ஹஜ் முறைப்பாட்டு விசாரணை அறிக்கை டிசம்பர் 20 இல் 

0 626

இவ்­வ­ருடம் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­றிய ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சிலர் ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக சமர்ப்­பித்த முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்த ஹஜ் முறைப்­பாட்டு விசா­ர­ணைக்கு குழு தனது அறிக்­கையை எதிர்­வரும் 20 ஆம் திகதி அரச ஹஜ் குழு­விடம் கைய­ளிக்­க­வுள்­ளது.

11 ஹஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ராக 13 ஹஜ் முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற­றி­ருந்­த­தா­கவும் குறிப்­பிட்ட ஹஜ் முக­வர்கள் அழைக்­கப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் ஹஜ் முறைப்­பாட்டு விசா­ரணைக் குழுவின் செய­லாளர் ரபீக் இஸ்­மாயில் தெரி­வித்தார்.

ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக கிடைக்கப்பெற்ற முறைப்­பா­டுகள் வகைப்­ப­டுத்­தப்­பட்டு விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் ஊழல் மற்றும் குற்­றங்கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட முக­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய தண்­ட­னை­களை ஹஜ் முறைப்­பாட்டு விசா­ர­ணைக்­குழு பதிந்­துரை செய்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

கடந்த வரு­டத்தில் சில ஹஜ் முக­வர்­களின் அனு­ம­திப்­பத்­திரம் ரத்துச் செய்­யப்­பட்டு தண்­டனை வழங்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். ஹஜ் முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்­வ­தற்­கான விசாரணைக்குழு முஸ்லிம் சமய விவகார முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.