சர்­வா­தி­கா­ரத்­தினால் ஜன­நா­ய­கத்தை மிதித்த ஹிட்லர், கடா­பியின் மர­ணங்கள் எவ்­வாறு அமைந்­தன என்­பது உல­குக்கே தெரியும்

மைத்­திரி - மஹிந்த இதனை நினை­விற்கொள்ள வேண்டும் என்­கிறார் பிமல்

0 784

சர்­வா­தி­கா­ரத்தை கையி­லெ­டுத்து ஜன­நா­ய­கத்தை மிதித்த ஹிட்லர், கடாபி ஆகி­யோரின் மர­ணங்கள் எவ்­வாறு அமைந்­தன என்­பது இந்த உல­குக்கே தெரியும். இன்று சர்­வா­தி­கா­ரத்தை கையில் எடுத்­துள்ள மைத்­திரி – மஹிந்த இரு­வரும் இதனை நினைவில் வைத்­துக்­கொள்ள வேண்டும் என ஜே.வி.பி. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

மஹிந்த – -மைத்­திரி கூட்­டணி இவ்­வாறே ஜன­நா­யக விரோ­த­மாக ஆட்­சியை கொண்­டு­சென்றால் நாட்டில் மக்கள் புரட்­சிக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­வரும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பினர் ஆசு மார­சிங்க கொண்­டு­வந்த சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணை­மீது உரை­யாற்றும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

வழ­மை­யாக ஆட்­சி­யி­லுள்ள அர­சாங்கம் மக்கள் ஆணையை முழு­மை­யாக மதிக்­கா­ம­லேயே செயற்­படும். 60 வீத­மேனும் சர்­வா­தி­கார போக்­கில்தான் அர­சாங்கம் செயற்­படும். ஆனால் இன்று ஜனா­தி­ப­தியும் அவ­ரது அர­சாங்­கமும் நூறு வீதம் ஜன­நா­ய­கத்தை மீறி­விட்­டனர். தாம் ஆட்­சியில் நிலைக்க வேண்­டு­மென்ற கார­ணத்­திற்­காக அர­சி­ய­ல­மைப்­பி­னையும், மக்கள் ஆணை­யையும் மீறி செயற்­பட்­டு­விட்­டனர். இன்று  மக்கள் ஆணையை முழு­மை­யாக மீறி சர்­வா­தி­கார ஆட்­சியை தக்­க­வைத்து வரு­கின்­றனர். ஜனா­தி­பதி அமைத்த இடைக்­கால அர­சாங்­கத்தை எந்­த­வொரு சர்­வ­தேச நாடும் ஏற்றுக் கொள்­ள­வில்லை.  குறைந்­த­பட்சம் மாலை­தீ­வுகள், சீசெல்ஸ் நாடு­கள்­கூட ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இதுவே ஜனா­தி­ப­தியின் ஆட்­சியின் பல­வீ­னத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இன்று நாட்டின் பொரு­ளா­தாரம் முற்­றாக வீழ்ச்சி யடைந்துள்­ளது. இலங்­கையின் உள்­நாட்டு உற்­பத்­திகள் முழு­மை­யாக வீழ்ச்சி கண்­டுள்­ளது. வெறும் அதி­கார மோகத்தில் ஜன­நா­ய­கத்தை வீழ்த்­தி­விட்­டனர். ஆகவே மைத்­திரி -– மஹிந்த ஆட்­சியை விரட்­டி­ய­டிக்க வேண்டும் என்ற ஒரே நோக்­கமே இன்று அனை­வ­ருக்கும் உள்­ளது. சிறி­சே­னவின் நிலைமை இன்று தற்­கொலை குண்­டு­தாரி போன்­றா­கி­விட்­டது. தனது அதி­கா­ரத்தை மட்­டுமே கருத்­திற்­கொண்டு நாட்டை அழிக்­கவே முயற்­சித்து வரு­கின்றார். ஒரு பேய் போன்று செயற்­பட்டு வரு­கின்றார். தனது சேட்­டைகள் அனைத்­தையும் தனது  வீட்­டுக்குள்  வைத்­து­கொள்ள வேண்­டு­மென அவ­ருக்கு எச்­ச­ரிக்­கின்றோம்.

