ஒபெக் அமைப்பிலிருந்து கட்டார் விலகல்

0 639

பெற்றோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் அமைப்பிலிருந்து கட்டார் விலகிக் கொள்ளவுள்ளதாக கட்டாரின் சக்திவள அமைச்சர் சாத் ஷெரிதா அல்-காபி திங்கட்கிழமையன்று அறிவித்தார்.

உலக எண்ணெய் உற்பத்தியில் நாற்பது வீதத்தினை கட்டார் பெற்றோலியம் என்ற நாட்டின் எண்ணெய் உற்பத்தி நிறுவனம் உறுதிப்படுத்தியதையடுத்தே எண்ணெய் உற்பத்தி செய்யும் 15 நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தோஹாவில் ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அல்-காபி கட்டாரின் விலகிக் கொள்ளும் தீர்மானம் எதிர்வரும் ஆண்டுகளில் அதன் வருடமொன்றிற்கான இயற்கை எரிவாயு உற்பத்தியினை 77 மில்லியன் தொன்னிலிருந்து 110 மில்லியன் தொன்னாக அதிகரிக்கும் திட்ட முயற்சிகளை பிரதிபலிப்பாகக் காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

பெற்றோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் அமைப்பிலிருந்து விலகிக் கொள்ளும் முதலாவது வளைகுடா நாடு கட்டார் ஆகும்.

ஒபெக் அமைப்பின் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 06 ஆந் திகதி நடைபெறவுள்ள நிலையில் கட்டாரின் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் மீதான தடைக்கும் ஒபெக் அமைப்பிலிருந்து கட்டார் விலகிக் கொள்வதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை இந்த விடயம் பல மாதங்களுக்கு முன்னர் சிந்திக்கப்பட்டது எனவும் கட்டார் தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஜூன் மாதம் சவூதி ஆரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் இணைந்து  ஐக்கிய அரபு அமீரகம் கட்டார் மீது தரை, வான் மற்றும் கடல் வழித் தடைகளையும் மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்தது. கடந்த பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான இராஜதந்திர பிரச்சினையாக இது பார்க்கப்பட்டது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.