி­வ­குப்பும்  850 கலை, கலாசார நட­னக்­க­லைஞர்களின் கலாசார நிகழ்வுகளும் இடம்­பெறவுள்ளதுடன், இன்­றைய சுதந்­திர தின நிகழ்­வு­களின் சிறப்பு அதி­தி­யாக  மாலை­தீவு ஜனா­தி­பதி இப்ராஹிம் மொஹமட் சாலிஹ் மற்றும் அவ­ரது பாரி­யாரும் கலந்­து­கொள்­கின்­றனர்.

இலங்­கையின் 71ஆவது தேசிய சுதந்­திர தின­மான இன்று நாடு பூரா­கவும் பல்­வேறு கொண்­டாட்ட நிகழ்­வுகள் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் கடந்த 2 ஆம் திக­தி­யி­லி­ருந்தே சர்­வ­மத ஆசி­பெறும் நிகழ்­வுகள் நாடு பூரா­கவும்  இடம்­பெற்று வருகின்றன. தேசி­ய­தின வைப­வத்தை முன்­னிட்டு கொழும்பு சுதந்­திர சதுக்­கத்தில் நேற்று முன்­தினம்  முழுநாள் பிரித் பாரா­யண வழி­பாட்டு நிகழ்­வுகள் இடம்­பெற்­றி­ருந்­தன. நேற்று முன்­தினம் இரவு 9 மணி தொடக்கம் நேற்று அதி­காலை வரையில் இவ்­வா­றான ஆசி நிகழ்­வுகள் இடம்­பெற்­றன. அதேபோல் இந்து, கத்­தோ­லிக்க, இஸ்­லா­மிய ஆல­யங்­க­ளிலும் வழி­பாட்டு நிகழ்­வுகள் இடம்­பெற்­றன.

இன்று காலை சுதந்­திர தின நிகழ்­வு­க­ளுக்கு முன்­ன­தாக  கொழும்பு சுதந்­திர சதுக்­கத்­திற்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள இலங்­கையின் முத­லா­வது பிர­தமர் டி.எஸ்.சேன­நா­யக்­கவின் உரு­வச்­சி­லைக்கு  மல­ரஞ்­சலி செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. இன்று காலை 7 மணிக்கு இடம்­பெ­ற­வுள்ள இந்த நிகழ்வில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொள்­ள­வுள்ளார். அதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு கொழும்பு காலி­முகத் திடலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் தலை­மையில் இலங்­கையின் 71 ஆவது தேசிய சுதந்­திர தின நிகழ்­வுகள் இடம்­பெ­ற­வுள்­ளன.

இந்த நிகழ்வில் அர­சாங்­கத்தின் சகல உறுப்­பி­னர்கள் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் உள்­ளிட்ட பாரா­ளு­மன்­றத்தின் சகல எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும், அரச அதி­கா­ரிகள்,  மாகாண ஆளு­நர்கள், முத­ல­மைச்­சர்கள், உள்­நாட்டு வெளி­நாட்டுத் தூது­வர்கள், உயர் ஸ்தானி­கர்கள்  மற்றும் வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரிகள் என பல­ருக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­துடன், முப்­படை தள­ப­திகள், பாது­காப்பு படை­களின் பிர­தானி, பொலிஸ் அதி­கா­ரிகள் உள்­ளிட்ட பாது­காப்பு படை­களின் இரண்டாம் நிலை அதி­கா­ரி­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

சிறப்பு அதிதி

இன்­றைய சுதந்­திர தினத்தின் விசேட அதி­தி­யாக  மாலை­தீவு ஜனா­தி­பதி இப்­ராஹிம் மொஹமட் சாலிஹ் மற்றும் அவ­ரது பாரி­யாரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். சுதந்­திர தின நிகழ்­வு­களில் கலந்­து­கொள்ளும் நோக்கில் மாலை­தீவு ஜனா­தி­பதி மற்றும் அவ­ரது பாரியார் நேற்று காலை கட்­டு­நா­யக்கா விமா­ன­நி­லை­யத்தை வந்­த­டைந்­தனர். அவரை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட அர­சாங்க பிர­தி­நி­திகள் வர­வேற்­றனர்.

இரு மொழி­களில் தேசி­ய­கீதம்

இம்­மு­றையும் வழ­மை­போன்று தேசிய கீதம் சிங்­களம் மற்றும் தமிழ் மொழி­களில் தமிழ், முஸ்லிம், சிங்­கள, பாட­சா­லை­களின் மாணவ, மாண­வி­களால் இசைக்­கப்­ப­ட­வுள்­ளது. அத்­துடன் ஜய­மங்­க­ள­கா­தாவும் இசைக்­கப்­ப­ட­வுள்­ளது.

தேசிய கொடியை பறக்­க­வி­ட­ வேண்டும் 

இம்­முறை தேசிய சுதந்­திர தினத்தை முன்­னிட்டு கொழும்பு காலி­மு­கத்­திடல் உட்­பட அதனை அண்­டிய பிர­தேசம் எங்கும் தேசி­யக்­கொ­டிகள் பறக்­க­வி­டப்­பட்­டுள்­ளன. அத்­துடன் சுதந்­தி­ர­தி­ன­மான இன்­றி­லி­ருந்து ஒரு வாரத்­திற்கு நாட்டில் சகல பிர­தே­சங்­க­ளிலும் வீடு­களில் மக்கள் தேசியக் கொடியை பறக்­க­விட்டு தேசிய உணர்வை வெளிப்­ப­டுத்த வேண்­டு­மென்று அர­சாங்கம் சக­ல­ருக்கும் அறி­வித்­துள்­ளது.

