பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடமாக மாறும் வீடுகள்

0 773

வீட்டின் நிர்­வாகி, குடும்­பத்தின் விளக்கு என்­றெல்லாம் பெண்­களை வீட்­டோடு தொடர்­பு­ப­டுத்தி பெரு­மை­யாகப் பேசி­வரும் நிலையில், பெண்கள் வாழ்­வ­தற்கு மிகவும் ஆபத்­தான இடம் வீடு தான் என்று ஐக்­கிய நாடுகள் சபை தனது ஆய்வில் தெரி­வித்­துள்­ளமை அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஏனெனில் கடந்த ஆண்டு உலக அளவில் பெண்கள் தங்­களின் கண­வ­னாலும், தங்­களின் பெற்றோர், சகோ­த­ரர்­களின் ஆணவக் கொலை­யாலும், வர­தட்­சணைப் பிரச்­சி­னையால் உற­வி­னர்­க­ளாலும்  அதி­க­மாகக் கொல்­லப்­பட்­டுள்­ளதால், பெண்கள் வாழ்­வ­தற்கு வீடு ஆபத்­தான இடம் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வரு­டாந்தம் நவம்பர் 25 ஆம் திகதி பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றையை ஒழிக்கும் நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. இதனை முன்­னிட்டு பெண்­க­ளுக்கு எதி­ராக கடந்த ஆண்டு நடந்த வன்­மு­றைகள் குறித்த அறிக்­கையை ஐ.நா.வின் போதை மருந்து மற்றும் குற்­றத்­த­டுப்பு அமைப்பு வெளி­யிட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு மட்டும் உலக அளவில் 50 ஆயிரம் பெண்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். கொல்­லப்­பட்ட இந்தப் பெண்கள் அனை­வரும் அவர்­களின் கண­வரால், அல்­லது முன்னாள் கண­வரால் அல்­லது குடும்ப உறுப்­பி­னர்கள், பெற்­றோரால் கொல்­லப்­பட்­டுள்­ளனர் என்ற தகவல் அதிர்ச்­சிக்­கு­ரி­ய­தாகும். அதா­வது கடந்த ஆண்டில் நாள் ஒன்­றுக்கு 137 பெண்கள், ஒரு மணி­நே­ரத்­துக்கு 6 பெண்கள் தங்­களின் குடும்ப உறுப்­பி­னரால், பெற்­றோரால், கண­வரால் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்­டுக்கு இடையே பெண்கள் தங்­களின் கண­வர்கள், குடும்ப உறுப்­பி­னர்­களால் கொல்­லப்­பட்ட விகி­தா­சா­ரத்தின் அளவு அதி­க­ரித்­துள்­ளது. பெரும்­பாலும் தங்­களின் கண­வ­ராலும், வர­தட்­சணைக் கொடு­மை­யாலும், சாதி, மதம் மாறிச் செய்­யப்­படும் திரு­ம­ணத்தால் நடக்கும் ஆணவக் கொலை­யாலும் கொல்­லப்­ப­டு­கி­றார்கள் என அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து ஐ.நா.வின் போதை மருந்து மற்றும் குற்­றத்­த­டுப்பு அமைப்பின் இயக்­குநர் யூரி பெடோடோவ் கூறு­கையில், “ ஆண்கள் கொலை செய்­யப்­பட்­டாலும், பாலின சமத்­து­வத்­தாலும், வேறு­பாட்­டாலும் பெண்­களே அதி­க­மாகக் கொலை செய்­யப்­ப­டு­கி­றார்கள்” எனத் தெரி­வித்தார்.

பெண்கள் உரி­மைக்­கான சர்­வ­தேச அமைப்­பான ‘உமன்கைன்ட் வேர்ல்ட்வைட்’ அமைப்பின் இயக்­குநர் சாரா மாஸ்டர்ஸ் கூறு­கையில் “ பாலின சமத்­து­வத்தின் விளை­வு­கள்தான் பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­யாக மாறு­கி­றது. இந்த அறிக்­கையைப் பார்க்­கும்­போது அதிர்ச்­சி­யாக இருக்­கி­றது” எனத் தெரி­வித்­துள்ளார்.

இலங்­கை­யிலும் பெண்கள் மீதான வன்­மு­றைகள் அதி­க­ரித்துச் செல்­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். இலங்­கை­யி­லுள்ள ஐ.நா. சனத்­தொகை நிதியம் கடந்த வருடம் மார்ச் மாதம் வெளி­யிட்ட அறிக்­கைக்­கி­ணங்க, 90 வீத­மான பெண்கள் பொதுப் போக்­கு­வ­ரத்து பஸ்­களில் பாலியல் சேஷ்­டை­க­ளுக்கு உள்­ளா­வ­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் இவர்­களில் வெறும் 4 வீதத்­தினர் மாத்­தி­ரமே பொலிஸில் முறை­யி­டு­வ­தா­கவும் அதில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. சில தினங்­க­ளுக்கு முன்னர் மொன­ரா­க­லையில் யுவதி ஒரு­வரை அவ­ரது காதலன் பட்­டப்­ப­கலில் கழுத்து நெரித்துக் கொலை செய்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­மையும் இந்த இடத்தில் நோக்­கத்­தக்­க­தாகும்.

இவ்­வாறு உலக நாடு­களில் பெண்­க­ளுக்கு எதி­ராக அதி­க­ரிக்கும் வன்­மு­றைகள் நிறுத்­தப்­பட வேண்­டு­மாயின் அது தொடர்பில் போது­மான விழிப்­பு­ணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவற்றைத் தடுக்க இறுக்கமான சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பாக வாழ அவர்களது வீடுகளே ஆபத்தான இடமாக மாறிவிட்டதென்பது கவலை நிறைந்த தகவலாகும்.

இந்த அவல நிலையை மாற்றியமைக்க பாடுபட வேண்டியது அனைவரதும் பொறுப்பு என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.