இன்று வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணி­க­ளுக்கு இலங்கை குறித்து பாரிய சந்­தேகம் எழுந்­துள்­ளது. குறிப்­பாக ஐரோப்­பிய நாடு­களின் சுற்­றுலா பய­ணி­க­ளுக்கு இது வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. அதேபோல் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கே எமது ஏற்­று­மதி அதி­க­மாகும். அதிலும் பாதிப்­பேற்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி கடந்த 26 ஆம் திகதி இவ்­வாறு ஒரு தீர்­மானம் எடுப்­பா­ரென எவரும் நினைத்­துப்­பார்க்­க­வில்லை. அதி­கா­ர­மில்­லாத நிலையில் ஜனா­தி­பதி ஒருவர் இவ்­வாறு செயற்­ப­டுவார் என்றால் நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாக இருந்தால் இன்று நிலைமை எவ்­வாறு இருக்கும். ஜனா­தி­ப­தி­யுடன் கூட்­டணி அமைத்­துள்ள அனை­வ­ருக்கும் இன்று நீதி­மன்ற வழக்­குகள் உள்­ளன. மஹிந்த ராஜபக் ஷவிற்கு தைரி­ய­மி­ருந்தால் தனக்கு சபையில் நம்­பிக்கை உள்­ளது என்ற பிரே­ர­ணையை கொண்­டு­வர வேண்டும். அதில் அவர் தன்னை நிரூ­பிக்க வேண்டும். இன்று இவர்கள் கறுப்பு ஊடக கலா­சா­ரத்தை வைத்­து­கொண்டு மக்­களை ஏமாற்றி வரு­கின்­றனர். எனினும் இந்த ஆட்­சியை நீதி­மன்றம், பாரா­ளு­மன்றம், சர்­வ­தேச நாடுகள் மட்­டு­மல்ல, நாட்டின் பெரும்­பான்மை மக்­களும் ஏற்­று­க்கொள்ளவில்லை. வெறு­மனே கறுப்பு ஊட­கங்­கள்தான் இவர்­களை பிர­சித்­தப்­ப­டுத்தி வரு­கின்­றன.

சர்­வா­தி­கார ஆட்­சி­யா­ளர்­களின் இறு­திக்­கட்ட முடிவு எவ்­வாறு அமைந்­தது என்­பது உலக நாடுகள் அனைத்­திற்கும்  நன்­றாக தெரியும். அடொல்ப் ஹிட்லர் இறு­தி­யாக பதுங்­கு­கு­ழியில் இறந்­து­போனார், முஅம்மர் கடாபி ஒரு மத­குக்கு அடியில் அடித்­துக்­கொல்­லப்­பட்டார். இவ்­வாறு மிகவும் மோச­மான வகையில் அவர்கள் இறந்­தனர். ஆகவே சர்­வா­தி­கா­ரத்தை கையி­லெ­டுக்கும் நபர்கள் இறு­தியில் மோச­மான விளை­வு­களை எதிர்­கொள்ள வேண்டி வரும். ஆகவே மைத்திரிபால சிறிசேன – மஹிந்த ராஜபக் ஷ இருவரும் இதனை மனதில் வைத்துகொள்ள வேண்டும். ஜனநாயகத்தை மிதித்து நசுக்கினால் இறுதியில் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். அதேபோல் அரசாங்கம் இல்லாது சர்வாதிகாரமாக தொடர்ந்தும் ஆட்சியை கொண்டுசெல்ல இவர்கள் முயற்சித்தால் இந்த ஆட்சி முடிவுக்கு வரும் முன்னரே ஜனநாயகப் புரட்சியொன்றினை சந்திக்கவேண்டிய நிலைமையும் உருவாகும்  எனக் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.