இரா­ணுவ அணி­வ­குப்பு நிகழ்­வுகள்

மேலும், வழை­மைபோல் இம்­முறை தேசிய சுதந்­திர தின நிகழ்­வு­களில் இலங்கை முப்­ப­டையின் அணி­வ­குப்­புகள், கண்­காட்சி  நிகழ்­வுகள் மற்றும் சாகச நிகழ்­வுகள் அரங்­கே­ற­வுள்­ளன. இதற்­காக கடந்த சில தினங்­க­ளா­கவே இலங்கை பாது­காப்பு படை­யினர் ஒத்­திகை நிகழ்­வு­களில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இம்­முறை பாது­காப்பு அணி­வ­குப்பு நிகழ்­வு­க­ளுக்­காக  3872 இரா­ணுவ வீரர்கள், 891 கடற்­படை வீரர்கள்,  907 விமானப் படை­வீ­ரர்கள்,  600 பொலிஸார், 523 பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர்,  596 சிவில் பாது­காப்பு படை­வீ­ரர்கள் மற்றும் 100 தேசிய இளைஞர் படை­யினர் இந்த தேசிய தின மரி­யாதை அணி­வ­குப்பில் கலந்து சிறப்­பிக்­க­வுள்­ளனர். அவற்­றுடன் யுத்­தத்தின் போது அங்­க­வீ­ன­முற்ற முப்­படை வீரர்­களும் வாக­னங்கள் மற்றும் சக்­கர நாற்­கா­லி­களில் அமர்ந்­த­வாறு அணி­வ­குத்துச் செல்­ல­வுள்­ளனர்.

அத்­துடன் இரா­ணுவ அணி­வ­குப்பின் போது இரா­ணுவ ஆயு­தங்கள், கன­ரக கவச வாக­னங்கள், யுத்த தள­பா­டங்கள், உப­க­ர­ணங்கள், ஆட்­லறி, பீரங்கி தாங்­கிய வாக­னங்கள், மோப்­ப­நாய்கள், பொறி­யியல் உப­க­ர­ணங்கள் உட்­பட யுத்­த­கா­லத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆயத தள­பா­டங்கள், உப­க­ர­ணங்­களும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­துடன் பொது­மக்கள் அவற்றை கண்டு ரசிக்­கக்­கூ­டிய வகையில் பொது அணி­வ­குப்பு நிகழ்­வு­களும் இடம்­பெறும்.

விமானப் படை­யி­னரின் கபீர், கே 8, எப் 7 ரக தாக்­குதல் விமா­னங்­களும் சி 130, வை 12, பிரி 6 ரக விமா­னங்கள் மற்றும் பெல் 412, பெல் 212 எம்ஐ 17 ரக ஹெலி­கொப்­டர்­க­ளுமே சாக­சங்­களை காண்­பித்­த­வாறு செல்­ல­வுள்­ளன. கடற்­ப­டையின் பிர­தான 16 ரோந்­துக்­கப்­ப­ல்களும் அண்­மையில் சர்­வ­தேச நாடு­க­ளி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட யுத்த கப்­பல்­களும் ஏனைய சிறு ரக பட­கு­களும் கடற்­ப­டையின் அணி­வ­குப்பில் இடம்­பெறும்.

ஜனா­தி­பதி நாட்டு மக்­க­ளுக்கு உரை

இன்­றைய தினம் தேசிய தின நிகழ்­வு­களில் நாட்டின் தேசியக் கொடியை சம்­பி­ர­தாய முறையில் ஜனா­தி­பதி  ஏற்­றி­ய­வுடன் அணி­வ­குப்பு நிகழ்­வு­களை அடுத்து  ஜனா­தி­பதி நாட்டு மக்­க­ளுக்கு விஷேட உரை நிகழ்த்­த­வுள்ளார்.

வீதிகள் மூடப்­படும்

சுதந்­திர தினத்தை முன்­னிட்டு காலி­மு­கத்­தி­டலை அண்­மித்த வீதி­களில் இன்று நண்­பகல் 12 மணி­வரை மூடப்­படும்.  காலி­மு­கத்­திடல் சுற்­று­வட்டம் முதல் பழைய பாரா­ளு­மன்ற சுற்­று­வட்டம் வரை­யிலும் சைத்­திய வீதி­யூ­டா­கவும் வாக­னங்கள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வாகனங்கள் கொள்ளுப்பிட்டி சந்தியால் காலிமுகத்திடல் நோக்கி பிரவேசிப்பதற்கும், சென். மைக்கல்ஸ் வீதியால் காலிமுகத்திடல் நோக்கிப் பயணிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளன. எவ்வாறு இருப்பினும் இன்று நண்பகல் 12 மணியுடன் கொழும்பில் வீதிப்போக்குவரத்து வழமைக்குத் திரும்பும்.

முஸ்லிம் சமய நிகழ்வுகள்

இதேவேளை, தேசிய சுதந்திரதின முஸ்லிம் சமய நிகழ்வுகள் இன்று காலை 6 மணிக்கு ஜாவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீமின் தலைமையில் இடம்பெறவுள்ளன. இதில், முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.