26 இல் இடைக்­கால வரவு செலவு திட்டம்

0 673

ஐக்­கிய தேசிய முன்­னணி எதிர்­வரும் 26 ஆம் திகதி இந்த ஆண்­டுக்­கான இடைக்­கால வரவு செல­வுத்­திட்­டத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தோடு  2019 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்டம் ஜன­வரி மாதத்தின் முதல் வாரத்தில் பாரா­ளு­மன்­றத்­துக்கு கைய­ளிக்­க­வுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எரான் விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்தார்.

அல­ரி­மா­ளி­கையில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

எதிர்­வரும் ஜன­வரி மாதத்­துக்குப் பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் நிதி ஒதுக்­கீ­டுக்­கான அனு­மதி கிடைக்­கப்­பெ­றா­விட்டால் நிதி­யினை செலவு செய்­யவோ நிர்­வ­கிக்­கவோ முடி­யாது. ஆகையால் சுகா­தாரம் மற்றும் கல்வி போன்ற சேவைப்­பி­ரி­வு­க­ளுக்கு அது பாரிய பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுக்கும். அரச அதி­கா­ரி­களின் கொடுப்­ப­ன­வு­க­ளிலும் பிரச்­சினை ஏற்­படும். ஆகவே எதிர்­வரும் 48 மணித்­தி­யா­லங்­களில் அமைச்­ச­ர­வையை தெரி­வு­செய்­த­வுடன் இடைக்­கால வரவு செல­வுத்­திட்­டத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்போம்.

எதிர்­வரும் 26 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கூடும்­போது ஏனைய கட்சித் தலை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி இந்த வரவு செல­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­படும். இதே­வேளை இவ்­வ­ருடம் முடி­வ­டை­வ­தற்குள் இடைக்­கால வரவு செல­வுத்­திட்டம் நடை­மு­றைக்கும் வரும் வகையில் 2 நாள் அல்­லது 3 நாட்­களில் விவா­தங்­களை மேற்­கொள்­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த இடைக்­கால வரவு செல­வுத்­திட்டம் டிசம்பர் நிறை­வுக்கு வரு­முன்னர் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டால் விரைவில் ஜன­வரி மாதத்தின் ஆரம்ப செயற்­பா­டு­க­ளுக்கு எவ்­வித பிரச்­சி­னையும் ஏற்­படப் போவ­தில்லை. .அதே­போன்று அர­சாங்­கத்தால் மக்­க­ளுக்கு பெற்றுக் கொடுக்­க­வேண்­டிய அனைத்து கொடுப்­ப­ன­வு­க­ளையும் ஜன­வ­ரி­முதல் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

அதன் பின்னர் எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதல் வாரத்தில் 2019 ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்டம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும். பெப்­ர­வரி மாதம் அரை­ப­கு­தியை அடையும் போது வரவு செல­வுத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தக் கூடி­ய­தா­கவும் அமையும். ஜன­வரி மாதம் முதல் வாரத்தில் வரவு செல­வுத்­திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்டால், நிலை­யியல் கட்­ட­ளையின் பிர­காரம் வரவு செலவு திட்டம் மீதான விவாதங்களின் பின்னர் இரண்டாம் முறை வாசிப்புக்காக 7 நாட்கள் ஒதுக்கப்படும். அதன்பின்னர் 19 நாள் குழு கலந்துரையாடல்கள் இடம்பெறும். மொத்தமாக 25 நாள் கலந்தரையாடல்களின் பின்னர் பெப்ரவரி இடைப்பகுதியாகும் போது வரவு செலவுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.