சவூதி ஹஜ் அமைச்சரை இன்று சந்திக்கிறார் ஹலீம்

0 535

சவூதி அரே­பி­யாவின் ஹஜ் விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­ருக்கும் இலங்­கையின் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சருக்கும் இடையில் இலங்­கைக்­கான ஹஜ் கோட்டா மற்றும் ஏற்­பா­டுகள் தொடர்பில் இன்று சவூதி அரே­பியா ஜித்­தாவில் கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெறவுள்­ளது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் அமைச்சர் ஹலீமின் தலை­மையில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப்  பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர். எம் மலிக், அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத், அமைச்­சர் ஹலீமின் பிரத்­தி­யேக செய­லா­ளரும் ஹஜ் குழு உறுப்­பி­ன­ரு­மான எம். எச். எம். பாஹிம் மற்றும் ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் சார்பில் பிர­தி­நி­தி­யொ­ரு­வரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். கலந்­து­ரை­யா­டலின் போது இலங்­கைக்­கான ஹஜ் கோட்­டாவை 1000 த்தால் அதி­க­ரித்­துக்­கொள்­வது பற்றி வலி­யு­றுத்­தப்படும்.

ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்­பிப்­போரில் அநேகர் ஹஜ் கோட்டா மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பதால் பாதிக்­கப்­ப­டு­கி­றார்கள். அதனால் கோட்­டாவை அதி­க­ரிக்கும் படி சவூதி ஹஜ் அமைச்­சரைக் கோரவுள்ளதாக அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.