பேரினவாத கட்சிகளின் முகவர்கள்

0 875
  • எஸ்.றிபான்

இலங்­கையில் மிக மோச­மான அர­சியல் நெருக்­கடி ஏற்­பட்டு ஒரு மாதம் கடந்­துள்­ளது. இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நட­வ­டிக்­கைகள் இருக்­கின்ற நெருக்­க­டிக்கு இன்னும் வலுச் சேர்க்கும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. இத­னி­டையே மஹிந்­த­ரா­ஜ­பக் ஷ பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்­றினை நடத்த வேண்­டு­மென்ற திட்­டத்­திiனைக் கொண்­டுள்ளார். இத்­திட்­டத்­திற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆத­ர­வாக இருந்து கொண்­டி­ருக்­கின்றார். இதே வேளை, ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினர் முடிந்தால் ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­து­மாறு சவால்­வி­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் சவால்­களை அவ­தா­னிக்­கின்ற போது மைத்­திரி – மஹிந்த அணி­யி­ன­ருக்கு ஜனா­தி­பதித் தேர்­தலை பொதுத் தேர்­த­லுக்கு முன்னர் எதிர் கொள்­வதில் தயக்­கமும், ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­ன­ருக்கு பொதுத் தேர்­தலை எதிர் கொள்­வதில் தயக்­கமும் இருக்­கின்­ற­மையை அறிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. நேர்­மை­யாக பார்க்­கின்ற போது முதலில் ஜனா­தி­பதித் தேர்­தலும், பின்னர் பொதுத் தேர்­தலும் நடை­பெற வேண்டும். இவ்­வாறு இவ்­விரு அர­சியல் கட்­சி­களும் தெரி­வித்துக் கொண்­டி­ருக்கும் நிலையில் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், தலை­வர்­களும் தங்­களை பொதுத் தேர்­த­லுக்கு தயார்­ப­டுத்திக் கொண்­டி­ருப்­ப­த­னையும் அவ­தா­னிக்க முடி­கின்­றன.

இழக்­கப்­பட்ட அடை­யாளம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­த­ம­ராக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பதவி இறக்கம் செய்­து­விட்டு, பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவை பிர­த­ம­ராக நிய­மனம் செய்தார். இதனைத் தொடர்ந்து ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் உள்ள அர­சியல் கட்­சிகள் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மையில் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை மேற் கொண்டு வரு­கின்­றன. அந்த வகையில் கண்­டியில் (24.11.2018) மாபெரும் கூட்­ட­மொன்­றினை ஐக்­கிய தேசியக் கட்சி ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. ‘ஜன­நா­ய­கத்­திற்­கான நீதியின் மக்கள் குரல்’ எனும் தலைப்பில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீமும் கலந்து கொண்டு மிகவும் ஆக்­ரோ­ஷ­மாக உரை­யாற்­றினார்.

இக்­கூட்­டத்தில் கலந்து கொண்ட ரவூப் ஹக்கீம் ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பி­னரைப் போன்­ற­தொரு தோற்­றப்­பாட்டைக் வெளிக்­காட்டும் வகை­யி­லேயே உடை அணிந்­தி­ருந்தார். அவர் பச்சை நிற ரிசேர்ட் அணிந்­தி­ருந்தார். ரவூப் ஹக்­கீமின் இந்த உடைத்­தோற்றம் சமூக வலைத்­த­ளங்­களில் விமர்­சிக்­கப்­பட்டு வரு­கின்­றது. ரவூப் ஹக்கீம் பொது­வாக பொதுக் கூட்­டங்­களின் போது முஸ்லிம் காங்­கி­ரஸின் அடை­யா­ளத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் பச்­சையும், மஞ்­சளும் கொண்ட ஆடை­க­ளையும், தொப்­பி­யையும் அணி­வது வழக்­க­மாகும். இந்த வழக்­கத்தை தற்­போது ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மையில் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் போராட்­டங்­களில் அவர் அன்று கடைப்­பி­டிக்­க­வில்லை.

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற கூட்­டத்தில் உரை­யாற்­று­வதில் பிரச்­சி­னை­யில்லை. இன்று நாட்டில் ஏற்­பட்­டுள்ள ஜன­நா­ய­கத்­திற்­கான போராட்­டத்தில் சிறு­பான்மைக் கட்­சி­களின் தலை­வர்கள் எதிரும், புதி­ரு­மாக தங்­களை ஈடு­ப­டுத்திக் கொண்­டி­ருப்­ப­தனை காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. ரவூப் ஹக்கீம் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றார். இவ்­வாறு செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் அவர் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் என்­ப­தனால் கண்­டியில் மாத்­தி­ர­மன்றி ஏனைய இடங்­க­ளிலும் தமது கட்­சியின் தனித்­துவ அடை­யா­ளத்தை இழக்­கா­த­வ­ராக பங்கு கொள்ள வேண்டும். இக்­கூட்­டத்தில் அவர் முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தி­நி­தி­யா­கவே கலந்து கொண்டார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இதே வேளை, ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ராக இருந்­தாலும், கண்டி மாவட்­டத்தில் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிட்டால் மட்­டுமே இல­கு­வாக வெற்றி கொள்ள முடியும். இதன் கார­ண­மாக அவர் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் கூட்டு வைத்துக் கொள்­ளவே விரும்­புவார். இதனால், ஐக்­கிய தேசிய கட்­சியின் மேடை­களில் தாமும் ஐக்­கிய தேசிய கட்­சிக்­காரர் போன்று தோற்­ற­ம­ளித்து தமக்­கு­ரிய செல்­வாக்கை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்கு இன்­றைய அர­சியல் நெருக்­க­டியை அவர் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்றார்.

