கபீர் ஹாசிம் ஜனாதிபதியின் கருத்தை தவறாக புரிந்துள்ளார்

அரசாங்க பேச்சாளர் மஹிந்த சமரசிங்க

0 683

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தவி­சாளர் கபீர்­ஹாசிம், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­தேச ஊட­க­வியலாளர்களு­ட­னான சந்­திப்­பின்­போது தெரி­வித்த கருத்­துக்­களை தவ­றாகப் புரிந்து கொண்டே ஊடக அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தான் வாழ்நாள் முழு­வதும் பத­வியில் இருக்­கப்­போ­வ­தாக கருத்­துப்­பட எதுவும் தெரி­விக்­க­வில்லை என துறை­மு­கங்கள் அபி­வி­ருத்தி மற்றும் கப்­பற்­துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

நேற்று ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மைக்­கா­ரி­யா­லய கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது தெரி­வித்த கருத்­துக்கள் தொடர்பில் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியின் தவி­சாளர் கபீர் ஹாசிமும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாகல ரத்­நா­யக்­கவும் அறிக்­கை­களை வெளி­யிட்­டுள்­ளனர். ஜனா­தி­பதி கடந்த 3 ½ வருட காலத்தில் இடம்­பெற்ற ஊழல்கள் தொடர்பில் விளக்­க­ம­ளித்­துள்ளார்.

மத்­தி­ய­வங்கி பிணை­முறி ஊழல், ஹில்டன் ஹோட்­டலை தனியார் மயப்­ப­டுத்தும் கொடுக்கல், வாங்­கல்கள் பற்­றியும் ஜனா­தி­பதி ஊடக மாநாட்டில் கருத்து வெளி­யிட்­டுள்ளார். அவ­ரையும் கோதா­பய ராஜ­ப­க் ஷ­வையும் கொலை செய்­வ­தற்­கான சதி­மு­யற்சி பற்­றி­ய­தையும் குறிப்­பிட்­டுள்ளார்.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தவி­சாளர் கபீர் ஹாசிமின் அறிக்­கையில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சாங்கம் என்று ஜனா­தி­பதி கூறி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார். ஜனா­தி­ப­தியும் இதற்குப் பொறுப்புக் கூற­வேண்டும் எனத் தெரி­வித்­துள்ளார்.

தனது வாழ்­நாளில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ரா­கு­வதை அனு­ம­திக்க மாட்டேன் என ஜனா­தி­பதி ஊடக மாநாட்டில் தெரி­வித்­துள்­ள­தா­கவும், கபீர் ஹாசிமின் அறிக்கை குறிப்­பி­டு­கி­றது. ஜனா­தி­ப­திக்கு வாழ்நாள் முழு­வதும் பத­வியில் இருக்க முடி­யா­தல்­லவா?

ஜனா­தி­பதி தனது உரையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சாங்கம் என்று குறிப்­பி­ட­வில்லை, ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக இருந்த காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற ஊழல்கள் என்றே கூறி­யுள்ளார். அர­சாங்­கத்­துக்குள் இடம்­பெற்ற ஊழல்கள் பற்றி விசா­ரணை செய்­வ­தற்கு ஆணைக்­குழு நிய­மிக்க வேண்டும் என்றே ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். அன்றி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சாங்கம் என்று கூற­வில்லை.

மத்­தி­ய­வங்கி முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமே இருந்­தது. அவரே விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்­ச­ராக இருந்தார். ஆணைக்­குழு நிய­மிக்­கப்­ப­டு­வதை ஆத­ரிப்­ப­தாக கபீர் ஹாசிம் தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி அவ­ரது ஆயுள்­கா­லத்­துக்கும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. கபீர் ஹாசிம் ஜனா­தி­ப­தியின் உரையை தவ­றாக புரிந்து கொண்­டுள்ளார். நாம் ஏதா­வது கருத்து வெளி­யி­டும்­போது பொது­வாக இவ்­வாறு கூறு­வ­துண்டு.

சாகல ரத்­நா­யக்­கவும் அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்ளார். நிஷாந்த சில்­வாவின் இட­மாற்­றம்­தொ­டர்பில் அவர் கருத்து வெளி­யிட்­டுள்ளார். நிஷாந்த சில்­வாவை இடம் மாற்றும் படி ஜனா­தி­பதி பொலிஸ்மா அதி­ப­ருக்கு உத்­த­ர­வி­ட­வில்லை. பொலிஸ்மா அதிபர் தான் நினைத்­த­படி இட­மாற்ற உத்­த­ர­வினை ஜனா­தி­ப­தியே வழங்­கினார் என பாது­காப்பு செய­லா­ள­ருக்கு எழு­தி­யுள்­ளமை தவ­றா­ன­தாகும். பாது­காப்பு செய­லாளர் இது தொடர்பில் பொலிஸ்மா அதி­பரை விசா­ரித்து எச்­ச­ரித்­துள்ளார்.

லசந்த விக்­கி­ர­ம­துங்க கொலை தொடர்­பான விசா­ர­ணை­களை ஜனா­தி­பதி முடக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கிறார் என்று தற்­போது பிர­சாரம் செய்­யப்­ப­டு­கி­றது.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தவி­சாளர் ஊட­கங்­களின் தலை­வர்­க­ளுக்கு கடி­த­மொன்­றினை அனுப்­பி­யுள்ளார். ஊட­கங்­க­ளுக்கு அழுத்­தங்­களை பிர­யோ­கிப்­ப­தற்கு ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யினால் முடி­யாது.

பிர­தமர் நிய­மனம் மற்றும் அமைச்­சர்கள் நிய­மனம், அவர்­க­ளுக்குப் பொறுப்­பான விட­யங்கள் வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இந்த அறி­வித்­தலை உயர்­நீ­தி­மன்­றத்­திலே சவாலுக்குட்படுத்த முடியும். ஊடகங்களுக்கு கபீர் ஹாசிமினால் அச்சுறுத்தல் விடுக்க முடியாது. செய்திகளிலும், கட்டுரைகளிலும் எம்மை அமைச்சர்களாகக் குறிப்பிடவேண்டாம். சட்டரீதியான அரசாங்கம் ஒன்று பதவியில் இல்லை எனவும், கபீர் ஹாசிம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு செய்திகள் வெளியிட்டால் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதாவும் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்க முடியாது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.