மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொடர்க

0 563

மத்­தி­ய­வங்கி பிணை­முறி மோசடி உட்­பட பாரிய நிதி மோசடி தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரையில் தெரி­விக்­கப்­பட்டுள்ள மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக ஜனா­தி­பதி உட­ன­டி­யாக வழக்கு தொடுக்­க­வேண்டும். ஜனா­தி­ப­திக்கே அந்த அதி­காரம் இருக்­கின்­றது என ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­மான அஜித் பி. பெரேரா தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற விசா­ரணை ஆணைக்­கு­ழுக்கள் (திருத்தச்) சட்­ட­மூலம் விவா­தத்தில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,

ஊழல் மோச­டி­களை இல்­லா­ம­லாக்கி குற்­ற­வா­ளி­களை சட்­டத்­துக்கு முன் நிறுத்­து­வ­தாக தெரி­வித்தே நாங்கள் அதி­கா­ரத்­துக்கு வந்தோம். அதன் பிர­காரம்  எமது அர­சாங்­கத்­தினால் 120க்கும் அதி­க­மான ஊழல் மோசடி தொடர்­பான விசா­ர­ணைகள் முடிந்­துள்­ளன. ஆனால் வழக்கு விசா­ர­ணைகள் தாம­தித்து வரு­வது தொடர்பில் அனை­வ­ருக்கும் பிரச்­சினை இருக்­கின்­றது.

என்­றாலும் வழக்கு விசா­ர­ணை­களை துரி­த­மாக முடி­வுக்கு கொண்­டு­வரத் தேவை­யான வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்­டுள்ளோம். மூன்று நீதி­ப­தி­க­ளைக்­கொண்ட 3 விசேட நீதி­மன்­றங்­களை அமைக்க பாரா­ளு­மன்­றத்தில் அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதன் பிர­காரம் முத­லா­வது நீதி­மன்றம் தற்­போது செயற்­பட்டு வரு­கின்­றது. இரண்­டா­வது விசேட நீதி­மன்­றத்­துக்­கான நீதி­ப­திகள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். ஆனால் இன்னும் செயற்­ப­ட­வில்லை. அதே­போன்று மூன்­றாவது நீதி­மன்­றத்­துக்கும் அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அத்­துடன் இந்த நீதி­மன்­றங்­களில் பாரிய நிதி மோச­டிகள் தொடர்­பான வழக்கு விசா­ர­ணைகள் விசா­ரணை முடியும் வரைக்கும் தொடர்ந்து இடம்­பெறும். இதனால் யாருக்கும் அநீதி ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. இவ்­வா­றான விசா­ர­ணைகள் நாட்டில் இடம்­பெற்­றுள்­ளன. அதனால் ஏனைய இரண்டு விசேட நீதி­மன்­றங்­களை விரைவில் அமைக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

அத்­துடன் இந்த அர­சாங்­கத்தின் ஊழல் மோசடி தொடர்­பாக ஆராய ஆணைக்­குழு அமைக்­கப்­போ­வ­தாக ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். அதனை நாங்கள் வர­வேற்­கின்றோம். ஆனால் கடந்த காலங்­களில் 32 பாரிய குற்­றங்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் முடி­வ­டைந்­துள்­ளன. அதில் ஐந்திற்கே வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. அதனால் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி உட்­பட பாரிய நிதி மோசடி தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்கும் மோசடிக்காரர்களுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜனாதிபதிக்கே அந்த அதிகாரம் இருக்கின்றது. இந்த வழக்குகளை விசேட நீதிமன்றங்களில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.