முஸ்லிம் காங்­கி­ரஸும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷ ­வுக்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்தால் மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷ­வுக்கு பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை ஆத­ர­வில்லை என்ற பேச்­சுக்கே இட­மி­ருந்­தி­ருக்­காது. ஆனால், ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்­ன­தாக பொதுத் தேர்தல் நடக்­கு­மாயின் மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷ ­வுடன் இணைந்தே போட்­டி­யிட வேண்­டி­யேற்­படும். அவ்­வாறு போட்­டி­யிடும் போது முஸ்­லிம்­களின் பெரும் தொகை வாக்­கு­களை இழக்க வேண்­டி­யேற்­படும். இதனால், சில வேளை தோல்­வியைக் கூட சந்­திக்க நேரிடும். ஆதலால், பொதுத் தேர்தல் நடை­பெறும் வரை ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வதே பொருத்­த­மான நிலைப்­பா­டாகும். தேர்தல் முடிந்­ததன் பின்னர் ஆட்சி அமைப்­ப­தற்­கு­ரிய சாத்­தி­யப்­பா­டுகள் உள்­ள­வ­ருக்கு ஆத­ரவு வழங்­கு­வதே ரவூப் ஹக்­கீமின் திட்­ட­மாகும்.

தமது இத்­திட்டம் வெற்றி கொள்­ளப்­பட வேண்­டு­மாயின் மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் றிசாட் பதி­யூ­தீனும், அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ரவு வழங்க வேண்டும். மக்கள் காங்­கிரஸ் மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷ­வுக்கு ஆத­ரவு வழங்­கினால் அந்தக் கவர்ச்­சியில் மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷ­வுக்கு இன்னும் ஆத­ரவு கிடைத்­தி­ருக்கும்.

இதே வேளை, றிசாட் பதி­யுதீன் ஐக்­கிய தேசிய கட்­சி­யினால் கொழும்­பிலும், கண்­டி­யிலும் ஏற்­பாடு செய்­யப்­பட்ட பொதுக் கூட்­டங்­களில் பங்கு கொள்­ள­வில்லை. ஆயினும், இவர் கூட பொதுத் தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்கு வன்னி மாவட்­டத்தில் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்தே போட்­டி­யிட வேண்டும். அப்­போ­துதான் தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை பெற்றுக் கொள்ள முடியும். இதனால், றிசாட் பதி­யு­தீனும் பொதுத் தேர்­தலின் பின்­னர்தான் யாருடன் இணைந்து ஆட்சி அமைப்­பது என்று முடிவு செய்வார்.

அணிக்­காக தடு­மாறும் நிலை

ரவூப் ஹக்கீம், றிசாட் பதி­யூதீன் ஆகி­யோர்­களின் நிலைப்­பாட்­டிற்கு மாற்­ற­மான முடிவில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ், ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ் ஆகி­யோர்கள் உள்­ளார்கள். ஹிஸ்­புல்லாஹ் எக்­கா­ரணம் கொண்டு முஸ்லிம் கட்­சி­களில் இணைந்து போட்­டி­யி­ட­மாட்டார். பேரி­ன­வாத கட்­சி­க­ளுடன் இணைந்து போட்­டி­யி­டு­வதே அவ­ரது திட்டமாகும். அவர் ஐக்­கிய தேசிய கட்­சியில் இப்­போ­தைக்கு இணை­ய­மாட்டார்.

2015ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் ஹிஸ்­புல்லாஹ் மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷ­வுக்கு ஆத­ர­வாகச் செயற்­பட்டார். பொதுத் தேர்­தலில் கூட மஹிந்­த­ரா­ஜ­பக் ஷ அணி­யு­ட­னேயே செயற்­பட்டார். 2015ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் சிறு­தொகை வாக்­கு­க­ளினால் ஹிஸ்­புல்லாஹ் தோல்வி அடைந்தார். பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தேசி­யப்­பட்­டியல் மூல­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மித்து அமைச்சர் பத­வி­யையும் வழங்­கினார்.

அதா­வுல்­லாஹ்வை எடுத்துக் கொண்டால் அவர் கூட மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷ­வுடன் இணைந்து செயற்­பட்டார். இதனால், பொதுத் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்தார். தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த அதா­வுல்லாஹ் சுமார் ஒரு வருடம் அர­சியல் பேசா­ம­லேயே இருந்தார். இதன் பின்னர் அவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பினர் போன்று செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றார்.

