ஐ.தே.க., பொ.ஜ.பெ.வுடன் இணையேன்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

0 928

46 வரு­ட­கா­ல­மாக உறு­தி­யான கொள்­கை­க­ளுடன் தூய்­மை­யான அர­சி­யலில் ஈடு­பட்­டி­ருக்கும் நான் ஒரு­போதும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யிலோ அல்­லது தாமரை மொட்டுக் குழு­விலோ இணைந்து கொள்­ளப்­போ­வ­தில்லை எனவும் அவற்­றுடன் தொடர்­பு­களைப் பேண­வில்லை எனவும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்­துள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து சிலரை பிரித்­தெ­டுத்து ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணைக்க முயற்­சிக்­கிறார் என அவர் மீது குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலே அவர் அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்டு தனது நிலைப்­பாட்­டினை தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.

அவ­ரது அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பெறு­மதி மிக்க தூய்­மை­யான கொள்­கை­க­ளுக்கு எதி­ராக யார் செயற்­பட்­டாலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து கொள்ள முயற்­சித்­தாலும் என்னால் அவ்­வாறு முடி­யாது.

17 வரு­ட­கா­ல­மாக வீழ்ச்சி நிலைக்குச் சென்­றி­ருந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு மீண்டும் உயிர்­கொ­டுத்து கட்­டி­யெ­ழுப்பி ஆட்சி அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுத்து 25 வரு­டங்கள் ஆட்சி செய்­வ­தற்கு கட்­சியைப் பலப்­ப­டுத்­திய நான் ஒரு­போதும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை கைவிட்டுச் செல்லப் போவ­தில்லை என்­பதை உறு­தி­யாகக் கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன்.

நான் ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­டனோ அல்­லது தாமரை மொட்டு குழு­வு­டனோ இணைந்­து­கொள்­ளப்­போ­வ­தில்லை என்­பதை தெளி­வாகத் தெரி­விக்­கின்றேன்.46 வரு­ட­கா­ல­மாக கொள்­கை­க­ளுடன் கூடிய தூய்­மை­யான அர­சி­யலில் ஈடு­பட்டு வரும் நான் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பெறு­மதி மிக்க கொள்­கை­க­ளுக்கு எதி­ரான தாமரை மொட்டு அல்­லது வேறு குழு­வி­ன­ருடன் இணைந்து கொள்­ளப்­போ­வ­தில்லை. வேறு எவ­ருக்கும் இணைந்து கொள்­ள­மு­டியும் என்­றாலும் அது என்னால் முடி­யாது.

அர­சி­யலில் சுய­நலன் கருதி அடிக்­கடி பல்­வேறு கட்­சி­களை நோக்கிப் பய­ணித்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் என்னை இக்­கட்­சி­யி­லி­ருந்தும் விரட்­டி­ய­டிப்­ப­தற்கு அல்­லது நீக்­கி­வி­டு­வ­தற்கு திட்­ட­மிட்டு செயற்­பட்டு வரு­வது இதன் மூலம் நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.

2005 ஆம் ஆண்டின் பின்பு இந்­நாடு அன்­றைய ஆட்­சி­யா­ளர்­களால் அழிவுக்குள்­ளாக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த நாட்டை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு பல­வா­றான எதிர்­பார்ப்­பு­க­ளுடன் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி அனை­வரும் ஒன்­றி­ணைந்து தீர்­மா­ன­மொன்­றினை எடுத்து அதி­கா­ரத்தை கைய­ளித்­தார்கள்.

இதனை உண­ர­மு­டி­யாத நாட்டின் தலைவர் மக்­களின் கன­வு­களை அழி­வுக்­குட்­ப­டுத்­தி­விட்டார்.

இன்று நாட்டின் ஸ்திரத்­தன்மை கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஏனைய பிர­தான கட்­சியும் பல பிரி­வு­க­ளாக பிள­வு­பட்­டுள்­ளன. இவ்­வா­றான நிலை­யினால் நாடு என்­று­மில்­லாத அசா­தா­ரண நிலையை எதிர்­நோக்­கி­யுள்­ளது.

நாட்டை இந்­நி­லை­யி­லி­ருந்து மீட்­ப­தற்கு கட்சி வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் நாட்­டினை ஆத­ரிக்கும் அன்பு செலுத்தும் ஊழல்­களை எதிர்க்கும் அனைத்து அமைப்­பு­களும் குழுக்­களும் ஒன்­று­பட வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நலனுக்கு செயற்படுவதற்கு கட்சிக்குள் எனது நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும் கட்சியைப் பாதுகாப்பதற்கு நான் என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். நாட்டுக்காக தெளிவான வேலைத்திட்டங்களுடன் கூடிய பலமான தலைமைத்துவத்துடன் முன்னிற்கும் தூய்மையான அணிக்கு நான் எனது ஆதரவினை வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.