14335 வரை பதிவிலக்கமுள்ளோர் 28 ஆம் திகதிக்கு முன்னர் பயணத்தை உறுதிபடுத்துக

0 560

இவ்வருடம் ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்கு விண்ணப்பித்துள்ளவர்களில் 14335 வரையிலான பதிவிலக்கம் கொண்ட விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 28  ஆம் திகதிக்கு முன்பு மீளளிக்கப்படக்கூடிய பதிவுக்கட்டணம் 25 ஆயிரத்தைச் செலுத்தி தங்கள் பயணங்களை உறுதி செய்து கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர். எம். மலிக் அறிவித்துள்ளார்.

பதிவிலக்கம் 14335 க்குட்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு இது தொடர்பான விபரங்கள் கடித மூலமும் குறுந்தகவல் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளன. தகவல்கள் கிடைக்காதவர்கள் பதிவுக்கட்டணம் 25 ஆயிரம் ரூபாவை இலங்கை வங்கி கணக்கிலக்கம் 2327593 இல் வைப்புச் செய்து வங்கிப் பற்றுச்சீட்டின் மூலப்பிரதியினை நேரடியாக திணைக்களத்தில் சமர்ப்பித்து தங்கள் பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

இதே வேளை கடந்த வருடம் (2018) ஹஜ் கடமைக்காக பதிவுக்கட்டணத்தைச் செலுத்தி பயணம் மேற்கொள்ளாதவர்கள் பணம் செலுத்தி திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொண்டுள்ள பற்றுச்சீட்டை திணைக்களத்தில் நேரடியாகச் சமர்ப்பித்து தங்களது பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் பயணத்தை உறுதிசெய்து கொள்ளாதவர்களுக்கு இவ்வருடம் ஹஜ் வாய்ப்பு கிடைக்காது எனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.