தற்­போது மஹிந்­த­ரா­ஜ­பக் ஷ சுதந்­திரக் கட்­சியை விட்­டு­விட்டு ஐக்­கிய பொது முன்­ன­ணி­யுடன் (மொட்டு) இணைந்­துள்ளார். இதனால், பொதுத் தேர்­த­லொன்­றுக்கு அறி­விக்­கப்­பட்டால் எந்த அணி­யுடன் இணைந்து கொள்­வது என்ற தெரிவுப் பிரச்­சி­னையில் அதா­வுல்­லாஹ்வும், ஹிஸ்­புல்­லாஹ்வும் உள்­ளார்கள். சில வேளை, (வாய்ப்­புக்கள் இல்­லா­ம­லில்லை) மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கு­மி­டையே முரண்­பா­டுகள் ஏற்­பட்­டு­விட்டால், அதா­வுல்லாஹ் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து தேர்­தலை எதிர் கொள்­வதா அல்­லது மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷ­வுடன் இணை­வதா என்ற நிலைக்குள் தள்­ளப்­பட்டு விடுவார்.

புதிய நிலைப்­பாடு

இதே வேளை, முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் எம்.ரிஹ­ஸன்­அலி, பசீர் சேகு­தாவூத் மற்றும் இவர்­க­ளுடன் உள்­ள­வர்கள் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நிலைப்­பாட்­டி­லேயே உள்­ளார்கள். 2015ஆம் ஆண்டு முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவை ஆத­ரிப்­ப­தற்கு முடிவு செய்த போது ஹஸன்­அலி அதனை மிகவும் தீவி­ர­மாக எதிர்த்தார். இப்­போது ரணி­லுக்கு எதி­ரான நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருப்­ப­தற்கு பிர­தான காரணம் ரவூப் ஹக்கீம் ரணி­லுடன் இருப்­ப­தாகும். அதா­வது இவர்கள் ரவூப் ஹக்­கீமின் முகா­முக்கு எதி­ரான முகாமை தெரிவு செய்யும் நிலைப்­பாட்­டினைக் கொண்­டுள்­ளார்கள்.

முஸ்­லிம்­க­ளி­டையே பல கட்­சி­களும், தலை­வர்­களும் இருந்­தாலும் அவர்கள் பேரி­ன­வாதக் கட்­சி­களின் உறுப்­பி­னர்கள் போலவே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பேரி­ன­வாதக் கட்­சி­களின் சுண்டு விர­லுக்கே அசைந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இத­னால்தான் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளினால் சமூ­கத்தின் தேவை­களை அடைந்து கொள்ள முடி­யா­துள்­ளது. அமைச்சர் பத­வி­க­ளுக்கும், வேறு பத­வி­க­ளுக்­குமே முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

போராட்டம்

தற்­போது நாட்டில் ஏற்­பட்­டுள்ள அர­சியல் நெருக்­க­டிக்கு எதி­ராக ஜன­நா­ய­கத்தை பாது­காத்துக் கொள்ள வேண்­டு­மென்ற போராட்­டத்தை முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், தலை­வர்­களும் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து மேற்­கொண்­டுள்­ளார்கள். இன்­னு­மொரு பிரி­வினர் இதற்கு மாற்­ற­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த இரு தரப்பு முஸ்லிம் தலை­வர்­களும் ஊட­க­வி­ய­லாளர் மாநா­டு­களை நடத்தி கருத்­துக்­களை வெளி­யிட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால், முஸ்லிம் சமூ­கத்­திற்­காக எந்­த­வொரு போராட்­டத்­தையும் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் மேற்­கொள்­ள­வில்லை.

மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது பேரு­வளை, தர்­கா­நகர் பௌத்த இன­வா­தி­க­ளினால் அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் தாக்­கப்­பட்ட போதும், முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்ட போதும், முஸ்­லிம்கள் வர்த்­தக நிலை­யங்கள் எரிக்­கப்­பட்ட போதும் ஆத்­தி­ரப்­ப­டாத முஸ்லிம் அரசியல்வாதிகள், போராட்டங்களை நடாத்தாதவர்கள், வில்பத்து விவகாரத்தில் மூக்கை நுைழக்காதவர்கள் போராட்டங்களையும், வழக்குகளையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலமாக பேரினவாதக் கட்சிகளின் முகவர்களாகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

மஹிந்தராஜபக் ஷவின் ஆட்சி முஸ்லிம்களுக்கு எதிரானதென்று மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைக் கொண்டு வருவதில் முஸ்லிம்கள் பெரும் பங்களிப்புச் செய்தார்கள். ஆனால், இவர்களின் ஆட்சியிலும் கிந்தோட்ட, அம்பாறை, கண்டி, திகன உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். தமிழர்களின் ஒரு தொகை காணி மீள ஒப்படைக்கப்பட்ட போதிலும், முஸ்லிம்களின் காணிகள் மீளவும் ஒப்படைக்கப்படவில்லை.

இன்று ஜனநாயகத்தை மீட்பதற்காக போராடிக் கொண்டிருப்பவர்கள், மேற்படி இடங்களில் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் போராட்டங்களை நடத்தவில்லை. மாறாக ஆட்சியாளர்களை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.