பிரதமர் பதவி வகிப்பதை தடுக்கக் கோரும் மஹிந்தவுக்கு எதிரான மனு வெள்ளியன்று விசாரணை

மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது

0 750

 

  • எம்.எப்.எம்.பஸீர்

புதி­தாக நிய­மிக்­கப்­பட்ட பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அமைச்­சர்கள்  அந்தப் பத­வி­களை வகிக்க முடி­யா­தென அறி­விக்கும் நீதிப் பேரா­ணை­யொன்­றினை விடுக்­கு­மாறு கோரி மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட ‘கோ வொறண்டோ’ நீதிப் பேராணை மனு­மீது பூர்­வாங்க  விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க  மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் நேற்று திகதி குறித்­தது.

அதன்­படி எதிர்­வரும் 30 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மையும் டிசம்பர் 3 ஆம் திகதி திங்­க­ளன்றும் இந்த ‘கோ வொறண்டோ’ நீதிப் பேராணை மனு மீது விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தாக மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலமை நீதி­பதி ப்ரீத்தி பத்மன் சூர­சேன நேற்று அறி­வித்தார்.

பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் ஐக்­கிய தேசிய முன்­னணி, மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட 122 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சார்பில் தாக்கல் செய்­யப்­பட்ட சீ.ஏ. / ஏ.பி./368/18 எனும் ‘கோ வொறண்டோ’ மனு  நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது.

பிர­தமர்  மஹிந்த ராஜபக் ஷ, அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள  அமைச்­சர்கள், இரா­ஜாங்க மற்றும் பிரதி அமைச்­சர்கள்  மற்றும் சட்­டமா அதிபர் என 49 பேர் மனுவின் பொறுப்புக் கூறத்­தக்க தரப்­பாக அம்­ம­னுவில் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தனர்.

பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவ­ரது அமைச்­ச­ரவை சட்­ட­வி­ரோ­த­மாக அதி­கா­ரத்தில் நிலை­கொண்­டுள்­ள­தா­கவும், அவர்கள் அப்­ப­த­வி­களில் தொடர்ந்து இருக்க முடி­யா­தென்ற கட்­ட­ளையைப் பிறப்­பிக்­கு­மாறு குறித்த மனு­வூ­டாக மனு­தா­ரர்கள் மேன் முறை­யீட்டை கோரி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் நேற்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் மனு­தா­ரர்கள் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளான கனக ஈஸ்­வரன், எம்.ஏ. சுமந்­திரன், ஜே.சி. வெலி­அ­முன சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­னாண்டோ உள்­ளிட்ட விசேட சட்­டத்­த­ர­ணிகள் குழாம் ஆஜ­ரா­கி­யி­ருந்­தது.

பொறுப்புக் கூறத்­தக்க தரப்பின் சிலர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளான காமினி மாரப்­பன, அலி சப்ரி, சவேந்ர பெர்­னாண்டோ, கனிஷ்க விதா­ரண உள்­ளிட்டோர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ப்ரீத்தி பத்மன் சூர­சேன மற்றும் அர்­ஜுன ஒபே­சே­கர ஆகிய நீதி­ப­திகள் முன்­னி­லை­யி­லேயே மனு மீதான ஆய்­வுகள் இடம்­பெற்­றன.

இதன்­போது நேற்று உட­ன­டி­யா­கவே மனு­வினை விசா­ர­ணைக்கு எடுக்க மனு­தா­ரர்கள் சார்பில் முயற்­சிக்­கப்ப்ட்ட போதும், பொறுப்புக் கூறத்­தக்க தரப்­பினர் தமக்கு மனு குறித்த அறி­வித்­தல்கள் பூர­ண­மாகக் கிடைக்கப் பெற­வில்­லை­யென   நீதி­மன்றில் தெரி­வித்­தனர்.

இந்­நி­லையில் பொறுப்புக் கூறத்­தக்க தரப்­புக்கு உரிய முறையில் அறி­வித்­தல்­களை வழங்கி அவர்­களை தெளி­வு­ப­டுத்­து­மாறு முறைப்­பாட்­டாளர் தரப்­புக்கு உத்­த­ர­விட்ட நீதி­ப­திகள், அதன் பின்னர்  மனு மீது பூர்­வாங்க விசா­ர­ணை­களை எதிர்­வரும் 30 ஆம் திக­தியும் எதிர்­வரும் டிசம்பர் 3 ஆம் திக­தியும் விசா­ரிப்­ப­தாகத் திக­தி­யிட்­டனர்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிரி­சேன கடந்த ஒக்­டோபர் 26 ஆம் திகதி பிர­த­ம­ராக நிய­மித்த மஹிந்த ராஜபக் ஷவுக்கு பெரும்­பான்மை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வில்லை எனவும் அது­கு­றித்து சபா­நா­ய­கரும் உறுதி செய்­துள்­ள­தாக பார­ளு­மன்ற ஹன்சார்ட் அறிக்­கையின் பிர­தியும் மனு­வுடன் இணைக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமை­வா­கவும் அர­சி­ய­ல­மைப்பின் 48(2) ஆம் உறுப்­பு­ரைக்கு அமை­யவும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு பிர­தமர் பத­வியை வகிக்க சட்ட ரீதி­யி­லான உரித்­தில்லை எனவும், அதே நிலைப்­பாடு அவ­ரது அமைச்­ச­ரவை மற்றும் இரா­ஜாங்க அமைச்­சர்கள், பிரதி அமைச்­சர்­க­ளுக்கும் பொருந்­து­மெ­னவும் மனு­தா­ரர்கள் தமது ‘கோ வொறொண்டோ’ நீதிப் பேராணை மனு­வூ­டாக சுட்டிக் காட்டியுள்ளனர். அதனால் மஹிந்த ராஜபக் ஷ பிரதமர் பதவியில் தொடர முடியாதென நீதிப் பேராணையை பிறப்பிக்குமாறும் அவரது அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் தொடர்பிலும் அவ்வாறானதொரு ஆணையைப் பிறப்பிக்குமாரும் மனுதாரர்கள் தமது மனுவூடாக மேன் முறையீட்டு நீதிமன்றில் விண்ணப்பம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.