ஆயிரக்கணக்கான தொன் தங்கத்தினை சுத்திகரிக்க வெனிசுவெலா இணக்கம்

0 603

மத்­திய துருக்­கியில் காணப்­படும் ஆயி­ரக்­க­ணக்­கான தொன் நிறை கொண்ட தங்­கத்­தினை சுத்­தி­க­ரிப்­ப­தற்கு ஏது­வான உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டு­வ­தற்­காக வெனி­சு­வெலா குழு­வொன்­றினை துருக்­கிக்கு அனுப்பி வைத்­துள்­ளது.

மேற்­படி தூதுக்­குழு உடன்­ப­டிக்கை தொடர்­பான பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டு­வ­தற்­காக சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்கள் அமைந்­துள்ள துருக்­கியின் கோரும் மாகா­ணத்­திற்கு அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ள­தாக கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று பல்­வேறு துருக்­கிய ஊட­கங்கள் தகவல் வெளி­யிட்­டி­ருந்­தன. ஒப்­பந்­தத்தின் விப­ரங்கள் தொடர்பில் வெனி­சு­வெலா ஜனா­தி­பதி நிக்­கோலாஸ் மடு­ரோ­வுக்கு அறி­விக்­கப்­படும் என துருக்­கியின் அக்சாம் செய்­தித்தாள் குறிப்­பிட்­டுள்­ளது.

புதன்­கி­ழ­மை­யன்று துருக்­கிக்கு விஜயம் செய்­ய­வுள்ள வெனி­சு­வெலா கைத்­தொழில் மற்றும் தேசிய உற்­பத்தி அமைச்சர் ஒப்­பந்­தத்தை பூர்த்தி செய்­ய­வுள்ளார்.

மடு­ரோவின் உத்­த­ர­வுக்­க­மை­வாக வெனி­சு­வெலா மத்­திய வங்கி 2018 ஆம் ஆண்டு துருக்­கியின் தங்­கத்­தினை சுத்­தி­க­ரிக்கும் நட­வ­டிக்­கை­யினை ஆரம்­பித்­தது.

ஐக்­கிய அமெ­ரிக்­கா­வினால் தனது நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு வெனி­சு­வெலா அச்­சு­றுத்­த­லாக இருப்­ப­தாகத் தெரி­வித்து பல­சுற்று தடை­களின் கீழ் அந்­நாட்­டினை கொண்டு வந்­ததன் மூலம் பொரு­ளா­தார யுத்தம் என்ற எல்லை வரை வெனி­சு­வெலா சென்­றி­ருந்­தது.

1999 ஆம் ஆண்டு சோச­லிஸ ஜனா­தி­ப­தி­யான ஹியூகோ சாவேஸ் பத­விக்கு வந்­த­தி­லி­ருந்து வெனி­சு­வெ­லா­வுக்கும் அமெ­ரிக்­கா­விற்கும் இடை­யே­யான உற­வுகள் பதற்றம் நிறைந்­த­தா­கவே காணப்­ப­டு­கின்­றன.

முன்னாள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா முதன் முத­லாக 2015 ஆம் ஆண்டு ஏழு வெனி­சு­வெலா அதி­கா­ரிகள் மீது வெனி­சு­வெலா மக்­களின் மனித உரி­மை­களை மீறு­வதில் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக தடை­வி­திப்­ப­தற்கு உத்­த­ர­விட்டார்.

அவ­ருக்­குப் பின்னர் பத­விக்கு வந்த டொனால் ட்ரம்ப் தென் அமெ­ரிக்க நாடு­களின் தங்க ஏற்­று­ம­திக்கு குறுக்­கீடு செய்­வ­தாகத் தெரி­வித்து மடு­ரோவின் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக புதிய பொரு­ளா­தாரத் தடை­களை விதிப்­ப­தற்கு 2018 நவம்பர் மாதம் நிறை­வேற்றுக் கட்­ட­ளையில் கையொப்­ப­மிட்டார்.

வெனி­சு­வெலா அர­சாங்­கத்­திற்­காக பில்­லி­யன்­க­ணக்­கான டொலர்­களைப் பரி­மாற்றம் செய்­வ­தற்­கான வலை­ய­மைப்பில் பணி­யாற்­றிய தனி­ந­பர்­க­ளுக்கு எதி­ராக இவ்­வாண்டு ஜன­வரி மாத ஆரம்­பத்தில் அமெ­ரிக்கா புதிய தடை­களை விதித்­தது.

கடந்த டிசம்பர் மாதம் வெனி­சு­வெ­லா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்த துருக்­கிய ஜனா­தி­பதி அர்­துகான் இந்தத் தடைகளை விமர்சித்திருந்தார். தடைகள் மூலமாக தனது நிருவாகத்தை கவிழ்ப்பதற்கு அமெரிக்க முனைவதாக மடுரோ குற்றம்சாட்டுகின்றார்.

இவ்வாறான தடைகள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறுபவை எனத் தெரிவித்து அவற்றிற்கு எதிராக வெனிசுவெலா அவ்வமைப்பில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.